எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்- தொடர்

Top Post Ad

தொடர்

ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.

அவை,

1. எழுவாய் (the subject)

2. பயனிலை (the predicate)

3. செயப்படுபொருள் (the object)

எழுவாய் 

ஒரு செயலைச் செய்கின்ற பொருள் எழுவாய் எனப்படும். 

  • ஒரு சொற்றொடரில் யார்? எவன்? எது? எவள்? எவை? என்னும் வினாவிற்கு விடையாக தொடரில் வருபவை எழுவாய். 
  • தொடரின் முதலில் வரும் பெயர்ச்சொல்

எழுவாய் என்றால் என்ன?

ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.

எழுவாய் தொடர் என்றால் என்ன?

எழுவாய் எடுத்துக்காட்டு 

  • நீலன் பாடத்தைப் படித்தான்.
  • பாரி யார்?
  • புலி ஒரு விலங்கு.

இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.

எழுவாய் வேற்றுமையை விளக்குக

பயனிலை என்றால் என்ன?

முதலில் வரும் ஒரு சொற்றொடரின் பொருளை முடித்து நிற்கும் சொல் பயனிலை எனப்படும். 

  • தொடரின் இறுதியில் வரும் வினைச்சொல்

பயனிலை எடுத்துக்காட்டு 

ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.

  • கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
  • கரிகாலன் யார்?
  • கரிகாலன் ஒரு மன்னன்.

இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.

பயனிலை எத்தனை வகைப்படும்

3 வகைப்படும் 

  1. கரிகாலன் கல்லணையைக் கட்டினான்- வினை பயனிலை
  2. கரிகாலன் யார்? - வினா பயனிலை
  3. கரிகாலன் ஒரு மன்னன் - பெயர் பயனிலை

பயனிலை செயப்படுபொருள் மட்டும் உள்ள தொடர்கள்

  • பாடம் எழுதினார்.
  • புல் சாப்பிட்டது.

செயப்படுபொருள் என்றால் என்ன?

எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயப்படுபொருள் ஆகும். 

ஒரு தொடரில் எதை? அல்லது எவற்றை? என்னும் வினாவிற்கு விடையாக பொருள் அமைவது செயப்படுபொருள் ஆகும். 

  • எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் வரும். 

செயப்படுபொருள் எடுத்துக்காட்டு 

யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.

  • நான் கவிதையைப் படித்தேன்.
  • என் புத்தகத்தை எடுத்தது யார்?
  • நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.

இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள்கள்.

செயப்படுபொருள் வேற்றுமை விளக்குக

எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் எடுத்துக்காட்டு 

வள்ளி பாடம் படித்தாள். 

இதில், 

  • வள்ளி - எழுவாய் 
  • படித்தாள் - பயனிலை
  • பாடம் - செயப்படு பொருள்.  

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - வினா விடை மதிப்பீடு 

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீன்க்கொடி பறந்தது.

4. திருக்குறளை எழுதியவர் யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.


எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
வீரர்கள் காத்தனர்(வினை) நாடு 
பொதுமக்கள் எரித்தனர்(வினை) அந்நியத்துணி
பாண்டியன் பறந்தது(வினை) கொற்கைத் துறைமுகம் 
யார்எழுதியவர் திருக்குறள்
கபிலர் புலவர்(பெயர்) குறிஞ்சிப்பாட்டு
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்- தொடர்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

  1. குமார் கவிதையைப் படித்தான்.
  2. புலி மானை சாப்பிட்டது.
  3. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
  4. அவர் பாடம் எழுதினார்.
  5. கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.




Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.