TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழிற்பெயர் வகை அறிதல் என்ற பகுதி வருகிறது.
வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து தொழிற்பெயர் அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. சரியான தொழிற்பெயர் இணையைக் கூறுக
i) படு - பாடுதல்
ii) ஏறி - ஏறுதல்
iii) கூறு - கூறுதல்
iv) செல் - சொன்னாள்
A) i மட்டும்
B) i, ii & iii
C) iv & iii
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
இலக்கண குறிப்புகள் சில
வினைமுற்று பற்றி முழுமையாக அறிய
வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
- பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.
தொழிற்பெயர் :
தொழிலைக் காட்டுவது தொழிற்பெயர் எனப்படும்.
தொழில் என்பது ஒரு பொருளின் புனைப் பெயர்ச்சியோ அல்லது ஒரு செயலையோ குறிக்கும். (எ.கா) ஆட்டம், மகிழ்ச்சி, அசைதல்
தொழிற்பெயர் என்றால் என்ன?
- உழவர் செய்யும் தொழில் உழுதல்.
- தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்.
இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.
இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.
தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
(எ.கா.) படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்
ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
தொழிற்பெயர் எடுத்துக்காட்டு
- படித்தல்,
- ஆடல்,
- நடிப்பு,
- எழுதுதல்,
- பொறுத்தல்
- ஒழுகுதல், நோன்றல்
கீழ் உள்ள தொடரில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், தொழிற்பெயர்களை அறிவோம்.
- மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான்.
| மாதவி, கோவலன் | பெயர்ச்சொற்கள் |
| கண்டு, மகிழ்ந்தான் | வினைச்சொற்கள் |
| ஆடல் | தொழிற் பெயர் |
தொழிற்பெயர் எந்த இடத்தில் வரும்?
- படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
- உழவர் செய்யும் தொழில் உழுதல்
- தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்.
- இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
வேர்ச்சொல்லில் இருந்து தொழில் பெயர் அறிதல்
| வேர்ச்சொல் | தொழில் பெயர் |
|---|---|
| பாடு | பாடுதல் |
| செய் | செய்தல் |
| சொல் | சொல்லுதல் |
| காண் | காணுதல் |
| கொள் | கொள்ளுதல் |
| தின் | தின்றல் |
| நில் | நின்றல் |
| தா | தருதல் |
| தவிர் | தவிர்தல் |
| பதறு | பதறுதல் |
| வா | வருதல் |
| நடு | நடுதல் |
| கெடு | கெடுதல் |
| நிலை | நிலைத்தல் |
| படி | படித்தல் |
| சேர் | சேருதல் |
| அளி | அளித்தல் |
| உறங்கு | உறங்குதல் |
| துயில் | துயில்தல் |
| வாழ் | வாழ்தல் |
| வனை | வனைதல் |
| துவங்கு | துவங்குதல் |
| உண் | உண்டல் |
| பிழை | பிழைத்தல் |
| விரும்பு | விரும்பல் |
| உலாவு | உலாவுதல் |
| வெல் | வெல்லுதல் |
| வை | வைத்தல் |
| பேண் | பேணுதல் |
| செல் | செல்லல் |
| பயில் | பயிலுதல் |
| பார் | பார்த்தல் |
| நட | நடத்தல் |
| அகழ் | அகழ்தல் |
| பருகு | பருகல் |

Please share your valuable comments