உடுமலை நாராயணகவி

பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

உடுமலை நாராயணகவி ஆசிரியர் குறிப்பு : 

உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார். 

உடுமலை நாராயணகவி சிறப்பு பெயர்கள்

'பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர். 

இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899முதல் 23.05. 1981 வரை.


Tnpsc general tamil


உடுமலை நாராயணகவி பாடல்கள் வரிகள்

அந்தக் காலம் இந்தக் காலம்

நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது 

அந்தக் காலம் - எதையும்

நேரில் பார்த்தே நிச்சமிப்பது

இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம் 

மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது

அந்தக் காலம் - அது... அந்தக் காலம்

மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது

இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்.

இழிகுலம் என்றே இனத்தை வெறுத்தது 

அந்தக் காலம் – மக்களை

இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவது

இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்

திரோபதை தன்னைத் துயில் உரிஞ்சது 

அந்தக் காலம் பெண்ணைத்

தொட்டுப் பாத்தா சுட்டுப்புடுவான் 

இந்தக் காலம் ஆமா.. இந்தக் காலம் 

சாஸ்திரம் படிப்பது அந்தக் காலம் 

சரித்திரம் படிப்பது இந்தக் காலம் 

கோத்திரம் பார்ப்பது அந்தக் காலம் 

குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம்

பக்தி முக்கியம் அந்தக் காலம்

படிப்பு முக்கியம் இந்தக் காலம் 

சுத்தி தீட்டுவது அந்தக் காலம்

புத்தி தீட்டுவது இந்தக் காலம்

பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சது

அந்தக் காலம் - வாழ்வின் 

கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது

இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்.(code-box)

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

அ. பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி

ஒன்றல்ல இரண்டல்ல

தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர். இக்கருத்துகளை விளக்கும் உடுமலை நாராயணகவியின் பாடலை அறிவோம்.


ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல 
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
          (ஒன்றல்ல இரண்டல்ல தம்பி..)

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்
           (ஒன்றல்ல இரண்டல்ல தம்பி..)

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும் 
   பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை - வான் 
புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம்     பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்
             (ஒன்றல்ல இரண்டல்ல தம்பி..)

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான்
    முகிலினும் புகழ்படைத்த உபகாரி - கவிச் சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி -இந்த 
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு
            (ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)

-உடுமலை நாராயணகவி(code-box)

சொல்லும் பொருளும்

ஒப்புமை - இணை

அற்புதம் - வியப்பு

முகில் - மேகம்

உபகாரி - வள்ளல்

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். 

இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

நூல் வெளி

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise -  மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்

ஆ) பரிபாடல்

இ) பரணி

ஈ) அந்தாதி

2. வானில் ......... கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில்

ஆ) முகில்

இ) துகில்

ஈ) துயில்

3. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இரண்டு + டல்ல

ஆ) இரண் + அல்ல

இ) இரண்டு + இல்ல

ஈ) இரண்டு + அல்ல

4. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தந்து + உதவும்

ஆ) தா + உதவும்

இ) தந்து + தவும்

ஈ) தந்த + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) ஒப்புமை இல்லாத

ஆ) ஒப்பில்லாத

இ) ஒப்புமையில்லாத

ஈ) ஒப்புஇல்லாத


குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன

  • தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். 
  • சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். 

2. 'ஒன்றல்ல இரண்டல்ல' பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

'ஒன்றல்ல இரண்டல்ல' பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகள்

  • முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. 
  • புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்

சிறுவினா

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன

  • பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியமும்
  • அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் 
  • கலம்பக நூல்களும் 
  • எட்டுத்தொகையும் 
  • வான்புகழ் கொண்ட திருக்குறளும் 
  • அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும்

எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 2. மரபுக் கவிதை - உடுமலை நாராயண கவி பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. 'பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்?

உடுமலை நாராயணகவி

நாமக்கல் கவிஞர்

பாரதியார்

பாரதிதாசன் 

2. பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்

நாமக்கல் கவிஞர்

பாரதியார்

பாரதிதாசன் 

 உடுமலை நாராயணகவி 

3. "அந்தக் காலம் இந்தக் காலம்" என்ற சமுதாயப் பாடலை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்

உடுமலை நாராயணகவி

நாமக்கல் கவிஞர்

பாரதியார்

பாரதிதாசன் 

4. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்

பரணி

கலம்பகம்

தூது 

பிள்ளைத்தமிழ் 

5. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன்

ஓரி 

காரி 

நள்ளி 

வள்ளல் வேள்பாரி

6. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்

குமண வள்ளல்

காரி 

நள்ளி 

வள்ளல் வேள்பாரி

7. முகில் என்பதன் பொருள் 

மேகம்

முகிலன்

மூங்கில் 

அகில் 

8. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்

ஆ) பரிபாடல்

இ) பரணி

ஈ) அந்தாதி

9. வானில் ......... கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில்

ஆ) முகில்

இ) துகில்

ஈ) துயில்

10. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" என்று பாடியவர்

நாமக்கல் கவிஞர்

பாரதியார்

பாரதிதாசன் 

 உடுமலை நாராயணகவி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad