TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் என்ற பகுதி வருகிறது.
வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
TNPSC previous year question
1. சரியான வேர்ச்சொல் இணையைக் கூறுக
i) படு - பாடுதல்
ii) ஏறி - ஏறுதல்
iii) கூறு - கூறுதல்
iv) செல் - சொன்னாள்
A) i மட்டும்
B) ii & iii
C) iv & iii
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
இலக்கண குறிப்புகள் சில
வினைமுற்று பற்றி முழுமையாக அறிய
வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
- பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.
வேர்ச்சொல் சில
| வேர்ச்சொல் | வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழில் பெயர் |
|---|---|
| பாடு | பாடினார், பாடி, பாடியவர்,பாடிய, பாடுதல் |
| செய் | செய்தார், செய்து, செய்தவர், செய்த, செய்தல் |
| சொல் | சொன்னார், சொல்லி, சொன்னவர், சொல்லிய, சொல்லுதல் |
| காண் | கண்டார், கண்டு , கண்டவர், கண்ட, காணுதல் |
| கொள் | கொண்டாள், கொண்டு, கொண்டவர், கொண்ட, கொள்ளுதல் |
| தின் | தின்றாள், தின்று, தின்றவள், தின்ற, தின்றல் |
| நில் | நின்றார், நின்று, நின்றவர், நின்ற, நின்றல் |
| தா | தந்தான், தந்து, தந்தவர், தந்த, தருதல் |
| தவிர் | தவிர்த்தான், தவிர்த்து, தவிர்தவர், தவிர்த்த, தவிர்தல் |
| பதறு | பதறினான், பதறி, பதறியவர், பதறிய, பதறுதல் |
| வா | வந்தான், வந்து, வந்தவர், வந்த, வருதல் |
| நடு | நட்டான், நட்டு, நட்டவர் , நட்ட , நடுதல் |
| கெடு | கெடுவான், கெட்டு, கெடுத்தவர், கெட்ட, கெடுதல் |
| நிலை | நிலைத்தது, நிலைத்து, நிலைத்தவர், நிலைத்த, நிலைத்தல் |
| படி | படித்தான், படித்து, படித்தவர், படித்த, படித்தல் |
| சேர் | சேர்ந்தாள், சேர்ந்து, சேர்ந்தவர், சேர்ந்த, சேருதல் |
| அளி | அளிப்பான், அளித்து, அளித்தவர், அளித்த, அளித்தல் |
| உறங்கு | உறங்கினான், உறங்கி, உறங்கியவர், உறங்கிய, உறங்குதல் |
| துயில் | துயின்றான், துயின்று, துயின்றவர், துயின்ற, துயில்தல் |
| வாழ் | வாழ்ந்தார், வாழ்ந்து, வாழ்ந்தவர், வாழ்ந்த, வாழ்தல் |
| வனை | வனைந்தான், வனைத்து, வனைந்தவர், வனைந்த, வனைதல் |
| துவங்கு | துவங்கினான், துவங்கி, துவங்கியவர், துவங்கிய, துவங்குதல் |
| உண் | உண்டார், உண்டு, உண்டவர், உண்ட, உண்டல் |
| பிழை | பிழைத்தேன், பிழைத்து, பிழைத்தவர், பிழைத்த, பிழைத்தல் |
| விரும்பு | விரும்பினான், விரும்பி, விரும்பியவர், விரும்பிய, விரும்பல் |
| உலாவு | உலாவினான், உலாவி, உலாவியவர், உலாவிய, உலாவுதல் |
| வெல் | வென்றான், வென்று, வென்றவர், வென்ற, வெல்லுதல் |
| வை | வைத்தான், வைத்து, வைத்தவர், வைத்த, வைத்தல் |
| பேண் | பேணார், பேணி, பேணியவர், பேணிய, பேணுதல் |
| செல் | சென்றான், சென்று, சென்றவர், சென்ற, செல்லல் |
| பயில் | பயின்றான், பயின்று, பயின்றவர், பயின்ற, பயிலுதல் |
| பார் | பார்த்தார், பார்த்து, பார்த்தவர், பார்த்த, பார்த்தல் |
| நட | நடந்தான், நடந்து, நடந்தவர், நடந்த, நடத்தல் |
| அகழ் | அகழ்ந்தார், அகழ்ந்து, அகழ்ந்தவர், அகழ்ந்த, அகழ்தல் |
| பருகு | பருகுவான், பருகி, பருகியவர், பருகிய, பருகல் |

Hi Please, Do not Spam in Comments