TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிரித்தெழுதுக என்ற பகுதி வருகிறது.
வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் (open)புணர்ச்சி (open)பகுபத உறுப்புகள் விளக்கம்(open)
பிரித்தெழுதுக பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
TNPSC previous year question
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் +நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் +நா
பகுபத உறுப்பிலக்கணம்
பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.
பகுபத உறுப்புகள் ஆறு வகைகள்
அவை,
- பகுதி,
- விகுதி,
- இடைநிலை,
- சந்தி,
- சாரியை,
- விகாரம்.
பகுபத உறுப்புகள் விளக்கம்(open)
உரைத்த - உரை +த் +த் + அ
வருக - வா(வரு) + க
- வா - பகுதி - வரு எனத் திரிந்தது விகாரம்
- க - வியங்கோள் வினைமுற்று விகுதி
பொறித்த - பொறி + த் + த் + அ
மலைந்து - மலை +த்(ந்) + த் + உ
பொழிந்த - பொழி +த்(ந்) + த் +அ
பிரித்து எழுதுக
10ம் வகுப்பு தமிழ்
- அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத;
- வன்பாற்கண் - வன்பால் + கண் - பாலை நிலத்தில்.
- தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல;
- நாய்க்கால் = நாய் + கால்
- நன்கணியர் = நன்கு + அணியர்
- நட்பென்னாம் = நட்பு + என்னாம்
- வேறில்லை = வேறு + இல்லை
- தொழிலனைத்தும் = தொழில் + அனைத்தும்
- இரண்டொழிய = இரண்டு + ஒழிய
6ம் வகுப்பு தமிழ்
1 . 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
2. ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
3. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) ஏன் என்று
ஆ) ஏனென்று
இ) என்னென்று
ஈ) ஏனன்று
4.ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) ஒளடதமாம்
ஆ) ஒளடதம் ஆம்
இ) ஒளடதாம்
ஈ) ஒளடத ஆம்
5. 'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வெண் குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
6. 'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொன் + கோட்டு
ஆ) பொற்+கோட்டு
இ) பொண்+கோட்டு
ஈ) பொற்கோ + இட்டு
7. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
8. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ)அவன் அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
9. 'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
10. 'வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
11. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரையறங்கும்
12. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
13. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொருளு+டைமை
ஆ) பொரு+ளுடைமை
இ)பொருள் +உடைமை
ஈ) பொருள்+ளுடைமை
18. 'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ) இடன் + புறம்
ஆ) இடது + புறம்
இ) இட + புறம்
ஈ) இடப் + புறம்
19. 'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
20.சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிலம்பதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஈ) சிலபதிகாரம்
21.கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
22. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) உள்ளுவதுஎல்லாம்
ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம்
ஈ) உள்ளுவதுதெல்லாம்
23. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
24. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய்+கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
25. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
26. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எட்டுத்திசை
ஆ)எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
27. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலையென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
28. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
29. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
30.'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
31. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
32. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
33. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
34. இல்லாது+இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) இல்லாது இயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஆ) இல்லா இயங்கும்
ஈ) இல்லதியங்கும்
35. 'நின்றிருந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
36. 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அவ்வு + ருவம்
ஆ) அ +உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ +வுருவம்
37. மருத்துவம்+துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
38. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) செயலிழக்க
ஆ) செயல்இழக்க
இ) செயஇழக்க
ஈ) செயலிலக்க
39. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை+ பொருள்
ஈ) கைப்பு + பொருள்
40. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம்இல்லா
ஆ) மானமில்லா
ஈ) மானம்மில்லா
இ) மானமல்லா
41. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
42.படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
43. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டு ஆறு
ஈ) காடுஆறு
44. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .
அ) அறிவுடைமை
ஆ) அறிவு உடைமை
இ) அறியுடைமை
ஈ) அறிஉடைமை
45. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
அ) இவை எட்டும்
ஆ) இவையெட்டும்
இ) இவ்வெட்டும்
ஈ) இவ்எட்டும்
46.நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன்றி+யறிதல்
ஆ) நன்றி+அறிதல்
இ) நன்று+அறிதல்
ஈ) நன்று+யறிதல்
47. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -
ஆ) பொறை+யுடைமை
அ) பொறுமை+உடைமை
இ) பொறு+யுடைமை
ஈ) பொறை + உடைமை
52. தாலாட்டு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .
தால்+ஆட்டு
53. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று
54. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) போகி+பண்டிகை
ஆ) போ+பண்டிகை
இ) போகு +பண்டிகை
ஈ) போகிப்+பண்டிகை
55. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பயனிலா
ஆ) பயன்னில்லா
இ) பயன்இலா
69. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை
ஆ) நூலா+டை
இ) நூல்+ லாடை
ஈ) நூலா+ஆடை
61.எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
62. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம்உயிர்
ஈ) தம்முஉயிர்
63.இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .
அ) இன்புற்றிருக்க
ஆ)இன்புறுறிருக்க
இ) இன்புற்றுஇருக்க
ஈ) இன்புறு இருக்க
64. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ) தானெ + என்று
ஆ) தான்+ என்று
இ) தா + னென்று
ஈ) தான் + னென்று
64. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
65. 'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாலை+யெல்லாம்
ஆ) பாலை+எல்லாம்
இ) பாலை+எலாம்
ஈ) பா+எல்லாம்
66. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
ஆ) இனியஉயிர்
அ) இன்உயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்
67.மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
இ) மலையெல்லாம்
அ) மலை எலாம்
ஆ)மலையெலாம்
ஈ) மலைஎல்லாம்
Please share your valuable comments