வழுவுச் சொற்களை நீக்குதல்

கொடுக்கப்பட்ட நான்கு தொடரில் மூன்று தொடர்களில் வழுவுச் சொற்களைக் கொண்டு பிழைகள் இருக்கும். ஒரு தொடர் மட்டும்  பிழையின்றி இருக்கும். பிழையின்றி இருக்கும் தொடரைக் கண்டுபிடிப்பதே இப்பகுதியாகும்.

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 6. பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

பாடத்தலைப்புகள்(toc)

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

TNPSC previous year question 

1.  'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' - இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்

  • ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
  • ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
  • ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
  • ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்

கீழ்க்காணும் உரைப்பத்தியில் அடிகோடிட்ட எழுத்துகளிலுள்ள கொச்சைச்சொற்களைத் திருத்தி எழுதுக.

(கண்விழித்து, வியர்வை, ஆற்றங்கரை, பிட்டு விற்று, வெண்கலம், வயிற்றுப்பிழைப்பு,வேண்டும்)

ஆத்தங்கரைக்கு மேற்கே உள்ளது அந்த அழகிய சிற்றூர். அவ்வூரில் தனித்து வாழும் இசக்கிக் கிழவிக்கு உதவுவதற்கு யாரும் இல்லை. முதுமையினால் உடலும் நடையும் தளர்ந்து போனவள். அதற்காக யாரிடமும் கையேந்தி வாழ விரும்பாதவள். வேர்வை சிந்தி உழைத்து உண்ண வேண்டும் என்று எண்ணுபவள். இதற்காகப் புட்டு வித்துத் தன் வயித்துப்பிழைப்பைத் தேடிக் கொண்டாள். வெங்கலப் பாத்திரத்தில் வைத்திருக்கும் அவள் சமைத்த புட்டை உண்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேணும். ஊர்த்திருவிழா நாள்களில் புட்டுக்காகக் கூட்டம் அலை மோதும். அந்நாள்களில் இரவெல்லாம் கண் முழித்துப் புட்டு சமைப்பதற்கான வேலைகளைச் செய்வாள்.

திருத்தம்

  • ஆத்தங்கரை - ஆற்றங்கரை
  • வேர்வை - வியர்வை
  • புட்டு வித்து - பிட்டு விற்று
  • வயித்துப்பிழைப்பு - வயிற்றுப்பிழைப்பு
  • வெங்கலம் - வெண்கலம்
  • வேணும் - வேண்டும்
  • கண்முழித்து - கண்விழித்து

கீழ்க்காணும் முற்றுச்சொற்றொடரில் அமைந்துள்ள வழுக்களைத் திருத்தி எழுதுக. 

1. அரசர் பலர் வந்தார்கள்.

அரசர் பலர் வந்தனர் 

2. மயில்கள் ஆடியது.

மயில்கள் ஆடின.

3. கனிமொழி பாடம் படித்தாய்.

கனிமொழி பாடம் படித்தாள்.

4. ஔவையார், அதியமானிடம் பரிசில் பெறச் சென்றாள்.

ஔவையார், அதியமானிடம் பரிசில் பெறச் சென்றார்.

5. வயலில் மாடுகள் மேய்ந்தது. 

வயலில் மாடுகள் மேய்ந்தன.

பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு

1. தலகாணி - தலையணை

2. வேர்வை - வியர்வை

3. வூடு - வீடு

4.தண்ணீ - தண்ணீர் 

5.வெளக்கு - விளக்கு


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad