குற்றாலக் குறவஞ்சி

குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

பாடத்தலைப்புகள்(toc)

திரிகூடராசப்ப கவிராயர் 

குற்றாலக் குறவஞ்சி பாடியவர்

குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். 

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது(250) வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல் குற்றாலக் குறவஞ்சி. 

திரிகூடராசப்ப கவிராயர் நூல்கள்

  • திருக்குற்றாலக் குறவஞ்சி 
  • திருக்குற்றால கோவை
  • திருக்குற்றால உலா
  • திருக்குற்றாலக்பிள்ளைத் தமிழ் 
  •  திருக்குற்றாலத்தல புராணம்

குற்றாலக் குறவஞ்சி

இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. 

குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் குற்றால மலையின் வளம்


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்

    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

     செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்

    குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!


ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்.

    ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

     வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு 

போடக் காண்பது பூமியில் வித்து

     புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

    திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!


 - திரிகூட ராசப்பக் கவிராயர்(code-box)


பொருள்

குற்றால மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும். 

உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும். 

அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள். 

உயர்ந்த எங்கள் மலையில் உள்ள கானவர்கள் வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பார்கள்.

சித்தர்கள், இறப்பை நீக்கும் மூலிகைகளை எங்கள் மலையில் வளர்த்து வருவார்கள்.

அருவியின் அலை உயர்ந்து எழும்பி வானத்தையே தொடும். 

அந்த அலை நீரில் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும் நேரின் சக்கரங்களும் வழுக்கிவிழும்.

வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை. 

எங்கள் நாட்டில் மக்கள் அஞ்சி ஓடிப்போவது இல்லை; வெள்ளம்தான் ஓடும். 

மக்கள் இங்கு ஒடுங்கி இருப்பதில்லை; தவம் செய்வோரின் உள்ளம்தான் ஒடுங்கி இருக்கும். 

மக்கள் இங்கு நோய், வறுமையால் வாடுவது இல்லை; பெண்களின் மெல்லிடை மட்டுமே வாடும். 

மக்கள் இங்கு வருந்துவது இல்லை; முத்துகளை ஈனும் சங்குகள் மட்டுமே வருந்துகின்றன.

என்இங்குப் பயன் அற்றவை என எவையும் தூக்கிப் போடப்படுவது இல்லை; விதைகள் மட்டுமே மண்ணில் போடப்படுகின்றன. 

மக்கள் இங்கே துன்பத்தில் புலம்புவது இல்லை; குழந்தைகள் காலில் அணியும் கிண்கிணிகளே புலம்பல் ஒலி எழுப்புகின்றன. 

மக்கள் இங்கே செல்வங்களைத் தேடி அலைவதில்லை; அறம், பெருமை இரண்டை மட்டுமே மக்கள் இங்குத் தேடுவார்கள். 

குற்றாலநாதராகிய சிவபெருமான் வாழும் நாடு எங்கள் நாடு.

இவ்வாறு குறத்தி, தன் மலைவளமும் நாட்டுவளமும் குறித்துக் கூறுகிறாள்.

சொல்பொருள்

வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது; 

மந்தி - பெண் குரங்கு;

வான்கவிகள் - தேவர்கள்; 

கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்; 

காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை; 

பரிக்கால் - குதிரைக்கால்; 

கூனல் - வளைந்த; 

வேணி - சடை.

மின்னார் - பெண்கள்; 

மருங்கு - இடை; 

சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி  பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise குற்றாலக் குறவஞ்சி மதிப்பீடு 

ஓரிரு சொற்களில் விடை தருக.

அ. புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

ஆ. திருக்குற்றால மக்கள் தேடுவது அறம், பெருமை

பொருள் எழுதுக

அ. கூனல் - வளைந்த

TNPSC previous year question 

1. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

ஓடக் காண்பது - பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது - யோகியர் உள்ளம்

வாடக் காண்பது - மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது - சூல்உளைச் சங்கு 

2. குற்றால குறவஞ்சி ...... என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. 

சிற்றிலக்கியம் 

3. வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்

கமனசித்தர்

4. மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை என்று அறியப்படுவது

காயசித்தி

5. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

மந்தி - பெண் குரங்கு

வான்கவிகள் - தேவர்கள்

பரிக்கால் - குதிரைக்கால்

கூனல் - வளைந்த

6. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

வேணி - சடை

மின்னார் - பெண்கள்

மருங்கு - இடை

சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்

6. வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்து குற்றாலமலையில் வீற்றிருக்கும் இறைவன் 

சிவபெருமான்

7. திரிகூடராசப்ப கவிராயர் நூல்களில் பொருந்தாதது 

திருக்குற்றாலக் குறவஞ்சி 

திருக்குற்றால கோவை

திருக்குற்றால உலா

திருக்குற்றாலத்தல கலம்பகம்

8. குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் 

திரிகூட ராசப்பக்கவிராயர்

9. திரிகூட ராசப்பக்கவிராயர் பிறந்த இடம் 

குற்றாலம் (மேலகரம்)

10. திருக்குற்றாலத்தல புராணம் பாடியவர்

திரிகூட ராசப்பக்கவிராயர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad