ரோபோ பற்றிய செய்திகள்

எல்லாம் எந்திரமயமாகி வருகிற காலம் இது. மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யும் வகையில் பலவற்றை உருவாக்கி வருகிறார்கள். எந்திர உலகில் நுழைவோம்! எல்லாவற்றையும் கற்போம்!

பாடத்தலைப்புகள்(toc)

எந்திர உலகம்

மனிதர்கள் செய்ய முடியாத பணிகளையும் எந்திரங்கள் செய்கின்றன. வீடு, அலுவலகம், தொழிற்சாலை, மருத்துவமனை என்று பல இடங்களிலும் எந்திரங்கள் பணியாற்றுகின்றன. கணக்குப்போடும் எந்திரம், கற்றுத்தரும் எந்திரம், வேலை செய்யும் எந்திரம், விளையாடும் எந்திரம் என்று எங்கெங்கும் எந்திரங்கள். 

ரோபோ

இது பேசும். பாடும். வீட்டு வேலைகள் செய்யும். படிப்பதில் உதவி செய்யும். அலுவலக வேலைகளை முடிக்க உதவும். கணக்குவழக்குகளையும் முடித்துத் தரும்.

எந்திரமனிதனை 'ரோபோ' என்றும் அழைப்பார்கள்'


காரல் ஃபெக் (Karel capek) என்பவர் 'செக்' நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் "ரோபோ" (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு 'அடிமை' என்பது பொருள். ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.

தானியங்கிகள்

மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றை இயக்குவதற்கு மனித ஆற்றல் தேவைப்பட்டது. இக்குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே தானியங்கிகள்

தானியங்கி என்றால் என்ன? 

நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும். 

ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும். தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும்.

இவ்வகைத் தானியங்கிகள் இன்று பல தொழில் நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவை பயன்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள். சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் (Sensors) ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன.

'மனித முயற்சிகளுக்கு மாற்றாகத் தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும். இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போலப் செயல்களை நிறைவேற்றும்' என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது. 



இவை தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள். 

உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்கின்றன.


இது மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. மருத்துவம் பார்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்யும் ரோபோக்களும் உள்ளன.


பிற கோள்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் செயற்கைக்கோள்களை இயக்கவும் தானியங்கிகள் பயன்படுகின்றன. உலகில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்கள் பல உள்ளன. பெருங்கடலின் அடி ஆழம், வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துருவப்பகுதிகள் ஆகியவை அவற்றுள் சில. இவ்விடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் இவை உதவுகின்றன.

எந்திரமனிதர்கள்

தமது வேலைகளை எளிமையாகச் செய்ய முதலில் தானியங்கிகளை உருவாக்கினான் மனிதன். 

பிறகு தன்னைப் போன்றே சிந்தித்துச் செயல்படும் தானியங்கிகளை உருவாக்க முயன்றான். அம்முயற்சியின் விளைவாகத் தோன்றியவர்களே எந்திரமனிதர்கள். 

மனிதர்களைப் போலவே எந்திரமனிதர்களுக்குத் தலை, உடல், கை, கால்கள் இருக்கும்.

  • எந்திரமனிதர்கள், உணவகங்களில் உணவு பரிமாறுகின்றனர். 
  • பொது இடங்களில் வழிகாட்டுகின்றனர். 
  • வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அதுதான் எந்திர மனிதர்களிடம் உள்ள செயற்கை நுண்ணறிவு.

செயற்கை நுண்ணறிவு

மனிதர்களாகிய நாம் நுண்ணறிவால் செயல்படுகிறோம்.  

மனிதர்கள் போலச் செயல்பட எந்திர மனிதர்களுக்கும் சில கட்டளைகள் வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளன. இந்தச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டே இயங்குகிறது.

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். 

ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. டீப் புளூவே வெற்றி வாகை சூடியது.


சோபியா

உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் 'சோபியா'. 

மேலும் ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை. 


இனிவரும் காலங்களில் 'சோபியா' போன்ற எண்ணற்ற எந்திரமனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் மனித இனத்தின் வளர்ச்சிக்கு உதவுவார்கள்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டிப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - கணியனின் நண்பன் மதிப்பீடு 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது..

அ) நூலறிவு 

ஆ) நுண்ணறிவு 

இ) சிற்றறிவு 

ஈ) பட்டறிவு


2. தானே இயங்கும் எந்திரம்

அ) கணினி 

ஆ) தானியங்கி 

இ) அலைபேசி 

ஈ) தொலைக்காட்சி


3. 'நின்றிருந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. 

அ) நின் + றிருந்த 

ஆ) நின்று + இருந்த 

இ) நின்றி + இருந்த 

ஈ) நின்றி + ருந்த


4. 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அவ்வு + ருவம் 

ஆ) அ +உருவம் 

இ) அவ் + வுருவம்

 ஈ) அ +வுருவம் 


5. மருத்துவம்+துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மருத்துவம்துறை 

ஆ) மருத்துவதுறை 

இ) மருந்துதுறை 

ஈ) மருத்துவத்துறை


6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) செயலிழக்க 

ஆ) செயல்இழக்க 

இ) செயஇழக்க 

ஈ) செயலிலக்க 


7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

அ) போக்குதல் 

ஆ) தள்ளுதல்

 இ) அழித்தல்

 ஈ) சேர்த்தல்


8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

அ) அரிது

 ஆ) சிறிது 

இ) பெரிது

ஈ) வறிது


கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை எந்திரங்கள் 

2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு செயற்கை நுண்ணறிவு

3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் டீப் புளூ

4. 'சோபியா' ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு சவுதி அரேபியா


சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. தொழிற்சாலை - தொழிற்சாலையில் தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

2. உற்பத்தி - தானியங்கிகள் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்கின்றன.

3. ஆய்வு - பிற கோள்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் செயற்கைக்கோள்களை இயக்கவும் தானியங்கிகள் பயன்படுகின்றன.

4. செயற்கை - எந்திர மனிதர்களிடம் செயற்கை நுண்ணறிவு உள்ளது.

5. நுண்ணறிவு - மனிதர்களாகிய நாம் நுண்ணறிவால் செயல்படுகிறோம்.  


குறுவினா

1. 'ரோபோ' என்னும் சொல் எவ்வாறு உருவானது?

காரல் ஃபெக் (Karel capek) என்பவர் 'செக்' நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் "ரோபோ" (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு 'அடிமை' என்பது பொருள். ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது.

2. 'டீப் புளூ'- மீத்திறன் கணினி பற்றி எழுதுக.

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். 

ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. டீப் புளூவே வெற்றி வாகை சூடியது.

சிறுவினா

1. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.

எந்திரமனிதனின் பயன்கள்

  • பேசும். 
  • பாடும். 
  • வீட்டு வேலைகள் செய்யும். 
  • படிப்பதில் உதவி செய்யும். 
  • அலுவலக வேலைகளை முடிக்க உதவும். 
  • கணக்குவழக்குகளையும் முடித்துத் தரும்.
  • எந்திரமனிதர்கள், உணவகங்களில் உணவு பரிமாறுகின்றனர். 
  • பொது இடங்களில் வழிகாட்டுகின்றனர். 
  • வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

2. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?

உலகில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்கள் பல உள்ளன. பெருங்கடலின் அடி ஆழம், வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துருவப்பகுதிகள் ஆகியவை அவற்றுள் சில. இவ்விடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் இவை உதவுகின்றன.

TNPSC previous year question 

 1. "ரோபோ" (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர்

காரல் ஃபெக் 

2. ரோபோ என்ற சொல்லுக்கு '.......' என்பது பொருள்.

அடிமை

3. உலகிலேயே முதன்முதலாக ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு 

சவுதி அரேபியா

4. உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியது. அதன் பெயர்

 'சோபியா'

5. உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் உடன் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய மீத்திறன் கணினி

ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும்  (Super Computer) 

6. எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு 

செயற்கை நுண்ணறிவு

7.  Sensors என்பது தமிழில் 

நுண்ணுணர்வுக் கருவிகள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad