அயற்சொல் TNPSC - சொல் இலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : அயற்சொல் என்ற பகுதி வருகிறது.

பாடத்தலைப்புகள்(toc)

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. அயல்சொல்லற்ற தொடர் எது?

  • அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
  • அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
  • அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
  • அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது

2. அயல்மொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக

  • நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
  •  நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
  •  நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
  •  நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்

அயற்சொல் - பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுதல்

தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நல்ல தமிழில் ஒரு தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது தூய தமிழில் அமைந்த தொடர் எனக் கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிறமொழிச் சொற்களை நீக்குதல்

நம் செந்தமிழ் செழுந்தமிழாய்த் திகழவேண்டுமெனில், பிறமொழிச் சொற்கலப்பின்றி எழுதிப் பழகுதல் வேண்டும். பிறமொழிச் சொற்களைக் களைந்து, அவற்றுக்கேற்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி நல்ல நடையில், இனிய தமிழில் எழுதியும் பேசியும் பழகுவோம்.

கீழே உள்ள பகுதி பழைய 7 ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது.

 

அயற்சொல்தமிழ்ச்சொல்
அனுமதிஇசைவு
உபயம்திருப்பணியாளர் கொடை
ஆதவன்ஞாயிறு
உஷார்விழிப்பு
ஆரம்பம்தொடக்கம்
எதார்த்தம்இயல்பு
ஆஸ்திசொத்து
ஐதிகம்உலக வழக்கு
இம்சைதுன்பம்
காகிதம்தாள் 
இருதயம்நெஞ்சகம்
கிரீடம்மணிமுடி
ஈசன்இறைவன்
குபேரன்பெருஞ்செல்வன்
உபசரித்தல்விருந்தோம்பல்
அங்கத்தினர்

உறுப்பினர்

அதிகாரிஅலுவலர்
அதிபர்தலைவர்
அந்நியர்அயலார்
அபிஷேகம்நீராட்டு
அபூர்வம்

புதுமை

அலங்காரம்ஒப்பனை
அனுமதிஇசைவு
ஆபத்துஇடர்
ஆராதனைவழிபாடு
ஆசீர்வாதம்

வாழ்த்து

இலஞ்சம்கையூட்டு
இலாபம்வருவாய்
நமஸ்காரம்வணக்கம்
உத்தியோகம்ஆணை பணி

ஶ்ரீராமன், ஶ்ரீமதி 

திரு, திருமதி 
கிராமம்

சிற்றூர்

குமாரன்மகன்
சாவிதிறவுகோல்
நஷ்டம்இழப்பு

நாஷ்டா

சிற்றுண்டி
பாக்கி

நிலுவை

கஜானாகருவூலம்
விஞ்ஞானம்அறிவியல்
சர்வகலாசாலைபல்கலைக்கழகம்

கீழே உள்ள பகுதி புதிய 7 ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்

  • விஞ்ஞானம் - அறிவியல் 
  • ஆச்சரியம் - வியப்பு
  • பரீட்சை - தேர்வு 
  • லட்சியம் - குறிக்கோள்
  • ஆரம்பம் - தொடக்கம்
  • அபாயம் - இடர் 
  • அதிபர் - தலைவர்
  • சதம் - நூறு
  • தேகம் - உடல் 
  • சரித்திரம் - வரலாறு 
  • சத்தம் - ஒலி 
  • ஆதி - முதல்
  • உத்தரவு - சட்டம்
  • தினம் - நாள் 
  • சந்தோசம் - மகிழ்ச்சி 
  • பண்டிகை - திருவிழா 
  • கேணி - கிணறு 
  • பண்டிகை - திருவிழா 
  • அச்சன் - தந்தை 
  • வெள்ளம் - நீர்ப் பெருக்கு
  • ஜமக்காளம் - விரிப்பு
  • வியாபாரம் - வணிகம்
  • அசல் - மூலம்  
  • வேடிக்கை - காட்சி
  • பெற்றம் - பசு

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 6. பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

பாடத்தலைப்புகள்(toc)

இலக்கண விதிகள் சில 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad