வினைமுற்று - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல் TNPSC சொல் இலக்கணம்

Top Post Ad

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்றுவினையெச்சம்வினையாலணையும் பெயர்பெயரெச்சம்தொழிற்பெயர் வகை அறிதல் என்ற பகுதி வருகிறது.

வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. சரியான வினைமுற்று இணையைக் கூறுக

i) படு - பாடுதல் 

ii) ஏறி - ஏறினாள் 

iii) கூறு - கூறுதல்

iv) செல் - சொன்னாள்

A) i மட்டும்

B) ii & iv

C) iv & iii

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை 

இலக்கண குறிப்புகள் சில

வினைமுற்று பற்றி முழுமையாக அறிய

வினையெச்சம்

வினையாலணையும் பெயர்

பெயரெச்சம்

தொழில் பெயர் 

வேர்ச்சொல் அறிதல் 

  • வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
  • பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.

வினைமுற்றுகள் :

ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்த முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும்.

  • இது திணை, பால், எண், இடம், காலம் காட்டும்.
  • வேற்றுமை ஏற்காது.

எ.கா. பாடினார், வீழ்ந்தான்.

வினைமுற்று பற்றி முழுமையாக அறிய

வினைமுற்று என்றால் என்ன?

செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும். இது மூன்று காலங்களில் ஒன்றை உணர்த்தும்.

  • திணைபால்எண்இடம்ஆகியவற்றைக் காட்டும்.
  • வினைமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்;

வினைமுற்று சொற்கள், வினைமுற்று தொடர்கள்

  • வந்தான், வருகின்றான், வருவான்
  • அருளரசு வந்தான்
  • வளவன் நடந்தான்

இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர்.

வினைமுற்று எடுத்துக்காட்டு

'வந்தான், நடந்தான்' என்னும் வினைமுற்றுகள்

வினைமுற்று எத்தனை வகைப்படும்?

வினைமுற்று வகைகள்

  1. தெரிநிலை வினைமுற்று
  2. குறிப்பு வினைமுற்று
என இரு வகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று.

  • தெரிநிலை வினைமுற்றில் பகுதி செயலையும், விகுதி செய்பவனையும், இடைநிலை காலத்தையும் காட்டும்.

அவையாவன:

  1. வினையைச் செய்பவன்
  2. வினை செய்வதற்கு உரிய கருவி
  3. வினை செய்வதற்குரிய இடம்
  4. வினைக்குரிய செயல்
  5. வினை நிகழும் காலம்
  6. வினையால் செய்யப்படும் பொருள்

"செய்பவள் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவதுவினையே" - (ந.நூற்பா.320)


இந்நூற்பாவில் 'ஆறும்' என்னும் சொல்லில் உள்ள 'உம்' என்பது 'முற்றும்மை' ஆகும். இதனைச் 'சிறப்பும்மை' என்றும் கூறுவர்.

தெரிநிலை வினைமுற்று எடுத்துக்காட்டு

  • வரைந்தான்

'வரைந்தான்' என்னும் சொல்லை நோக்கிய மாத்திரத்தில் வரைதல் என்ற நிகழ்வு இறந்த காலத்தில் (காலம்) நடைபெற்றுள்ளது என அறிய முடிகிறது.

வரைந்தான் என்னும் வினை முற்று

வரைதல்செயல்
வரைந்தான்காலம்இறந்தகாலம்
அவன் வரைந்தான்செய்பவன்அவன்
அவன் தூரிகையால் வரைந்தான்கருவிதூரிகை
அவன் தூரிகையால் சுவரில் வரைந்தான்இடம்சுவர்
அவள் தூரிகையால் சுவரில் படம் வரைந்தான்செயப்படுபொருள்படம்

என எழுத இடமளிக்கிறது.

மேற்கூறிய ஆறும் சிறப்புக்குரியன என்பது அவர்கள் தரும் விளக்கம். இம்முறையில் பொருள் கொள்வதால் சிறப்பற்ற சிலவும் இவ்வினையால் அறியப்படும் என்பது தெரிகிறது. அவை 'இன்னதற்கு', 'இது பயன்' என்னும் வாய்பாட்டில் அமையும்.

அதாவது மேற்கூறிய எடுத்துக்காட்டில்,

  • யாரோ ஒருவர் கேட்டதற்காக வரைந்தான்;
  • பணம் பெற வேண்டும் என்னும் பயன் நோக்கி வரைந்தான்

முதலியனவற்றையும் பெற வாய்ப்புண்டு.

குறிப்பு வினை முற்று என்றால் என்ன?

குறிப்பு வினைமுற்று பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

  • தெரிநிலை வினை காட்டும் மேற்கூறிய ஆறினுள் வினை செய்பவனை மட்டும் உணர்த்தும்.
  • குறிப்பு வினை முற்று பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும்.
  • முக்காலத்தையும் குறிப்பாகக் காட்டும்.இவற்றில் காலம் காட்டும் இடைநிலைகள் இல்லை.

பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. - நன்னூல், 321


பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும் என்பதால் பெயர்ச் சொற்களின் வகைகளான 1. பொருள் 2. இடம் 3. காலம் 4. சினை 5. குணம் 6. தொழில் என்னும் ஆறு பெயர்களின் அடியாகவும் குறிப்பு வினை முற்றுப் பிறக்கும் எனப் பொருள்படும்.

குறிப்பு வினைமுற்று எடுத்துக்காட்டு

குழையன், பொன்னன்பொன் - பொருள்குழையை உடையனவாக இருக்கிறான்
நாடன், ஊரன், தென்னாட்டார்நாடு - இடம்நாட்டில் வாழ்பவன்
தையினள், சித்திரையள், ஆதிரையான்சித்திரை - காலம்தையில் பிறந்தவளாக இருக்கிறாள்
கண்ணன், மூக்கன்கண் - சினைகண்களை உடையவன்
கரியன், நல்லன்கருமை- பண்புநல்ல இயல்புகளை உடையவன்
நடிகன், நடையன், எழுத்தன்நடிப்பு- தொழில்நடித்தலைச் செய்பவன்


மேற்கூறிய குறிப்பு வினைமுற்றுகள் அறுவகைப் பெயர்ச்சொற்களின் அடியாகத் தோன்றின. இவற்றில் காலம் காட்டும் இடைநிலைகள் இல்லை. 'இருக்கிறான், இருக்கிறாள்' என்னும் இவற்றையே ஏனைய இருகாலங்களிலும் இருந்தான், இருந்தாள், இருப்பான், இருப்பாள் எனவும் கூறலாம். இப்படிக் கூறுவதால் குறிப்பு வினையானது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என அறியலாம்.

வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று  அறிதல்

வேர்ச்சொல்வினைமுற்று
பாடுபாடினார்
செய்செய்தார்
சொல்சொன்னார்
காண்கண்டார்
கொள்கொண்டாள்
தின்தின்றாள்
நில்நின்றார்
தா தந்தான்
தவிர்தவிர்த்தான்
பதறுபதறினான்
வா வந்தான்
நடுநட்டான்
கெடுகெடுவான்
நிலைநிலைத்தது
படி படித்தான்
சேர்சேர்ந்தாள் 
அளிஅளிப்பான்
உறங்குஉறங்கினான்
துயில்துயின்றான்
வாழ்வாழ்வார் 
வனைவனைந்தான் 
துவங்குதுவங்கினான்
உண்உண்டார்
பிழைபிழைத்தேன்
விரும்புவிரும்பினான் 
உலாவுஉலாவினான்
வெல்வென்றான்
வைவைத்தான்
பேண்பேணார்
செல் சென்றான்
பயில்பயின்றான்
பார்பார்த்தார்
நட நடந்தான்
அகழ்அகழ்ந்தார்
பருகுபருகுவான்


Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.