இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்த இராமன் விளைவு.
பாடத்தலைப்புகள்(toc)
இராமன் விளைவு
1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர், கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலதிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுத்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் நமது ஆய்வைத் தொடங்கினார்.
தேசிய அறிவியல் நாள்
ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் " தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர். சி.வி.இராமன்.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 6ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை
இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
3. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
பிப்ரவரி 28
4. தேசிய அறிவியல் நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
" இராமன் விளைவு" கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.
5. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது
இராமன் விளைவு
6. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
சர். சி.வி.இராமன்
Please share your valuable comments