அப்துல் கலாம்

குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவர் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம். மாணவர்கள் முன்னேற பல வழிகளை எடுத்துச் சொன்னவர். எதிர்காலம் பற்றிக் கனவுகண்டு, அதை அடைய வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. மாணவர்களோடு பேசுவதை மிகவும் விரும்பியவர். வாருங்கள் அவரிடம் அறிவியலைக் கற்றிடலாம்.

பாடத்தலைப்புகள்(toc)

அப்துல் கலாம் கூறியவை

அறிவியல் மீது அவருக்கு ஆர்வம் ஏற்படக் காரணமான முதல் நிகழ்வு 

அவர் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது அவரின் அறிவியல் ஆசிரியர் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கிக் கூறினார். அன்று முதல், வானில் பறக்க வேண்டும் என்பது அவர் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகிவிட்டது. அதுவே அவர் அறிவியல் ஆர்வத்தின் தொடக்கம்.

மிகவும் பிடித்த புத்தகம் 

தமிழில் திருக்குறள் அவருக்கு மிகவும் பிடித்த நூலாகும்.

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண்(code-box)


என்னும் குறள் அவர் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது. 

அதுபோல் 'லிலியன் வாட்சன்' எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதைப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றதாக அவரே கூறுகிறார்.

மகிழ்ந்த நிகழ்வு 

போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டார். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் அவருக்குப் பெருமகிழ்வை அளித்தது.


சுதந்திர இந்தியாவின் வெற்றிகள் 

  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது 
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளது.
  • எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது. 
  • அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. 
  • நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளது.
  • பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றேன் என்று அவர் கூறுகிறார்.

மருந்துகள் தொடர்பான ஆய்வுகள்

இந்தியா இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. ஆனால், மனிதர்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றிற்கான மருந்துகள் இல்லையே! அவற்றைக் கண்டுபிடிக்க என்ன மாதிரியான ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பதற்கு அவர், கடலுக்கு அடியில் மனிதரால் கண்டறியப்படாத ஏராளமான தாவரங்கள், உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய மூலக்கூறுகளைப் பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவை வெற்றிபெறும் போது 'எய்ட்ஸ்' போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் புதிய நோய்களுக்கும்கூடத் தடுப்பு மருந்து கண்டறியப்படலாம் என்றார்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா

மூன்று சிறப்புகளைப் பெற்றிருக்கும் என்று அவர் நம்புகிறார். 

1. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.

2. அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.

3. செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

செவ்வாய்க்கோளில் மனிதன் வாழ முடியுமா?

525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏவூர்திகளில் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம். எனவே, நிலவிற்குச் செல்லத்தயாராக இருங்கள் என்றார்.

நிலவிற்குச் செல்லலாம் என்றால் சூரியனுக்கும் கூடச் செல்ல முடியுமா ?

சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. அவ்வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு இன்றைய சூழலில் கவசங்கள் இல்லை. வருங்காலத்தில் அதிகபட்ச வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்படலாம். அப்போது மனிதன் சூரியனையும் கூடச் சென்றடையலாம் என்றார். 

உலகின் முதல் விஞ்ஞானி

அறிவியலின் அடிப்படை, கேள்வி கேட்கின்ற மனப்பான்மைதான். அறிவியல் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் திறனால்தான். குழந்தைகளின் கேள்விகளுக்குத்தான் முடிவே இல்லை. கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகளாகிய நீங்கள்தாம் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் என்றார். 

மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றாலும் அதில் உயர்ந்த குறிக்கோளை மனதில் கொள்ளுங்கள். அக்குறிக்கோளுக்கான அறிவையும் அனுபவத்தையும் சேகரித்துக் கொள்ளுங்கள். கடின உழைப்பால் வெற்றியடையுங்கள். உங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றிக்கு உதவும் என்றார்.

வெற்றியை அடையும் வழி 

இரண்டு வழிகள் உள்ளன.

1. அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள். 

2.வியர்வை! வியர்வை! வியர்வை!

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டிப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - ஒளி பிறந்தது மதிப்பீடு 

1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

சுதந்திர இந்தியாவின் வெற்றிகள் 

  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது 
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளது.
  • எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது. 
  • அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. 
  • நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளது.
  • பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டார். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் அவருக்குப் பெருமகிழ்வை அளித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad