தனிப்பாடல் விளக்கம்

புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர். இங்கே தனிப்பாடல் திரட்டு பாடல்கள் விளக்கம் தரப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

தனிப்பாடல் திரட்டு நூல் குறிப்பு

பெரும்பாலான பாடல்கள் இருநூறுமுதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.

தனிப்பாடல் திரட்டு ஆசிரியர் 

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு ஆகும்.

இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.

நூல் பயன் : 

தனிப்பாடல்களைக் கற்பதனால், தமிழ்மொழியின் பெருமையையும் புலவர்களின் புலமையையும் சொல்லின்பம் பொருளின்பம் கற்பனைஇன்பம் முதலியவற்றையும் பெறலாம்.

தனிப்பாடல் திரட்டு - அழகிய சொக்கநாதப் புலவர் பாடல்கள் வரிகள் (link)

தனிப்பாடல் - இராமச்சந்திரக் கவிராயர் (link)

காளமேகப் புலவர் (link)

-----------------------------------------------------------------------------------------------------

தனிப்பாடல் திரட்டு - சுந்தரகவிராசர்

மரமது¹ 

மரத்தில்² ஏறி 

மரமதைத்³ தோளில் வைத்து 

மரமது⁴ 

மரத்தைக்⁵ கண்டு 

மரத்தி்னால்⁶ 

மரத்தைக்⁷ குத்தி

மரமது⁸ வழியே சென்று

வளமனைக் கேட்கும் போது

மரமது⁹ கண்ட மாதர்

மரமுடன்¹⁰ 

மரம்¹¹ எடுத்தார்" (code-box)


பாடலின் பொருள்

பாடலில், மரம் என்னும் சொல், இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

  • 1 - அரசன் (அரசமரம்)
  • 2 - மா குதிரை (மாமரம்)
  • 3 - வேல் (கருவேலம்)
  • 4,9 - அரசன்
  • 5,7 -  (வேங்கை) புலி
  • 6 - வேல்
  • 8 - காட்டு வழி
  • 10 - ஆல் (ஆலமரம்)
  • 11 - அத்தி (அத்தி மரம்) ஆல் +அத்தி = ஆரத்தி


தனிப்பாடல் திரட்டு - தமிழழகனார்

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி- கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. 

  •  இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார். 
  • சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்

இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால்-நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு 

- தனிப்பாடல் திரட்டு(code-box)

சொல்லும் பொருளும் 

துய்ப்பது - கற்பது, தருதல் 

மேவலால் - பொருந்துதல், பெறுதல்

பாடலின் பொருள்

விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது. 

தமிழ்: 

  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; 
  • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; 
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது: 
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது. 

கடல்: 

  • கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; 
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; 
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; 
  • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது. 
பாடலின் பொருள்
 தமிழுக்கு
கடலுக்கு
முத்தமிழ் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
முச்சங்கம் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம் மூன்று வகையான சங்குகள் தருதல்
மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) ஐம்பெரும் காப்பியங்கள் மிகுதியான வணிகக் கப்பல்கள்
சங்கத்தவர் காக்க சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. தனிப்பாடல் திரட்டு யாரின்  வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.

இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி

2. தனிப்பாடல் திரட்டை தொகுப்பித்தவர்

இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி

3. தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர் 

சந்திரசேகர கவிராசப் பண்டிதர்

4. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் 

சண்முகசுந்தரம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad