ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம். ஒளவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம். பாரதியார் 'புதிய ஆத்திசூடி' என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார். அகர வரிசையில் அறிவியல் அறிவோம்: அகில உலகையும் ஆய்வு செய்வோம்: அனைத்தையும் உலகின் நலத்திற்கு வழங்குவோம்!
பாடத்தலைப்புகள்(toc)
அறிவியல் ஆத்திசூடி பாடல்
அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு
இயன்றவரை புரிந்துகொள்
ஈடுபாட்டுடன் அணுகு
உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றி தரும்
என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள்
ஐயம் தெளிந்து சொல்
ஒருமித்துச் செயல்படு
ஓய்வற உழை
ஒளடதமாம் அனுபவம்
- நெல்லை சு.முத்து(code-box)
சொல்லும் பொருளும்
இயன்றவரை - முடிந்தவரை
ஒன்றுபட்டு- ஒருமித்து
ஒளடதம் - மருந்து
நூல் வெளி
நெல்லை சு.முத்து எழுதிய அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.
நெல்லை சு.முத்து ஆசிரியர் குறிப்பு
"தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - அறிவியல் ஆத்திசூடி மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உடல் நோய்க்கு தேவை
அ) ஒளடதம்
ஆ) இனிப்பு
இ) உணவு
ஈ) உடை
2. நண்பர்களுடன் ............ விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
3. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
4. ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) ஏன் என்று
ஆ) ஏனென்று
இ) என்னென்று
ஈ) ஏனன்று
6.ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) ஒளடதமாம்
ஆ) ஒளடதம் ஆம்
இ) ஒளடதாம்
ஈ) ஒளடத ஆம்
எதிர்ச்சொற்களைப் பொருத்துக. பொருத்தப்பட்டுள்ளது
1. அணுகு × விலகு
2.ஐயம் × தெளிவு
3. ஊக்கம் × சோர்வு
4. உண்மை × பொய்மை
பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.
1. சிந்தனை கொள் அறிவியல்
அறிவியல் சிந்தனை கொள்
2. சொல் தெளிந்து ஐயம்
ஐயம் தெளிந்து சொல்
3. கேள் ஏன் என்று
ஏன் என்று கேள்
4. வெல்லும் என்றும் அறிவியலே
அறிவியலே என்றும் வெல்லும்
குறு வினா
1. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
அனுபவம் மனிதர்களுக்கு மருந்தாக விளங்குகிறது.
TNPSC previous year question
1. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்
நெல்லை சு.முத்து


Hi Please, Do not Spam in Comments