பறவைகள் பலவிதம், சிறகின் ஓசை

மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள். ஏனெனில், அப்போது வெயில் மிகக் கடுமையாக இருக்கும். பருவகால மாற்றத்தைப் பறவைகள் நமக்கு உணர்த்துகின்றன. அந்தக் காலத்தில் பறவைகள் இடம் மாறுவதனை வைத்து, 'இன்றைக்கு மழைவரும் போலிருக்கே' என்று, நம் முன்னோர்கள் கூறிவிடுவார்கள்.

மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள். சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள். மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன. பறவைகள் போகாத நாடுகள் இல்லை: மலைகள் இல்லை; நீர்நிலைகள் இல்லை: பறவைகளோடு கொஞ்சம் பறந்து போகலாமா!

பாடத்தலைப்புகள்(toc)

பருவநிலை

வெயில் சுட்டெரிக்கும் காலத்தைக் கோடைக்காலம் என்கிறோம். 

விடாமல் மழை பெய்தால், மழைக்காலம் என்கிறோம். 

மார்கழி மாதம் பனிபெய்யும். அதனைப் பனிக்காலம் என்கிறோம். 

பருவநிலை என்றால் என்ன?

வெயிலும் மழையும் பனியும் மாறிமாறி வருவதனைப் பருவநிலை மாற்றம் என்கிறோம்.

பறவைகள்

மனிதர்கள் வெளியூர்களுக்குச் சென்று மீண்டும் தம் சொந்த ஊருக்குத் திரும்புவதை அறிவோம். அதைப் போலவே பறவைகளும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

பறவைகள் ஏன் நாடுவிட்டு நாடு பறந்து வருகின்றன? 

பருவநிலை மாறும்போது பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்கின்றன. 

பறவைகள் புகலிடம்

உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்தான் பறவைகள் புகலிடம்.

வலசைபோதல்

உலகத்தின் சில பகுதிகளில் பனி உறையும் காலம் உண்டு. பனி கூடினால் நாம் போர்வை அல்லது கம்பளியால் போர்த்திக் கொண்டு படுத்துக்கொள்கிறோம். ஆனால், பறவைகளுக்குப் போர்வை கிடையாதே. ஆகவே, அவை பனி கூடியதும் அந்த இடத்தைவிட்டுப் பறந்து வேறு இடத்துக்குச் செல்கின்றன.

சிறகின் ஓசை 

பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன: குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர். 

நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.(alert-passed)

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. 

நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. 

பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.(alert-success)

சில இடங்களில் வெயில் கூடுதலாக இருக்கும். அப்போதும், அந்த இடத்தைவிட்டுப் பறந்து செல்ல வேண்டியதுதான். இப்படிப் பறந்து செல்வதனை, 'வலசைபோதல்' என்பார்கள்.

பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்றவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல் 
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

கப்பல் பறவை

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆர்டிக் ஆலா

உலகிலேயே நெடுந்தொலைவு 22.000கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் ஆர்டிக் ஆலா.

இலக்கியங்களில் வலசை போதல் 

தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. 

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் 

நாராய், நாராய், செங்கால் நாராய் - சத்திமுத்தப்புலவர்(code-box)

என்னும் பாடலை எழுதியுள்ளார். 

அப்பாடலில் உள்ள,

தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் - சத்திமுத்தப்புலவர்(code-box)

என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

சிட்டுக் குருவி

தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? உங்களுக்குத் தெரியுமா? சிட்டுக் குருவிதான் அது.

உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். 

  • ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். 
  • பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். 

  • கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 
  • பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.
  • பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன. 

உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச்- 20(alert-warning)

தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். 

சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.

அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் "சிட்டாய்ப் பறந்து விட்டான்" என்று கூறுகிறோம். 

சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள்

மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவி குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.

நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை. 

தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்படுகின்றன. 

எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.

உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.

பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை

ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும். 

நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.

தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காக்கைகுருவி எங்கள் சாதி - பாரதியார்(code-box)

என்று பாரதியார் பாடினார். சமைப்பதற்குத் தம் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.

இந்தியாவின் பறவை மனிதர்

இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். 

அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.

மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! 

பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! 

- டாக்டர் சலீம் அலி(code-box)

என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி. இவ்வுண்மையை நாமும் உணர்ந்து இயற்கையைப் போற்றிப் பறவைகளைக் காப்போம்.

பறவைகளின் சிறப்புகள் 

பறவைகள் ஒரு நாட்டில் பழங்களைத் தின்றுவிட்டுப் பறந்துசென்று இன்னொரு நாட்டில் எச்சமிடுகின்றன. அந்த எச்சம் மண்ணில் விழும்போது, அப்பழத்தின் விதை அங்கு முளைத்து மரமாகி விடுகிறது. இப்படி உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளைப் பரப்பும் வேலையைப் பறவைகள் செய்கின்றன.

வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்றுவிடுகின்றன. அதன்மூலம் பறவைகள் உழவர்களுக்கு உதவுகின்றன. 

இப்படிப் பல உதவிகள் செய்யும் பறவையானது, மனிதர்களின் நல்ல நண்பன் அல்லவா ?

அப்படிப்பட்ட நண்பனைப்பற்றித் தெரிந்துகொள்வோம். 

பறவைகளின் பெயர்கள்

நமக்குத் தெரிந்த பறவைகள் எத்தனை? 

  • காகம், 
  • குருவி, 
  • கொக்கு, 
  • மயில் 

போலச் சில பெயர்களே நமக்குத் தெரிகின்றன.

ஆனால், நம் நாட்டில் மட்டும் ஏறத்தாழ ஈராயிரத்து நானூறுவகைப் பறவைகள் வாழ்கின்றன. 

சில பறவைகளின் பெயர்களை நாம் தெரிந்துகொள்வோம்!

சமவெளி மரங்களில் சில பறவைகள்

மஞ்சள்சிட்டு, 

செங்காகம்,

பனங்காடை,

சுடலைக்குயில், 

தூக்கணாங்குருவி.

நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்

கொக்கு,

தாழைக்கோழி, 

பவளக்காலி,

ஆற்று உள்ளான், 

முக்குளிப்பான், 

நாரை, 

அரிவாள் மூக்கன், 

கரண்டிவாயன், 

ஊசிவால் வாத்து.

மலைகளில் வாழும் சில பறவைகள்

இருவாச்சி, 

செந்தலைப் பூங்குருவி,

மின்சிட்டு, 

கருஞ்சின்னான், 

நீலகிரி நெட்டைக்காலி, 

பொன்முதுகு, 

மரங்கொத்தி, 

சின்னக்குறுவான், 

கொண்டை உழவாரன், 

இராசாளிப் பருந்து, 

பூமன் ஆந்தை.


பட்டாசு வெடிக்காத ஓர் ஊர் - தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் கூந்தன்குளம்

விழாக்கள் என்றதும் நமக்கெல்லாம் மகிழ்ச்சி பீறிட்டு எழும். ஏனெனில், விழாக்களின் போது, நம் வீட்டில் பட்டாசு வெடிக்கலாம். எத்தனை வகையான வண்ணங்களில் பட்டாசுகள் இப்போது வந்துவிட்டன. கம்பி மத்தாப்பில் தொடங்கி, வானவெளியில் பாய்ந்து வண்ண வண்ணப் பூக்களாய் விரியும் வெடிகள்வரை எத்தனை வியப்பூட்டும் பட்டாசுகள்.

பட்டாசு வெடிக்காத மக்கள் யாராவது உலகத்தில் இருப்பார்களா? 

இருக்கவே மாட்டார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், பட்டாசு வெடிக்காத ஓர் ஊரே இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் கூந்தன்குளம். அந்த ஊர் மக்கள் பட்டாசே வெடிப்பதில்லை. அது மட்டுமன்று. அந்த ஊரில் யார் வீட்டில் திருமணம் நடைபெற்றாலும், ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெற்றாலும், டும்டும் ஒலி எழுப்பும் மேளதாளம் இடம்பெறாது. இவ்வளவு ஏன் ? அந்த மக்கள் உரக்கப் பேசுவதுகூடக் கிடையாது.

ஏன் அப்படி?

ஏனெனில், அந்த ஊரில் உள்ள பெரிய ஏரி, பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது.


பறவைகள் எத்தனை வகைப்படும்?

பறவைகள் வகைகள் 

பறவைகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. தேனைக் குடித்து வாழும் பறவைகள்

2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்

3. பூச்சியைத் தின்று வாழும் பறவைகள்

4. வேட்டையாடி உண்ணும் பறவைகள் 

5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்


பறவைகளுள் சில, அழகாகக் கூடுகட்டி வாழ்பவை. நம் ஊர்களில் தூக்கணாங்குருவியின் கூடுகளைப் பார்க்கலாம். அடடா, எத்தனை அழகுடனும் பாதுகாப்பாகவும் தூக்கணாங்குருவி கூடு கட்டுகிறது!

பூநாரை


பூநாரை நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும். கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மை உடையது. (alert-success)

பறவைகளுக்கு நாம் எப்படியெல்லாம் உதவலாம்?

கூந்தன்குளம் சிற்றூர் மக்கள் பட்டாசு வெடிக்காமலும் மேளம் அடிக்காமலும் இருப்பது பறவைகள் அச்சமற்று இருக்கவே. அதுபோல, பல உதவிகளை அவற்றுக்கு நாமும் செய்யலாம்.

கூந்தன்குளம் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் பறவைகள் புகலிடம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது.

உங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள புகலிடத்துக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். வெளிநாடுகளிலிருந்து அங்கு வரும் பறவைகளைக் கண்டு மகிழுங்கள். நாள்தோறும் விடியற்காலையிலும் மாலையிலும் பறவைகள் எழுப்பும் ஒலிகளைக் கூர்ந்து கேட்போம். பறவைகள்போல ஒலிஎழுப்பி அவற்றோடு பேசுவோம்.

நினைவு கூர்க 

இப்படிப்பட்ட நம் பறவை நண்பர்களைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா ? அவை நிம்மதியாக வாழ உதவியும் செய்தல் வேண்டும். 

பறவைகளின் வாழ்விடங்களான மரங்களைப் பாதுகாப்பதே அவற்றுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் (பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு) - List of Bird Sanctuaries in Tamilnadu

1. வேடந்தாங்கல்

2.கரிக்கிரி (காஞ்சிபுரம் மாவட்டம்)

3. கஞ்சிரங்குளம்

4. சித்திரங்குடி

5. மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)

6. பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)

7. உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)

8. வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

9. கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)

10. வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)

11.வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)

12. கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)

13. கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்) 

14. விராலி மலை (திருச்சி)

15. தேரூர்  (கன்னியாகுமரி)

16. கழுவேலி ஈரநிலம் (விழுப்புரம் மாவட்டம்)

17. நஞ்சராயன் ஏரி (திருப்பூர்)


6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise பறவைகள் பலவிதம் மதிப்பீடு 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பறவைகள் புகலிடம் கூந்தன்குளம் என்னும் சிற்றூரில் உள்ளது.

2. உலகம் முழுவதிலும் இருந்து பலநாட்டுப் பறவைகள் வந்து தங்கியிருக்கும் இடத்துக்குப் பறவைகள் புகலிடம் பெயர்.

3. வெயில் சுட்டெரிக்கும் காலத்தைக் கோடைக்காலம் என்கிறோம்.

4. மனிதர்களின் நல்ல நண்பன்  பறவைகள் ஆகும். 

5. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எண்ணிக்கை 17

கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக,

1 பழவேற்காடு என்னும் சிற்றூர் அமைந்துள்ள மாவட்டம் ...............

அ) காஞ்சிபுரம் ஆ) திருவள்ளூர் இ) திருநெல்வேலி


2. சமவெளி மரங்களில் வாழும் பறவை

அ) ஊசிவால் வாத்து

ஆ) பூமன் ஆந்தை

இ) மஞ்சள் சிட்டு


3. நீர்நிலைகளில் வாழும் பறவை.

அ) நாரை

ஆ) தூக்கணாங்குருவி

இ) இருவாச்சி


குருவினாக்கள்

1. மின்சிட்டு எப்பகுதியில் வாழும்?

மின்சிட்டு மலை பகுதியில் வாழும்.


2.'வலசை போதல்' என்றால் என்ன?

பருவநிலை மாற்றம் காரணமாக பறவைகள் இடத்தைவிட்டுப் பறந்து வேறு இடத்துக்குச் செல்கின்றன. இப்படிப் பறந்து செல்வதனை, 'வலசைபோதல்' என்பார்கள்.


3. பருவநிலை மாற்றம் என்றால் என்ன? 

வெயிலும் மழையும் பனியும் மாறிமாறி வருவதனைப் பருவநிலை மாற்றம் என்கிறோம்.


4. பறவை, மனிதர்களின் நல்ல நண்பன் எவ்வாறு ?

வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்றுவிடுகின்றன. அதன்மூலம் பறவைகள் உழவர்களுக்கு உதவுகின்றன. 

பறவைகள் ஒரு நாட்டில் பழங்களைத் தின்றுவிட்டுப் பறந்துசென்று இன்னொரு நாட்டில் எச்சமிடுகின்றன. அந்த எச்சம் மண்ணில் விழும்போது, அப்பழத்தின் விதை அங்கு முளைத்து மரமாகி விடுகிறது. இப்படி உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளைப் பரப்பும் வேலையைப் பறவைகள் செய்கின்றன.

இப்படிப் பல உதவிகள் செய்யும் பறவையானது, மனிதர்களின் நல்ல நண்பன்.


சிறுவினாக்கள் 

1. பறவைகளின் புகலிடமான கூந்தன்குளம் பற்றி எழுதுக.

பட்டாசு வெடிக்காத ஓர் ஊரே இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் கூந்தன்குளம். அந்த ஊர் மக்கள் பட்டாசே வெடிப்பதில்லை. அது மட்டுமன்று. அந்த ஊரில் யார் வீட்டில் திருமணம் நடைபெற்றாலும், ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெற்றாலும், டும்டும் ஒலி எழுப்பும் மேளதாளம் இடம்பெறாது. இவ்வளவு ஏன் ? அந்த மக்கள் உரக்கப் பேசுவதுகூடக் கிடையாது.

ஏன் அப்படி?

ஏனெனில், அந்த ஊரில் உள்ள பெரிய ஏரி, பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது.


2. உனக்குத் தெரிந்த பறவைகள் புகலிடம் நான்கன் பெயர்களை எழுதுக.

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் சில 

1. வேடந்தாங்கல்

2.கரிக்கிரி (காஞ்சிபுரம் மாவட்டம்)

3. கஞ்சிரங்குளம்

4. சித்திரங்குடி


3. பறவைகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ? அவை யாவை ?

பறவைகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. தேனைக் குடித்து வாழும் பறவைகள்

2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்

3. பூச்சியைத் தின்று வாழும் பறவைகள்

4. வேட்டையாடி உண்ணும் பறவைகள் 

5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்


புதிய சமச்சீர் பாடம் 6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise சிறகின் ஓசை மதிப்பீடு 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) தட்பம் + வெப்பம்

ஆ) தட்ப + வெப்பம்

இ) தட் + வெப்பம்

ஈ) தட்பு + வெப்பம்


2. 'வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வேதி + யுரங்கள்

ஆ) வேதி + உரங்கள்

இ) வேத் + உரங்கள்

ஈ) வேதியு + ரங்கள் 


3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தரையிறங்கும்

ஆ) தரை இறங்கும்

இ) தரையுறங்கும்

ஈ) தரையறங்கும்


4. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிதடம் 

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்


5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி.

அ) துருவப்பகுதி 

ஆ) இமயமலை

இ) இந்தியா

ஈ) தமிழ்நாடு


கோடிட்ட இடங்களை நிரப்புக.

I. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா

2.பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் சத்திமுத்தப்புலவர்

3.பறவைகள் இடம்பெயர்வதற்கு வலசைபோதல் என்று பெயர்.

4. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலிம் அலி 

5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று காலநிலை

சொற்றொடர் அமைத்து எழுதுக.

1. வெளிநாடு

பறவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று தம் சொந்த நாட்டிற்குத் திரும்புகின்றன.

2. வாழ்நாள்

சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.

3. செயற்கை

தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.

1. மரங்களை வளர்த்து  செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)

2.தமிழகத்தில் வலசைப் பறவைகளின் வருகை மிகுந்துள்ளது. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

(குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)


பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. 'புள்' என்பதன் வேறு பெயர் - பறவை 

2. பறவைகள் இடம்பெயர்தல் - வலசைபோதல்

3. சரணாலயம் என்பதன் வேறு பெயர் - புகலிடம்


குறுவினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இக்காரணங்களுக்காக பறவைகள் இடம் பெயர்கின்றன. 

2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல் 
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

சிறுவினா

1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக. 

சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு

உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். 

  • ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். 
  • பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். 

  • கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 
  • பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.
  • பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை 

செங்கால் நாரை 

2. உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்

பறவைகள் புகலிடம்

3. 'புள்' என்பதன் வேறு பெயர் 

பறவை 

4. பறவைகள் இடம்பெயர்தல் 

 வலசைபோதல்

5. சரணாலயம் என்பதன் வேறு பெயர் 

புகலிடம்

6. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

தலையில் சிறகு வளர்தல் 

இறகுகளின் நிறம் மாறுதல்

உடலில் கற்றையாக முடி வளர்தல்

அனைத்தும்

7. சிட்டுக்குருவி குறித்து சரியான கருத்து  

கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்

பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.

பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்

அனைத்தும் 

8. இக்காரணங்களுக்காக பறவைகள் இடம் பெயர்கின்றன

உணவு

இருப்பிடம்

தட்பவெப்பநிலை மாற்றம்

இனப்பெருக்கம்

அனைத்தும் 

9. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை 

ஆர்டிக் ஆலா

10..பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர்

 சத்திமுத்தப்புலவர்

11. இந்தியாவின் பறவை மனிதர்

 டாக்டர் சலிம் அலி 

12. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று

 காலநிலை

13. சிட்டுக்குருவியின் வாழ்நாள் 

பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்

14. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி.

அ) துருவப்பகுதி 

ஆ) இமயமலை

இ) இந்தியா

ஈ) தமிழ்நாடு

15. பழவேற்காடு என்னும் சிற்றூர் அமைந்துள்ள மாவட்டம் ...............

அ) காஞ்சிபுரம் 

ஆ) திருவள்ளூர் 

இ) திருநெல்வேலி

16. சமவெளி மரங்களில் வாழும் பறவை

அ) ஊசிவால் வாத்து

ஆ) பூமன் ஆந்தை

இ) மஞ்சள் சிட்டு

17. நீர்நிலைகளில் வாழும் பறவை.

அ) நாரை

ஆ) தூக்கணாங்குருவி

இ) இருவாச்சி

18. மின்சிட்டு எப்பகுதியில் வாழும்?

 மலை பகுதி

குளிர் பகுதி 

துருவப்பகுதி 

இமயமலை

19. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பறவைகள் புகலிடம் .... என்னும் சிற்றூரில் உள்ளது.

கூந்தன்குளம்

20. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எண்ணிக்கை

 17

21. பொருந்தாத இணை கண்டறி

கரைவெட்டி - தஞ்சாவூர் மாவட்டம் (சரி-பெரம்பலூர்)

வேட்டங்குடி - சிவகங்கை மாவட்டம்

வெள்ளோடு - ஈரோடு மாவட்டம்

கூந்தன்குளம் - திருநெல்வேலி

22. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

விராலி மலை - திருச்சி

தேரூர் - கன்னியாகுமரி

கழுவேலி ஈரநிலம் - விழுப்புரம் மாவட்டம்

நஞ்சராயன் ஏரி - திருப்பூர்

23. நிலத்திலும், அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும், கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மை உடைய பறவை

பூநாரை

24. "மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! " என்றவர் 

டாக்டர் சலீம் அலி

25. சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் பொருந்தாதது 

மஞ்சள்சிட்டு

செங்காகம்

பனங்காடை

பவளக்காலி (நீர்நிலைகளில் வாழும் பறவை)

26. நீர்நிலைகளில் வாழும் பறவைகளில் பொருந்தாதது 

தாழைக்கோழி

அரிவாள் மூக்கன்

கரண்டிவாயன்

இருவாச்சி (மலைகளில் வாழும் பறவை)

27. மலைகளில் வாழும் பறவைகளில் பொருந்தாதது 

செந்தலைப் பூங்குருவி

மின்சிட்டு

கருஞ்சின்னான்

பனங்காடை (சமவெளி மரங்களில் வாழும் பறவை)

28. நம் நாட்டில் மட்டும் ஏறத்தாழ .......... பறவைகள் வாழ்கின்றன. 

ஈராயிரத்து நானூறு வகை

29. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fall of sparrow) என்று பெயரிட்டவர்

டாக்டர் சலீம் அலி

30. "காக்கைகுருவி எங்கள் சாதி" என்று பாடியவர்

பாரதியார்

31. உலகச் சிட்டுக்குருவிகள் நாள்

 மார்ச் 20

32. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்று பறவை குறித்து பாடியவர்

சத்திமுத்தப்புலவர்

33. ........ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சத்திமுத்தப்புலவர் 

ஏறத்தாழ 1500 

34. .......வில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐரோப்பா

35. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை 

கப்பல் பறவை (Frigate bird)

36. இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

கப்பல் பறவை (Frigate bird)

37. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் சலீம் அலி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் 

சிட்டுக்குருவியின் வீழ்ச்சி(The fall of sparrow) 

38.  "சிட்டாய்ப் பறந்து விட்டான்" என்று யாரை கூறுகிறோம்

 விரைவாகச் செல்பவனை

39. பறவை பற்றிய படிப்பு 

ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY)

40. இவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன

நிலவு

விண்மீன்

புவிஈர்ப்புப் புலம்

அனைத்தும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad