காளமேகப் புலவர்

தனிப்பாடல் திரட்டில் உள்ள இருபொருள் அமைய பாடிய பாடல் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

காளமேகப்புலவர் ஆசிரியர் குறிப்பு

பெயர் : காளமேகப்புலவர்

இயற்பெயர் : வரதன்

பிறந்த ஊர் : கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.

பணி :  திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார். 

சிறப்பு : கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.


காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல் 

பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு ஆகும்.

இவர், இருபொருள் அமைய அதாவது இரட்டுற மொழிதல் பாடுவதில் வல்லவர். 

ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். 

இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல். 

இரட்டுறமொழிதல் என்பது இருபொருள்படப் பாடுவது.

காளமேகப் புலவர் சிலேடை பாடல்கள் விளக்கம் 

அவருடைய குதிரையும், காவிரியும் பற்றிய இரட்டுற மொழிதல் பாட்டு ஒன்று கீழே.


ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத் 

தேடு புகழான் திருமலைரா யன்வரையில் 

ஆடுபரி காவிரியா மே.

– காளமேகப் புலவர்(code-box)


பொருள் : 

ஆடுபரியும் காவிரியும் ஒன்று என்பதனைக் காளமேகப் புலவர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்

குதிரை

புகழ்பெற்ற மன்னன் திருமலைராயன் நாட்டில், விரைந்து ஓடுவதால், தெளிந்த (சுத்தமான) சுழி உடையதால், பகைவரைத் தாக்குவதால், அன்போடு தலை சாய்ப்பதால் குதிரையும்,

காவிரி

வெள்ளத்தால் ஆறு விரைந்து ஓடுவதால், ஓடுகிறபொழுது நீரில் சுழிகள் உடையதால், மலர்களை அலைத்துச் செல்வதால், பயிர்களுக்கு வளம் சேர்ப்பதால் காவிரியும் ஒன்றாகும்.

சொற்பொருள்: 

சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி: 

துன்னலர் - பகைவர், அழகிய மலர்: 

பரிவாய் - அன்பாய்; 

சாடும் - தாக்கும், இழுக்கும்; 

ஆடுபரி - ஆடுகின்ற குதிரை.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 8. காளமேகப் புலவர் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - தனிப்பாடல் மாதிரி வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. காளமேகப்புலவர் திருவரங்கக்கோவில் கோவிலில் பணிபுரிந்தார்.

2. தனிப்பாடல் திரட்டு என்னும் நூலைத் தொகுத்தவர் சந்திரசேகர கவிராசப்பண்டிதர்

3. கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றவர் காளமேகப்புலவர்.

TNPSC previous year question 

1. காளமேகப் புலவர் இயற்பெயர் என்ன?

வரதன்

2. காளமேகப் புலவர் பிறந்த ஊர் எது ?

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் அல்லது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம்

3. திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார் யார்?

காளமேகப் புலவர்

4. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.

காளமேகப் புலவர்

5. "ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்" இதில் துன்னலர் குறிப்பது

பகைவர்

குறுவினாக்கள்

1. காளமேகப் புலவர் - குறிப்பு எழுதுக.

2. காவிரியின் தன்மைகளாகப் பாடல் உணர்த்தும் கருத்துகள் யாவை ?

காவிரியின் தன்மைகளாகப் பாடல் உணர்த்தும் கருத்துகள் 

வெள்ளத்தால் ஆறு விரைந்து ஓடுவதால், ஓடுகிறபொழுது நீரில் சுழிகள் உடையதால், மலர்களை அலைத்துச் செல்வதால், பயிர்களுக்கு வளம் சேர்ப்பதால் காவிரியும் ஒன்றாகும்.

 சிறுவினா

ஆடுபரியும் காவிரியும் ஒன்று என்பதனைக் காளமேகப் புலவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad