பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
நாலடியார் பற்றிய குறிப்புகள்
நாலடியார் ஆசிரியர் குறிப்பு - எழுதியவர்
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
பிரிவு
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
எத்தனை பாடல்கள்
இது நானூறு 400 வெண்பாக்களால் ஆனது.
பா வகை
வெண்பா
பாடல் அடிகள்
நான்கு அடி
சிறப்பு பெயர்கள்
- நாலடி நானூறு
- வேளாண்வேதம்
சிறப்புக்கள்
நாலடியார் பகுப்பு
நாலடியார் அதிகாரங்கள் எத்தனை
திருக்குறள் போன்றே,
- அறம்- 130,
- பொருள்-240,
- இன்பம்-30,
என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
மேற்கோள்கள் - சிறந்த தொடர்கள்
1. கல்வியழகே அழகு
2. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"
3. "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்"
4. "செல்வம் சகடக்கால் போல வரும்"
5. "கல்வி கரையில கற்பவர் நாள்சில"
நாலடியார் பாடல்கள் வரிகள்
நாலடியார் கூறும் நட்பின் சிறப்பு
நாலடியார் பாடலும் விளக்கமும் - அழியாச் செல்வம்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லைமிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வனவிச்சைமற்று அல்ல பிற.- சமண முனிவர்(code-box)
சொல்லும் பொருளும்
வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
கோட்படா -ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் -வாய்க்கும்படி கொடுத்தாலும்
விச்சை - கல்வி
வவ்வார் - கவர முடியாது
எச்சம் - செல்வம்
பாடலின் பொருள்
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
நூல் வெளி
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். அந்நூலில் இருந்த அழியாச் செல்வம் ஆகிய கல்வி பற்றிய ஒரு பாடல் விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ளஎன்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்ஆவியில் வந்து கலந்ததுவேஇன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்!- பாரதிதாசன்(code-box)
பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்வேகாது வேந்த ராலும்கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்நிறைவன்றிக் குறைவு றாதுகள்ளர்க்கோ பயமில்லை காவலுக்குமிகஎளிது கல்வி யென்னும்உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்பொருள்தேடி உழல்கின் றீரே- தனிப்பாடல் திரட்டு(code-box)
கற்பிப்போர் கண்கொடுப் போரே! - அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
‘நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
- வாணிதாசன்(code-box)
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர் - குறள் 410
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை - (குறள் 400)
கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் 2. அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
2. கல்வியைப் போல் ........... செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
3. 'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து +தீயின்
ஈ) வாய் + ஈயின்
4. 'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கேடி + இல்லை
ஆ) கே +இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) எவன்ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
குறுவினா
1. நாலடியார் நூல் குறிப்பு வரைக.
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
2. கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
கல்விச் செல்வத்தின் இயல்புகள்
- கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.
- ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
- மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது
சிறுவினா
கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகள்
- கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.
- ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
- மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
- ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.
- மற்றவை செல்வம் ஆகா.
சிந்தனை வினா
'கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?' -சிந்தித்து எழுதுக.
உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன.
இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும்; அழிந்துவிடும். நான் வெளியூர் சென்றபோது நண்பரைக் கேட்டேன். "இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே இங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்ததே, அஃது எங்கே?" என்று. "அது புயல் காற்றிலே விழுந்து விட்டது" என்று சொன்னார். அஃது அழிகிற செல்வம். "அங்கே ஒரு பெரிய கட்டடம் இருந்ததே, அஃது எங்கே?" என்று கேட்டேன். "அது மழை பெய்து இடிந்து விட்டது" என்று பதில் வந்தது. இதுவும் அழிகிற செல்வம்.
நாம் பேசும் போது, "அதோ போகிறாரே. அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு இலட்ச ரூபாய் வைத்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார்" என்று சொல்வோம். இஃது அழிகிற செல்வம். கல்வி அப்படிப்பட்டதன்று. "அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகி விட்டார்" என்று சொல்ல மாட்டோம். ஏனென்றால் கல்வி அழியாதது. அதனால்தான்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை - (குறள் 410)
என்று வள்ளுவர் கூறுகிறார்.
TNPSC previous year questions and answers
1. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என சிறப்பிக்கப்படும் நூல்கள்
A) திருக்குறள்
B) நன்னூல்
C) நாலடியார்
D) A மற்றும் C
2. பழகு தமிழ் சொல்லருமை .......
A) நாலடி நானூறில்
B) நாலிரண்டில்
C) நாலும் இரண்டும்
D) நான்கடி நானூறில்
3. "செல்வம் சகடக்கால் போல வரும்" என்று கூறும் நூல் எது?
A) திருக்குறள்
B) ஏலாதி
C) நாலடியார்
D) சிறுபஞ்சமூலம்
4. ஆலும் வேலும் பல்லுக்கு ....
A) இறுதி
B) உறுதி
C) பலம்
D) துணை
5. 'நாலடி நானூறு' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
A) திருக்குறள்
B) மூதுரை
C) முதுமொழிக்காஞ்சி
D) நாலடியார்
6. "நாலடியாருக்கு இணையான நூல்" எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
A) பழமொழி நானூறு
B) ஏலாதி
C) இன்னா நாற்பது
D) இனியவை நாற்பது
7. ......... சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
A) திருக்குறள்
B) மூதுரை
C) முதுமொழிக்காஞ்சி
D) நாலடியார்
8. 'வேளாண் வேதம்' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
A) திருக்குறள்
B) மூதுரை
C) முதுமொழிக்காஞ்சி
D) நாலடியார்
Please share your valuable comments