நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தம் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றனையும் இழந்த செம்மல்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்கள், கவிஞர்கள், எனப் பலர் இருக்கிறார்கள். அவர்களுள் நான் விரும்பிப் போற்றும் கவிஞர் மகாகவி பாரதியார் ஆவார். அவர் கவிதைகள் மூலம் தேசியத்தை வளர்த்துத் தமிழ் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார்.
பாடத்தலைப்புகள்(toc)
பாரதியார் பற்றிய குறிப்புகள்
பாரதியார் பிறந்த நாள்
bharathiyar birthday - எட்டயபுரத்தில், 11.12.1882ல் சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாய்த் தோன்றினார்.
வாழ்ந்த காலம் - 11.12.1882 முதல் 11.9.1921வரை.
பிறந்த ஊர்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.
பாரதியார் இயற்பெயர்
இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.இளமையிலேயே கவி பாடும் திறன் பெற்றிருந்தார்.
எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.
Subramania Bharati - Writer - இதழாளர்
பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர்ச் சென்னையில் இருந்து வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகவும். 'சக்கரவர்த்தினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராகவும், 'இந்தியா' என்ற வார பத்திரிகைக்கு ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார். மேலும் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய சிறு காவியங்களையும் படைத்துள்ளார்.
பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.
பக்திப் பாடல்களிலும் புதுமை கண்டவர் பாரதி. அவருடைய கண்ணன் பாட்டுத் தனிச் சிறப்புடையது.பாரதியின் குயில் பாட்டு' நகைச்சுவை இழையோடும் மெயப்பொருட் பாட்டாகும். 'சிந்து' 'விருத்தம்' 'ஆசிரியம்" ஆகியன கலந்து 'பாஞ்சாலி சபதம்' என அவர் படைத்த குறுங்காப்பியம் நிகரற்றது. ஞானரதம், சந்திரிகையின் கதை நவதந்திரக் கதைகள் ஆகிய நூல்களும் பகவத்கீதை மொழி பெயர்ப்பும் குறிப்பிடத்தக்கன.
குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
பாரதியார் சிறப்புகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்;
பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர். 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று கொண்டாடப்பட்டவர். இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே.
தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
- கவிஞர்;
- கட்டுரையாளர்;
- கேலிச்சித்திரம்-கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்;
- சிறுகதை ஆசிரியர்;
- இதழாளர்;
- சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
பாரதியார் திருமண வாழ்க்கை
1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு நடந்தேறியது பாலியல் திருமணம். இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார் என்னவோ தெரியவில்லை. பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார்.
துணைவியார் பெயர் (bharathiyar wife name) - செல்லம்மாள்
பாடல்கள்
- பாப்பா பாட்டு
- விநாயகர் நான்மணிமாலை
- வேதாந்தப் பாடல்கள்
- திண்டிய சாஸ்த்திரி
- சொர்ண குமாரி
- முரசு - வியாசர் பாரதத்தை தழுவியது
- புதிய ஆத்திசூடி
- அச்சம் தவிர்
- பாரததேசம்
- சீட்டுக்கவி
பாரதியார் இயற்றிய நூல்கள்
- ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு - உரைநடை நூல்கள்
- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
இதழ்கள்
- சுதேசமித்ரன் - (நாளிதழ்)
- இந்தியா (வார இதழ்)
- சக்ரவர்த்தினி(மகளிர் - வார இதழ்)
- பால பாரதி
- கர்மயோகி
- சூர்யோதயம்
- தர்மம்
- பாலபாரத யங் இந்தியா(ஆங்கில இதழ்)
- விஜயா
பாரதியார் சிறப்புப்பெயர்கள் - பட்டப்பெயர்கள
- தேசியகவி
- விடுதலைக் கவி
- மகாகவி
- பாட்டுக்கொரு புலவன்
- சிந்துக்கு தந்தை
- புதுக்கவிதையின் தந்தை
- ஷெல்லிதாசன்
- தற்கால தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி
- முன்னறி புலவர்
- அமெரிக்கர் வால்ட்விட்மன் சாயல் (கவிதை)
- முண்டாசுக் கவிஞன்
- சக்தி தாசன்
மேற்கோள்கள்- bharathiyar quotes
-
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் தந்த தமிழ்நாடு பாரதநாடு
- நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி இனிதாவது எங்கும் காணோம்
- மாதம் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்
- காக்கை சிறகினிலே நந்தலாலா
- காக்கை குருவி எங்கள் ஜாதி
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
- ஆடுவோமே பள்ளு பாடுவோமே
- பட்டங்கள் ஆழ்வதும், சட்டங்கள் செய்வதும்
- கொட்டு முரசே கொட்டு முரசே
- எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
- என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
- பெண் விடுதலை வேண்டும்
- கல்வி சிறந்த தமிழ் நாடு
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
- பாரபூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்"
- “தெய்வம் பலப்பல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்"
- “நாடும் மொழியும் நமதிரு கண்கள்"
- “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்".
- "இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"
- “ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திடுவீர்"
- இவ்வுலகம் இனியது வான் இனியது
- ஆயிரம் உண்டிங்கு சாதி
- பாருக்குள்ளே நல்ல நாடு நாம்மிருக்கும் பாரதநாடு
- முப்பது கோடி முகமுடையால்
- எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
- பெரிய கடவுள் காக்க வேண்டும்
- காசி நகர்புறம் பேசும் உரை
- ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் - பாரததேசம்
- கும்மியடி பெண்ணே கும்மியடி
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
- நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
-
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல்
முயற்கொம்பே
- பெண்ணுரிமை
வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
-பாரதியார்(code-box)
ஏழையென்றும் அடிமையென்றும்எவனுமில்லை சாதியில்இழிவு கொண்ட மனிதரென்பதுஇந்தியாவில் இல்லையே(code-box)
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப்
"மண்ணும் இமயமலை எங்கள் மலையே"(code-box)
என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும்(முன்னறி புலவர்) என்ற பார்வையும் பெற்றவர்.
"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" (code-box)
என்றவர்,
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்
என்றார்.
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
காக்கைகுருவி எங்கள் சாதி - பாரதியார்(code-box)
என்று பாரதியார் பாடினார். சமைப்பதற்குத் தம் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.
சி. விசுவநாத ஐயர் பாரதியாரின் ஒன்று விட்ட தம்பி. இவர் மானாமதுரை பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். இவர் கவிஞராகவும் விளங்கியவர். பாரதியின் பாடலைத் திரட்டிய சீனி. விசுவநாதனைப் பாராட்டிப் பாடியுள்ளார்.
பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார் (code-box)
என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - பாரதியார் (code-box)
என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாரதியார் கூறுகிறார்.
1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:
"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்
பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்
உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக” (code-box)
இச்சம்பவம் நடந்த 12ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையை பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:
"மாகாளி பராசக்தி உருசியநாட்
டினர்கடைக்கண் வைத்தா ளங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர், புதுமை காணீர்! (code-box)
அவர் பாடல்கள் வெள்ளையர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களின் உள்ளங்களில் விடுதலை வேட்கை என்னும் காட்டுத் தீயை மூட்டும் அக்கினிப் பிழம்பாய் அமைந்தது.
பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீடு
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது. காந்தியடிகள், அங்கு ஒரு மெத்தையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் இராஜாஜியும் மற்ற தலைவர்களும் நின்றுகொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார். "திரு.காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமைதாங்க முடியுமா?" என்று கேட்டார். "இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?" என்று கேட்டார் காந்தியடிகள். "அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப் போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்" என்று கூறிய பாரதியார் "நான் போய் வருகிறேன்" என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் "இவர் யார்?" என்று காந்தி வியப்புடன் கேட்டார். "இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்" என்றார் இராஜாஜி. "அப்படியா! இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார். "திரு.காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமைதாங்க முடியுமா?" என்று கேட்டார். "இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?" என்று கேட்டார் காந்தியடிகள். "அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்" என்று கூறிய பாரதியார் "நான் போய் வருகிறேன்" என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் "இவர் யார்?" என்று காந்தி வியப்புடன் கேட்டார். "இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்" என்றார் இராஜாஜி. "அப்படியா! இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீட்டை அறியலாம்
பாரதியார் மறைந்த ஆண்டு
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.
வசனகவிதை
இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா? காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு. 'நீரின்றி அமையாது உலகு' என்றாற் போல காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம் என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள்.
காற்றே, வா.
காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா.
எமது உயிர் நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.(code-box)
சொல்லும் பொருளும்:
- மயலுறுத்து - மயங்கச்செய்
- ப்ராண ரஸம் - உயிர்வளி
- லயத்துடன் - சீராக
வசனகவிதை என்றால் என்ன?
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
- ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
பாரதியின் வசனநடை - சிட்டுக்குருவி
சிறியதானியம் போன்ற மூக்கு சின்னக்கண்கள்: சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து: அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு: கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண்.
பாரதியார் கவிதைகள் - bharathiyar kavithaigal in tamil
திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட" - பாரதியார் (code-box)
வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!
- பாரதியார் (code-box)
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;உண்மை வெறும் புகழ்ச்சியில்லை;ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்வாழ்கின்றோம்; ஒருசொல் கேளிர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!- பாரதியார்(code-box)
பாரத தேசம்
இந்தப் பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன. 'வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்' எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.
குடைகள் செய்வோம்உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம்இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லர் உலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்.
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.
-மகாகவி பாரதியார் (code-box)
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise
சொற்பொருள்
- தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்;
- வண்மை - கொடை;
- உழுபடை - வேளாண்மை செய்யப் பயன்படும் கருவிகள்;
- கோணி - சாக்கு;
- நடை - சாலையில் செல்லும் வண்டிகள்;
- பறப்பு - பறக்கும் வானூர்தி முதலியன;
- ஞாலம் - உலகம்:
- உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்;
- தமிழ்மகள் - ஒளவையார்;
- மேலவர் - மேலோர்;
- கீழவர் - கீழோர்;
- மற்றோர் - பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்;
- நெறியினின்று - அறநெறியில் நின்று.
பொருள் எழுதுக.
1. வண்மை - கொடை
2. ஞாலம் - உலகம்
3. உழுபடை - வேளாண்மை செய்யப் பயன்படும் கருவிகள்
எதிர்ச்சொல் எழுதுக.
1.உண்மை × பொய்
2. நல்ல × கெட்ட
3. மேலவர் × கீழவர்
பிரித்து எழுதுக.
1. வேறில்லை = வேறு + இல்லை
2. தொழிலனைத்தும் = தொழில் + அனைத்தும்
3. இரண்டொழிய = இரண்டு + ஒழிய
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. 'பாட்டுக்கொரு புலவன்' எனப் போற்றப்படுபவர் பாரதியார்
2. 'சாதி இரண்டொழிய வேறில்லை' எனக் கூறிய தமிழ்மகள் ஒளவையார்
குறுவினாக்கள்
1. பாரதியார் கருத்துப்படி மேலோர் யார் ?
பாரதியார் கருத்துப்படி, அறநெறியில் நின்று பிறர்க்கு உதவும் நேர்மை உடையோர் மேலோர் ஆவர்.
2. பாரதியாரின் கனவுகளுள் இரண்டனை எழுதுக
பாரதியாரின் கனவுகளுள் இரண்டு
- பறக்கும் வானூர்தி முதலியன செய்தல்
- வேளாண்மை செய்யப் பயன்படும் கருவிகள் செய்தல்
காணி நிலம்
அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள். 'வீடு' என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார். இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார். இயற்கையைப் பலவகைகளிலும் போற்றிடும் பாரதியின் கனவு இல்லத்தைப் பற்றி அறிவோம்.
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்குத்
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே -ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே - தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்குக்
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம்
தென்றல் வரவேணும்.
- பாரதியார்(code-box)
சொல்லும் பொருளும்
பாடலின் பொருள்
நூல் வெளி
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - காணி நிலம் மதிப்பீடு
நிரப்புக
1. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பொருத்துக. பொருத்தப்பட்டுள்ளது
நயம் அறிக.
குறுவினா
- ஒரு மாளிகை
- அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்கள்
- நல்ல நீரையுடைய கிணறு
- இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள்
- முத்து போன்ற நிலவொளி
- காதுக்கு இனிய குயிலின் குரலோசை
- உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல்
நான் விரும்பும் கவிஞர் - பாரதியார் பற்றிய கட்டுரை Tamil bharathiyar katturai in tamil
முன்னுரை
நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தம் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றனையும் இழந்த செம்மல்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்கள், கவிஞர்கள், எனப் பலர் இருக்கிறார்கள். அவர்களுள் நான் விரும்பிப் போற்றும் கவிஞர் மகாகவி பாரதியார் ஆவார். அவர் கவிதைகள் மூலம் தேசியத்தை வளர்த்துத் தமிழ் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார்.
பிறப்பும் இளமையும்
சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆகியோர்க்கு 11.12.1882இல் பாரதியார் பிறந்தார்.
பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம்.
அவர் இளமையிலேயே ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தார். பைந்தமிழ்ப் பாவலராய்த் திகழ்ந்து பாரதி என்னும் பட்டம் பெற்றார். அவர், சில காலம் எட்டையபுரம் அரசவைக் கவிஞராக விளங்கினார். பின்னர், மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்; சென்னையில் இதழாசிரியராகவும் பணிபுரிந்தார்.
விடுதலை வேட்கை
பாரதியார் வாழ்ந்த காலம், பாரத நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த காலம். நாடு விரைவில் விடுதலை அடையவேண்டுமென்ற துடிப்புடன் இருந்தார். தம் பாட்டுத்திறத்தால், தூங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி விடுதலைக் கனலை மூட்டினார். சாதிசமயப் பாகுபாடின்றி அனைவரையும் விடுதலை வேள்வியில் ஈடுபடச் செய்தார்.
“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி" (code-box)
என வீர முழக்கமிட்டார்.
"பாருக்குள்ளே நல்ல நாடு"
“நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்” (code-box)
என்றெல்லாம் பாடி, மக்களுக்கு நாட்டுப்பற்றையும் விடுதலை உணர்வையும் ஊட்டினார்.
தேசியக் கவிஞர் பாரதியார்
இந்தியத் திருநாட்டின் இணையற்ற கவிஞராகப் பாரதியார் விளங்கினார். இதனால் அவர், அனைவராலும் ‘தேசியக் கவிஞர்' எனப் பாராட்டப் பெற்றார்.
'எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்' (code-box)
எனத் தேசிய ஒருமைப்பாட்டுணர்வை ஊட்டினார்.
"முப்பது கோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.”(code-box)
என்னும் பாடலின்மூலமாக,
"முப்பதுகோடி மக்களும் இந்தியரே, அவர்கள் பேசும் மொழி பலவாய் இருப்பினும் சிந்தனை ஒன்றே!" என்ற உயரிய தேசிய உணர்வை ஊட்டியவர் பாரதி.
முன்னறி புலவர் பாரதி
விடுதலை அடைதற்கு முன்பாகவே, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகளைத் தாம் வாழும் காலத்திலேயே பாடி மகிழ்ந்த முன்னறி புலவர் பாரதியாவார்.
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட் டோமென்று" (code-box)
எனவும்,
"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" (code-box)
எனவும்,
"காசிநகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்"(code-box)
எனவும், பாடினார் பாரதியார்.
சமுதாயத் தொண்டு
சாதிவேரை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பியவர் பாரதி. அதனால்தான்,
'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' (code-box)
எனக் குழந்தை மனத்தில் ஆழப்பதித்தார் பாரதி.
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' (code-box)
என்பதன்மூலம் பெண்கள் நலன் பேண விரும்பியவர் பாரதி.
“தனியொருவனுக் குணவிலை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்"(code-box)
"வாழிய செந்தமிழ்; வாழ்கநற் றமிழர்” (code-box)
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே"(code-box)
என்று பாடிய பாடல்களே, பாரதியாரின் சமுதாயத் தொண்டுள்ளத்திற்கும், மொழிப்பற்றுக்கும் தக்க சான்றுகளாம்.
முடிவுரை
'பாரதநாடு பார்க்கெலாம் திலகம்' (code-box)
எனப் பாடிய பைந்தமிழ்ப் பாவலன் 11.09.1921 அன்று மண்ணுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார். அவர் வழி நாமும் நடந்து, நாடும் வீடும் போற்ற வாழ முயல்வோமாக!
நினைவுகூர்க
அவர் கூறிய இடத்தை இன்னும் தமிழ்மொழி அடைந்திலது அவர் பாடிய சமத்துவச் சமுதாயம் இன்னும் வாய்க்கவில்லை என்பதை நினைவுகூர்க.
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 1. பாரதியார் என்ற தொகுப்பிற்காக பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Please share your valuable comments