பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுதல்

கொடுக்கப்பட்ட நான்கு தொடரில் மூன்று தொடர்களில் வழுவுச் சொற்களைக் கொண்டு பிழைகள் இருக்கும். ஒரு தொடர் மட்டும்  பிழையின்றி இருக்கும். பிழையின்றி இருக்கும் தொடரைக் கண்டுபிடிப்பதே இப்பகுதியாகும்.

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 6. பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

பாடத்தலைப்புகள்(toc)

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

TNPSC previous year question 

1. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

  • அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
  • அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
  • அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
  • அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது

2. பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக

  • நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
  •  நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
  •  நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
  •  நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்

பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுதல்

தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நல்ல தமிழில் ஒரு தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது தூய தமிழில் அமைந்த தொடர் எனக் கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிறமொழிச் சொற்களை நீக்குதல்

நம் செந்தமிழ் செழுந்தமிழாய்த் திகழவேண்டுமெனில், பிறமொழிச் சொற்கலப்பின்றி எழுதிப் பழகுதல் வேண்டும். பிறமொழிச் சொற்களைக் களைந்து, அவற்றுக்கேற்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி நல்ல நடையில், இனிய தமிழில் எழுதியும் பேசியும் பழகுவோம்.

கீழே உள்ள பகுதி பழைய 7 ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது.

 
பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
அனுமதி இசைவு
உபயம் திருப்பணியாளர் கொடை
ஆதவன் ஞாயிறு
உஷார் விழிப்பு
ஆரம்பம் தொடக்கம்
எதார்த்தம் இயல்பு
ஆஸ்தி சொத்து
ஐதிகம் உலக வழக்கு
இம்சை துன்பம்
காகிதம் தாள் 
இருதயம் நெஞ்சகம்
கிரீடம் மணிமுடி
ஈசன் இறைவன்
குபேரன் பெருஞ்செல்வன்
உபசரித்தல் விருந்தோம்பல்
அங்கத்தினர்

உறுப்பினர்

அதிகாரி அலுவலர்
அதிபர் தலைவர்
அந்நியர் அயலார்
அபிஷேகம் நீராட்டு
அபூர்வம்

புதுமை

அலங்காரம் ஒப்பனை
அனுமதி இசைவு
ஆபத்து இடர்
ஆராதனை வழிபாடு
ஆசீர்வாதம்

வாழ்த்து

இலஞ்சம் கையூட்டு
இலாபம் வருவாய்
நமஸ்காரம் வணக்கம்
உத்தியோகம் ஆணை பணி

ஶ்ரீராமன், ஶ்ரீமதி 

திரு, திருமதி 
கிராமம்

சிற்றூர்

குமாரன் மகன்
சாவி திறவுகோல்
நஷ்டம் இழப்பு

நாஷ்டா

சிற்றுண்டி
பாக்கி

நிலுவை

கஜானா கருவூலம்
விஞ்ஞானம் அறிவியல்
சர்வகலாசாலை பல்கலைக்கழகம்

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

(குறிப்பு: தனிக்குறிலை அடுத்து ரகர ஒற்று (ர்) வந்தால் அது பிறமொழிச் சொல்) 

1. அர்ச்சுனன் வில் வித்தையில் சிறந்தவன் ஆவான்.

2. 'தர்மம் தலைகாக்கும்' என்பது பழமொழி.

3. சிறந்த நிர்வாகி எனப் பாரிவேந்தனை அனைவரும் பாராட்டினர்.

4. கர்ப்பூரம் ஏற்றி இறைவனை வழிபடுவது இயல்பு.

5. 'எண்ணித் துணிக கர்மம்' என்பது வள்ளுவர் வாக்கு.

6. சுற்றுலாவில் தான் கண்ட இயற்கைக்காட்சிகளைக் கலையரசி வர்ணித்துக் கூறினாள்.

 7. புதிதாகக் கட்டப்பட்ட அந்த வீட்டிற்கு நேற்றுத்தான் வர்ணம் பூசப்பட்டது.

8. சர்ப்பத்தினைக் கண்டதும், கீரிப்பிள்ளை அதனைத் தாக்க முற்பட்டது.

9. நீ பேசுவதின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.

10. தாய், தன் குழந்தைக்காகக் கோவிலில் அர்ச்சனை செய்து இறைவனை வழிபட்டாள்.

பிறமொழிச் சொற்கள் 

  1. அர்ச்சுனன்
  2. தர்மம்
  3. நிர்வாகி 
  4. கர்ப்பூரம்
  5. கர்மம் 
  6. வர்ணித்துக்
  7. வர்ணம்
  8. சர்ப்பத்தினைக் 
  9. அர்த்தம்
  10. அர்ச்சனை

பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக.

1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

2.பெற்றோரிடம் பர்மிசன் வெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.

பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please share your valuable comments

Top Post Ad