சிலப்பதிகாரம்

நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது. கடலும், மலையும், கதிரும், நிலவும், மழையும், பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ? நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது.

பாடத்தலைப்புகள்(toc)

சிலப்பதிகாரம் பற்றிய குறிப்பு 

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். 

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். 

சிலப்பதிகாரம் ஆசிரியர் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரம் வேறு பெயர்கள் 

இதுவே தமிழின் முதல் காப்பியம். 

இது 
  • முத்தமிழ்க் காப்பியம், 
  • குடிமக்கள் காப்பியம்
  • தமிழின் முதல் காப்பியம்

என்றெல்லாம் போற்றப்படுகிறது. 

சிலப்பதிகாரம் சிறப்புகள் 

இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இளங்கோவடிகள் பற்றிய குறிப்பு 

இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. 

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.



சிலப்பதிகாரம் பாடல்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் 

அங்கண் உலகு அளித்த லான்


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 

மேரு வலம் திரிதலான்


மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்


- இளங்கோவடிகள்(code-box)


பாடல் விளக்கம் 

வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த வெண்குடை போல அருளை வழங்கும் வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! 

கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! காவிரி நாடன் சோழனின் ஆணைச்சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும் கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!

வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும் மன்னனைப் போல முகில்வழி சுரக்கும் வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!

சொல்லும் பொருளும்

திங்கள்- நிலவு

பொற்கோட்டு- பொன்மயமான சிகரத்தில்

கொங்கு - மகரந்தம்

மேரு - இமயமலை

அலர்- மலர்தல்

நாமநீர்- அச்சம் தரும் கடல்

அளி- கருணை

திகிரி - ஆணைச்சக்கரம்

பாடலின் பொருள்

தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!

நூல் வெளி

திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.


நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 5. சிலப்பதிகாரம்  பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise சிலப்பதிகாரம் மதிப்பீடு 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கழுத்தில் சூடுவது

அ) தார்

ஆ) கணையாழி

இ) தண்டை

ஈ) மேகலை


2. கதிரவனின் மற்றொரு பெயர் 

அ) புதன்

ஆ) ஞாயிறு

இ) சந்திரன்

ஈ) செவ்வாய்


3. 'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) வெண் குடை

ஆ) வெண்மை + குடை

இ) வெம் + குடை

ஈ) வெம்மை + குடை


4. 'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) பொன் + கோட்டு

ஆ) பொற்+கோட்டு

இ) பொண்+கோட்டு

ஈ) பொற்கோ + இட்டு


5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) கொங்கு அலர்

ஆ) கொங்அலர்

இ) கொங்கலர் 

ஈ) கொங்குலர்


6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ)அவன் அளிபோல்

ஆ) அவனளிபோல்

இ) அவன்வளிபோல்

ஈ) அவனாளிபோல்


நயம் அறிக.

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக 

மேரு - மேல் 

அங்கண்- அளித்த

திகிரிபோல் - திரிதலான்

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

அலர்தார்ச் - உலகு 

அங்கண் - கொங்கு

சென்னி - போன்றுஇவ் 


குறுவினா

1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்தித் தொடங்குகிறது.

2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

  • வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. 
  • கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது.
  • மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. 
அதனால் இயற்கை போற்றத்தக்கது.

TNPSC previous year question 

1. தமிழின் முதல் காப்பியம் எனப் போற்றப்படுபவது

சிலப்பதிகாரம் 

2. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை 

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

3. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று

சிலப்பதிகாரம்

4. திங்கள் என்பதன் பொருள்

நிலவு

5. சிலப்பதிகாரம் வேறு பெயர்களுள் பொருந்தாதது 

கோவலன் காப்பியம்

முத்தமிழ்க் காப்பியம், 

குடிமக்கள் காப்பியம்

தமிழின் முதல் காப்பியம்

6. கழுத்தில் சூடுவது

அ) தார்

ஆ) கணையாழி

இ) தண்டை

ஈ) மேகலை

7. கதிரவனின் மற்றொரு பெயர் 

அ) புதன்

ஆ) ஞாயிறு

இ) சந்திரன்

ஈ) செவ்வாய்

8. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

திங்கள்- நிலவு

பொற்கோட்டு- பொன்மயமான சிகரத்தில்

கொங்கு - மகரந்தம்

மேரு - இமயமலை

9. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

அலர்- மலர்தல்

நாமநீர்- அச்சம் தரும் கடல்

அளி- கருணை

திகிரி - ஆணைச்சக்கரம்

10. "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்ற பாடல் இடம்பெற்ற நூல்

சிலப்பதிகாரம்

11. "காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்" இதில் மேரு என்பதின் பொருள்

இமயமலை

12. இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர் 

சேரர் 

13. இளங்கோவடிகள் எழுதிய தமிழின் முதல் காப்பியம்

சிலப்பதிகாரம்

14. சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ் காப்பியத்தை எழுதியவர்

இளங்கோவடிகள்

15. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளின் காலம் 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad