சீவகசிந்தாமணி

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி. இந்நூலை எழுதியவர் சோழர் அரச குலத்தில் பிறந்த திருத்தக்கதேவர். திருத்தக்கதேவர் குறித்த சில குறிப்புகள் மற்றும் சீவகசிந்தாமணி குறித்த சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடத்தலைப்புகள்(toc)

திருத்தக்கதேவர் ஆசிரியர் குறிப்பு:

திருத்தக்க தேவர் பிறந்த குலம்

திருத்தக்கதேவர் சோழர் அரச குலத்தில் பிறந்தவர். 

திருத்தக்க தேவர் சமயம்

இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். 

திருத்தக்க தேவர் காலம்

இவரது காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு ஆகும். 

இவர் பாடிய மற்றொரு நூல் நரி விருத்தம் ஆகும்.

சிறப்புப் பெயர் 

திருத்தக்க தேவர் வேறு பெயர்கள்
  • தமிழ் கவிஞர்களின் இளவரசன் 

இயற்றிய நூல்கள்

திருத்தக்க தேவர் இயற்றிய நூல்கள்
  • நரி விருத்தம் 
  • உப்பிலிப் புழுக்கல் 

சீவகசிந்தாமணி நூற்குறிப்பு :

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி. 

  • விருதப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம்.
  • 13 இலம்பகம் 3145 செய்யுள்கள் உள்ளன.

சீவகன்

இந்நூலின் கதைத் தலைவன் சீவகன். அவன் பெயரை இணைத்துச் சீவகசிந்தாமணி என இந்நூல் பெயர் பெற்றது என்பர். 

  • தந்தை - சச்சந்தன்
  • தாய்- விஜயமாதேவி 

  • சீவகன் எட்டு பெண்களை மணந்ததால்,  இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு. 

சீவகசிந்தாமணி பாடல்கள்

வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச் 
சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே.

-திருத்தக்கதேவர்(code-box)

பொருள்: 

மலையின்மீது வெண்மேகங்கள் தவழ்ந்து செல்கின்றன. அவ்வாறு மலையைவிட்டு வெண்மேகம் நகர்வது பாம்பு தோலுரிப்பதனைப் போன்று இருக்கிறது. மேகம் நகர்ந்துவிட்டபின், அம் மலையானது தோலுரிக்கப்பட்ட பாம்புபோல் இருக்கிறது. அங்கே வீழ்கின்ற அருவியின் ஒலி, மத்தளம்போன்று ஒலிக்கின்றது. தேன் உண்ணும் வண்டுகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. ஆகையால், இக்காட்சி ஒரு நாடகம் நடப்பது போன்று இருக்கிறது.

சொற்பொருள்: 

விண் - வானம்; 

வரை - மலை; 

முழவு - மத்தளம்; 

மதுகரம் - தேன் உண்ணும் வண்டு.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ்  7. ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள் பகுதிக்காகக் பழைய 7ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - சீவகசிந்தாமணி மாதிரி வினாக்கள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திருத்தக்கதேவர் இயற்றிய வேறு நூல்

அ. கரி விருத்தம்

ஆ. நரி விருத்தம்

இ. பரி விருத்தம்

குறுவினாக்கள்

1. சீவகசிந்தாமணி - குறிப்பு எழுதுக.

2. திருத்தக்கதேவர் - குறிப்பு எழுதுக.

TNPSC previous year question 

1. திருத்தக்கதேவர் ... அரச குலத்தில் பிறந்தவர். 

சோழர் 

சேரர்

பாண்டியர்

பல்லவர்

2. திருத்தக்கதேவர் ...... சமயத்தைச் சார்ந்தவர். 

சமணம்

வைணவம்

சைவம் 

புத்தம் 

3. திருத்தக்கதேவர் காலம் 

கி.பி. ஒன்பது நூற்றாண்டு

கி.பி. பத்தாம் நூற்றாண்டு

கி.பி. பதிமூன்று நூற்றாண்டு

கி.பி. பதினொன்று நூற்றாண்டு

5. திருத்தக்கதேவர் பாடிய நூல் 

நரி விருத்தம் 

கரி விருத்தம்

கிளி விருத்தம் 

பரி விருத்தம்

6. சீவகசிந்தாமணி கதைத் தலைவன் 

சீவகன்

கணியன்

சிந்தாமணி

மணி

7. இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.

சீவகசிந்தாமணி

மணிமேகலை

சிலப்பதிகாரம்

குண்டலகேசி 

8. தமிழ் கவிஞர்களின் இளவரசன் 

திருத்தக்கதேவர்

புகழேந்திப் புலவர் 

ஜெயங் கொண்டார் 

குமரகுருபரர்

9. மயிற்பொறி விமானத்தின் செயல்திறன் குறித்து இடம்பெற்ற நூல்

சீவகசிந்தாமணி

மணிமேகலை

சிலப்பதிகாரம்

குண்டலகேசி 

10. சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்

இளங்கோவடிகள்

சீத்தலை சாத்தனார் 

திருத்தக்கதேவர்

நாதகுத்தனார்

11. சீவக சிந்தாமணியின் கதைத் தலைவன் யார்?

சீவகன் 

சிந்தாமணி 

இளங்கோவடிகள்

திருத்தக்கதேவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad