அழகிய சொக்கநாதப் புலவர்

தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள அழகிய சொக்கநாதப் புலவர் எழுதிய சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

தனிப்பாடல் திரட்டு - அழகிய சொக்கநாதப் புலவர் பாடல்கள் வரிகள்

மரமும் பழைய குடையும்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது 

மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் - தஞ்சம்என்றோர்

வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்! 

கோட்டுமரம் பீற்றல் குடை.

- அழகிய சொக்கநாதப் புலவர்(code-box)


பாடல்பொருள்

அடைக்கலம் என்று வந்து அடைந்தவர் விரும்பியதனை அளிக்கும் மன்னனே! (முத்துசாமித்துரை) கேட்பாயாக!

கிளைகளை உடைய மரம். இளம் காய்களை உடையதாக இருக்கும்; மிக்க மழை பெய்தால் தாங்காது விழும்; அதனிடையே அமைந்த இடைவெளி வழியாக வெயில் வரும். 

பழைய குடையானது, கிழிந்திருக்கும்; பெருமழையைத் தாங்காது; துளைகள் வழியாக வெயில் உள்ளே செல்லும். 

எனவே, இத்தகைய காரணங்களால், பீற்றல் குடை, மரத்துக்கு ஒப்பானதாகும்.

சொல்பொருள்: 

கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்; 

பீற்றல் குடை - பிய்ந்த குடை. 

அழகிய சொக்கநாதப் புலவர் ஆசிரியர் குறிப்பு

அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.

அழகிய சொக்கநாதப் புலவர் இயற்றிய நூல்கள்

இருபத்தைந்துக்கும் பேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர். 

காலம்

இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

தனிப்பாடல் திரட்டு நூல்குறிப்பு

பெரும்பாலான பாடல்கள் இருநூறுமுதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.

புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர்.

இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.

சிலேடை அல்லது இரட்டுறமொழிதல்

ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். 

இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல். 

இருபொருள்படப் பாடுவது.

(எ.கா.) ஆறு

ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். எண் ஆறனையும் (6) குறிக்கும். செல்லும் வழியையும் குறிக்கும்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 8. அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பொருள் எழுதுக

அ. பீற்றல் - பிய்ந்த

TNPSC previous year question 

1. அழகிய சொக்கநாதப் புலவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

 கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

2. மரமும் பழைய குடையும் என்ற தனிப்பாடல் எழுதியவர்

அழகிய சொக்கநாதப் புலவர்

3. கீழ்கண்டவற்றுள் ஆறு என்ற சொல் குறிக்காதது 

நீர் ஓடுகின்ற ஆறு

எண் ஆறு

செல்லும் வழி 

ஆற்று

4. "கோட்டுமரம் பீற்றல் குடை" என்பதில் பீற்றல் என்பது குறிப்பது

பிய்ந்த

5. ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது 

சிலேடை 

6. அழகிய சொக்கநாதப் புலவர் எந்த ஊரில் பிறந்தவர்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர்

7. "கோட்டுமரம் பீற்றல் குடை" என்பதில் கோட்டுமரம் என்பது குறிப்பது

கிளைகளை உடைய மரம்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please share your valuable comments

Top Post Ad