பெயரெச்சம் - வேர்ச்சொல்லில் இருந்து பெயரெச்சம் அறிதல் TNPSC சொல் இலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்றுவினையெச்சம்வினையாலணையும் பெயர்பெயரெச்சம்தொழிற்பெயர் வகை அறிதல் என்ற பகுதி வருகிறது.

வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து பெயரெச்சம் அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. சரியான பெயரெச்ச இணையைக் கூறுக

i) படு - பாடி 

ii) ஏறி - ஏறிய 

iii) கூறு - கூறிய

iv) செல் - சென்று

A) i மட்டும்

B) ii & iii

C) iv & iii

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை 

இலக்கண குறிப்புகள் சில

வினைமுற்று பற்றி முழுமையாக அறிய

வினையெச்சம்

வினையாலணையும் பெயர்

பெயரெச்சம்

தொழில் பெயர் 

வேர்ச்சொல் அறிதல் 

  • வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
  • பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.

பெயரெச்சம்

எச்சம், பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்;இவ்வாறு ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்லே பெயரெச்சம்.இது முக்காலத்திலும் வரும்.

பெயரெச்சம் பற்றி முழுமையாக அறிய

பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடிய மாணவன்
  • நல்ல மாணவன்

இவ்வெடுத்துக்காட்டுகளில் ஓடிய, நல்ல என்பன எச்சங்கள். மாணவன் என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தமையால் பெயரெச்சங்கள் எனப்பட்டன.

  • இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் பெயரெச்சம்ஓடிய மாணவன்
நிகழ்காலப் பெயரெச்சம்ஓடுகிற மாணவன்
எதிர்காலப் பெயரெச்சம்ஓடும் மாணவன்

பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.

பெயரெச்சம் வகைகள்

  1. தெரிநிலைப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்

என இரு வகைப்படும்.

வேர்ச்சொல்லில் இருந்து பெயரெச்சம் அறிதல்

வேர்ச்சொல்பெயரெச்சம்
பாடுபாடிய 
செய்செய்த
சொல்சொல்லிய 
காண்கண்ட 
கொள்கொண்ட 
தின்தின்ற 
நில் நின்ற 
தா தந்த 
தவிர்தவிர்த்த
பதறுபதறிய 
வா வந்த 
நடுநட்ட  
கெடுகெட்ட
நிலைநிலைத்த 
படி படித்த 
சேர்சேர்ந்த
அளிஅளித்த
உறங்குஉறங்கிய 
துயில்துயின்ற 
வாழ்வாழ்ந்த 
வனைவனைந்த 
துவங்குதுவங்கிய 
உண் உண்ட 
பிழை பிழைத்த
விரும்புவிரும்பிய 
உலாவுஉலாவிய
வெல் வென்ற
வை வைத்த
பேண் பேணிய
செல்  சென்ற
பயில் பயின்ற
பார் பார்த்த 
நட நடந்த 
அகழ்அகழ்ந்த 
பருகு பருகிய 


எச்சம் என்றால் என்ன?

பால் உணர்த்தும் விகுதி பெறாமலும், முற்றுப் பெறாமலும் இருக்குமானால் எச்சம் என்பர்.

எச்சம் விளக்கம்

  • சிரித்து - எச்சம் - பால் விகுதிபெறாமல் உள்ளது. கருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவைப்படுகிறது.
  • சிரித்தான் - வினைமுற்று - பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்துள்ளது

சிரித்தான் என்ற வினைமுற்று சில இடங்களில் ‘ஆன்' என்னும் விகுதி குறைந்து சிரித்த எனவும், சிரித்து எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்; ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆன்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.

எச்சம் பொருள்

  • முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்
  • வினைமுற்றின் (ஆன்,ஆள்,..) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம்

எச்சம் எடுத்துக்காட்டு

  • பெயரெச்சம் - சிரித்த கயல்விழி.

சிரித்த என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அஃதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.

எச்சம், வினைமுற்று வேறுபாடு

வினைமுற்றுஎச்சம்
சிரித்தான்சிரித்து
ஆண்பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்துள்ளதுபால் விகுதிபெறாமல் உள்ளது.
கருத்து முடிந்துள்ளதுகருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவைப்படுகிறது.


எச்சம் எத்தனை வகைப்படும்?

எச்சச் சொற்களின் கருத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் மற்றொரு சொல் பெயராகவும் இருக்கலாம்; வினையாகவும் இருக்கலாம்.

எச்சம் வகைகள்

  1. பெயரெச்சம்
  2. வினையெச்சம்
என இரு வகைப்படும்.


பெயரெச்சம் , வினையெச்சம் வேறுபாடு

பெயரெச்சம்
வினையெச்சம்
சிரித்த பெண்சிரித்து மகிழ்ந்தான்
சிரித்த - எச்சம்சிரித்து - எச்சம்
பெண் - பெயர்மகிழ்ந்தான் - வினை


பெயரெச்சம் என்றால் என்ன?

எச்சம், பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்;இவ்வாறு ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்லே பெயரெச்சம்.இது முக்காலத்திலும் வரும்.

பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடிய மாணவன்
  • நல்ல மாணவன்

இவ்வெடுத்துக்காட்டுகளில் ஓடிய, நல்ல என்பன எச்சங்கள். மாணவன் என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தமையால் பெயரெச்சங்கள் எனப்பட்டன.

  • இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் பெயரெச்சம்ஓடிய மாணவன்
நிகழ்காலப் பெயரெச்சம்ஓடுகிற மாணவன்
எதிர்காலப் பெயரெச்சம்ஓடும் மாணவன்

பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.

பெயரெச்சம் வகைகள்

  1. தெரிநிலைப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்

என இரு வகைப்படும்.


தெரிநிலைப் பெயரெச்சம்

முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறும் எஞ்சி நிற்கும். இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

தெரிநிலை பெயரெச்சம் வாய்பாடு

செய்த, செய்கிற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள். செய்த என்பது இறந்த காலத்திற்கும், செய்கிற என்பது நிகழ்காலத்திற்கும், செய்யும் என்பது எதிர்காலத்திற்கும் உரிய வாய்பாடுகளாகும்.

தெரிநிலைப் பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடிய மாணவன்
  • எழுதிய புத்தகம்

இத்தொடரில் ஓடிய என்னும் எச்சம் மாணவன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். இவற்றுள் 'ஓடிய' என்பது ஓடுதல் செயலையும், இறந்த காலத்தையும் காட்டுகின்றது. எனவே ஓடிய காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் இது தெரிநிலைப் பெயரெச்சம் என அழைக்கப்படுகின்றது.

  • உண்ட இளங்கோவன்
உண்ணுதல்
செயல்
இறந்த காலம்காலம்
இளங்கோவன்செய்பவன்
கலம்கருவி
வீடுஇடம்
சோறுசெயப்படுபொருள்

உண்ட இளங்கோவன், உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம்.

உடன்பாடு தெரிநிலைப் பெயரெச்சம்உண்ட இளங்கோவன்
எதிர்மறை தெரிநிலைப் பெயரெச்சம்உண்ணாத இளங்கோவன்

குறிப்புப் பெயரெச்சம்

காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.தனக்கு அடையாளமாக 'அ'கர விகுதி பெற்று முடியும். இது பெயர்ச்சொல்லின் அடியாகப் பிறக்கும் என்பதறிக.

குறிப்புப் பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • நல்ல மாணவன்
  • பெரிய வீடு
  • அழகிய தோட்டம்

நல்ல மாணவன் இத்தொடரில் நல்ல என்னும் எச்சம், காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது. இவற்றுள் 'நல்ல' என்பது நன்மை என்னும் பண்புப் பெயரின் அடியாகப் பிறந்தமையையும் காலத்தையும் குறிப்பாகக் காட்டுகின்றது. எனவே காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பாகக் காட்டுவதால் இது குறிப்புப் பெயரெச்சம் என அழைக்கப்படுகின்றது. இது காலத்தைக் ( இன்று நல்ல மாணவன் , நேற்று நல்ல மாணவன் , நாளை நல்ல மாணவன் என நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் ) குறிப்பால் உணர்த்தும்.

உடன்பாடு குறிப்புப் பெயரெச்சம்நல்ல மாணவன்
எதிர்மறை குறிப்புப் பெயரெச்சம்தீய மாணவன்

எதிர்மறைப் பெயரெச்சம்

பெயரெச்சம் எதிர்மறை பொருளை உணர்த்தினால் அது எதிர்மறை பெயரெச்சம் எனப்படும். 

  •  பாடாத தேனீக்கள். 

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

எதிர்மறை பெயரெச்சத்தின் ஈற்றெழுத்து குறைந்து வந்தால் அது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் எனப்படும். 

  • பாடாத் தேனீக்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad