இன்றைய சூழலில் வாழ்வில் மட்டுமல்லாமல், வேளாண்மையில்கூடச் செயற்கையின்மீது ஆர்வம் மிகுந்துவிட்டது. சில நேரம் பயிர்களெல்லாம் பூச்சிகள் தாக்கி விளைச்சல் பாதிக்குமேல் குறைந்து, செய்த செலவுகூட வராது. செயற்கை விவசாயதால் வரும் பாதிப்பு நீங்க இயற்கை வேளாண்மையைப்பற்றி இன்னும் விரிவாக 7ம் வகுப்பு பழைய பாடப் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்வோம்.
- செயற்கை விவசாயம்
- உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஏன் பயன்படுத்துதல் கூடாது?
- இயற்கை வேளாண்மைக் கூறுகள் என்றால் என்ன?
- நிலத்தை எப்படி உழுதல் வேண்டும்?
- நன்செய், புன்செய் என்றால் என்ன?
- விதைப்பதற்குரிய காலம் சுட்டும் பழமொழிகளை எழுதுக.
- இவற்றுக்கெல்லாம் விதைகளை எங்கிருந்து வாங்குவார்கள்?
- விதைகளை எவ்வாறு பயன்படுத்துவார்கள்?
- கரும்பும் வாழையும் அதனைப்போன்றே நடுவார்களா?
- பயிர்களுக்கு இடைவெளி எவ்வளவு விடுதல் வேண்டும்?
- அந்தக் காலத்தில் யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் முதலிய உரங்கள் இருந்தனவா?
- தொழு உரங்கள் என்றால் என்ன?
- இயற்கை வேளாண்மை அல்லது அங்கக வேளாண்மை என்றால் என்ன?
- அங்ககச் சான்றளிப்பு என்றால் என்ன?
- பஞ்சகவ்வியம் என்றால் என்ன?
- பயிரிடும்பின்
- பயிரிடும்முன்-மண்ணை எவ்வாறு பண்படுத்துதல் வேண்டும்?
- களையெடுத்தல்
- இயற்கை வேளாண்மையின் பயன்
- நினைவு கூர்க
- தொடர்பு உடையவை
- 7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - இயற்கை வேளாண்மை மாதிரி வினாக்கள்
- TNPSC previous year question
செயற்கை விவசாயம்
செயற்கை விவசாயம் செய்வதால் நிலம், நீர், காற்று, ஆகாயம் முதலிய வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்படும். பயிர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் புதிதுபுதிதாக நோய்கள் வரும். வருங்காலத் தலைமுறைக்கு வேளாண்மையின் பயன்பாடுகள் அரிதாகி விடும்போல் இருக்கிறது.
இதற்கு மாற்றுவழியே இல்லையா, உறுதியாக உண்டு. "வருமுன் காப்போம்" என்னும் முதுமொழிக் கிணங்க, இயற்கை வேளாண்மையை நம் வேளாண் பெருமக்கள் பின்பற்ற வேண்டும் என்பதே நமது கருத்து.
இக்காலத்தில் அஃது இயலுமா, ஏன் இயலாது? தற்போது வேளாண்துறையில் இயற்கை வேளாண்மைக்கு எனத் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஏன் பயன்படுத்துதல் கூடாது?
நல்ல விளைச்சல் எடுக்கலாம் என்று நினைத்துத் தேவைக்குமேல் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதனால் மண்ணின் தன்மையையும், நீரின் தன்மையையும் கெடுக்கும் அளவுக்குச் சூழ்நிலை உருவாகிவிட்டது.
இயற்கை வேளாண்மைக் கூறுகள் என்றால் என்ன?
- உழுதல்,
- விதைத்தல்,
- தொழு உரமிடுதல்,
- நீர் பாய்ச்சுதல்,
- களை எடுத்தல்,
- காத்தல்
முதலியன இயற்கை வேளாண்மைக் கூறுகளாம். இக்கூறுபாடுகளை நன்கு உணர்ந்து, நம் தமிழர் உழவுத்தொழிலை இயற்கை முறையில் சிறப்பாக மேற்கொண்டனர்; உலகத்தார் பசிப்பிணியைப் போக்கி வந்தனர்; வருகின்றனர்.
நிலத்தை எப்படி உழுதல் வேண்டும்?
விதைக்கும்முன் நிலத்தைப் பண்பட உழுதல் வேண்டும். அதாவது, ஒருபலம் எடையுள்ள மண்ணைக் கால்பலம் எடை அளவிற்கு உலரும்வரை உழுதிடுதல் வேண்டும். இதனைத்தான் வள்ளுவர் குறளில் கூறுகிறார்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் - திருக்குறள்
"அகல உழுவதனைவிட ஆழ உழுதல் நன்று" என்பதுபோல. அப்பொழுதுதான் கீழிருக்கும் மண் மேலும், மேலிருக்கும் மண் கீழும் புரளும். மண்ணிலுள்ள களை விதைகள் முளைக்கும். மீண்டும் மீண்டும் உழவு செய்யும்போது களைகள் நீங்கி, மண் புழுதியாகும்.
நன்செய், புன்செய் என்றால் என்ன?
நன்செய்
நீர்வளமிக்கது நன்செய் நிலம்.
இந்நிலத்தில் நெல், கரும்பு, வாழை முதலிய பயிர்கள் விளையும்.
புன்செய்
நீர்வளம் குறைந்த பகுதி புன்செய்.
இதனை வானம் பார்த்த பூமி என நம் வேளாண் மக்கள் கூறுவர்.
இந்நிலத்தில் விளையும் பயிர்கள் பருவமழையை நம்பியே இருக்கும். இந்நிலத்தில் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, துவரை, கொள்ளு, காராமணி முதலிய பயிர்கள் விளையும்.
புன்செய் நிலத்தில் நீர் இல்லாமல் எப்படிப் பயிர் விளையும்?
எல்லாம் மழையை நம்பித்தான்.
விதைப்பதற்குரிய காலம் சுட்டும் பழமொழிகளை எழுதுக.
"பருவத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை" என்னும் பழமொழிகளுக்கேற்பக் காலத்தே பயிர்செய்து பயன் கண்டனர் நம் முன்னோர்.
இவற்றுக்கெல்லாம் விதைகளை எங்கிருந்து வாங்குவார்கள்?
வேளாண் பெருமக்கள் தாங்கள் விளைவித்த பயிர்களிலிருந்து நல்ல விதைகளைத் தேர்வுசெய்து, தூய்மைப்படுத்திப் பாதுகாத்துப் பின்பு பயன்படுத்துவர்; அல்லது, சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்துவர்.
விதைகளை எவ்வாறு பயன்படுத்துவார்கள்?
விதை நெல்லை முதலில் நாற்றங்காலில் விதைத்து இருபத்தொரு நாள்முதல் இருபத்தைந்து நாள்வரை வளர்ப்பர். பின்னர், அதனைப் பறித்துப் பண்படுத்தப்பட்ட சேற்று நிலத்தில் நடுவர். பிறகு, முறையாக நீர் பாய்ச்சிக் களையெடுத்து இயற்கை உரமிட்டுக் காப்பர்.
கரும்பும் வாழையும் அதனைப்போன்றே நடுவார்களா?
அவையும் அப்படித்தான். கரும்பை வெட்டிக் கணுக்களாகவும், வாழையின் கன்றுகளைக் கிழங்குடனும் வெட்டி எடுத்து நடுவர்.
பயிர்களுக்கு இடைவெளி எவ்வளவு விடுதல் வேண்டும்?
எந்தெந்தப் பயிர்க்கு எவ்வளவு இடைவெளி வேண்டுமென்பதனை, நம் முன்னோர்,
'நெல்லுக்கு நண்டோட ;
கரும்புக்கு ஏரோட;
வாழைக்கு வண்டியோட;
தென்னைக்குத் தேரோட'
எனக் கூறிச் சென்றுள்ளனர். இவ்வாறு இடைவெளி அமையுமானால், பயிரில் நன்கு காற்றுப் புகும்; பயிர்களும் செழித்து வளரும்; நல்ல பயனும் தரும் என்பர்.
அந்தக் காலத்தில் யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் முதலிய உரங்கள் இருந்தனவா?
நம் முன்னோர் தொழு உரங்களையே பயன்படுத்தித் தரமான விளைச்சலைக் கண்டனர்.
தொழு உரங்கள் என்றால் என்ன?
இலை தழைகள், ஆட்டு எரு, மாட்டு எரு கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, இலுப்பம் பிண்ணாக்கு எனப் பல இயற்கை உரங்கள் உள்ளன. இவற்றைத் தொழு உரங்கள் என்பர்.
இயற்கை வேளாண்மை அல்லது அங்கக வேளாண்மை என்றால் என்ன?
இரண்டும் ஒன்றுதான். அங்கக வேளாண்மை என்பது செயற்கை உரம், பூச்சி பூஞ்சாணக்கொல்லி மருந்துகளைப் பயிர்களுக்குப் பயன்படுத்தாமல் உணவு உற்பத்தி செய்வது.
அங்ககச் சான்றளிப்பு என்றால் என்ன?
இயற்கை அல்லது அங்ககப் பண்ணையத்திற்குச் சான்று வழங்கும் நிறுவனத்தினர் ஆய்வுசெய்து, தகுதியிருப்பின் பண்ணைக்குச் சான்று வழங்குவது.
பஞ்சகவ்வியம் என்றால் என்ன?
பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் அதாவது,
- கோமயம்,
- சாணம்,
- பால்,
- தயிர்,
- நெய்
ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்வதே பஞ்சகவ்வியம்.
பயிரிடும்பின்
பசுவிடமிருந்து கிடைக்கும் பஞ்சகவ்வியம் பயிரில் தெளிப்பதனால், புழு, பூச்சிகள் பயிர்களை நெருங்கா. இது தவிர வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, இலுப்பம் பிண்ணாக்கு முதலியவற்றையும் வயல்களுக்கு உரமாகப் பயன் படுத்துவர்.
பயிரிடும்முன்-மண்ணை எவ்வாறு பண்படுத்துதல் வேண்டும்?
பயிரிடும்முன் சணப்பை, அவுரி, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு முதலியவற்றை வளர்த்து, அவற்றை அப்படியே உழுது தழையுரமாகப் பயன்படுத்துவர். இதனால், மண்ணின் வளம்கெடாமல் பேணிப் பாதுகாக்கப்படுவதனோடு பயிர்களும் நன்கு வளரும்.
களையெடுத்தல்
பயிரில் புல் பூண்டுகளும் வளர்ந்துவிடுமே!
மனிதருள் தீயோர் இருப்பதனைப்போலப் பயிரிலும் வேண்டாத புல் பூண்டுகள் வளரத்தான் செய்யும். இவற்றை உழவர் களைந்துவிடுவர். அதற்குக் களையெடுத்தல் என்பது பெயர். இதனையே வான்புகழ் வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும்
நன்றதன் காப்பு. - குறள், 1038
காப்பு என்றால் என்ன?
- காப்பு என்றால் காத்தல் என்பது பொருள்.
பயிர்களைப் பூச்சிகள் தாக்காத வகையிலும், ஆடுமாடுகள் மேயாத வகையிலும் தவிராமல் பாதுகாத்து வருதல் வேண்டும்.
'கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்' என்பர் நம் முன்னோர்.
இயற்கை வேளாண்மையின் பயன்
எண்ணற்ற நன்மைகள் உண்டு. முக்கியமாக நிலம், நீர், காற்று, வான்வெளி இவை சிதைவடையாமல் பாதுகாக்கப்படுகின்றன. மக்களுக்கு உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பர்.
'உணவே மருந்து; மருந்தே உணவு' என்னும் முதுமொழிக்கேற்ப, நம் முன்னோர்களின் உணவுமுறை இருந்து வந்தது. அதனை நாமும் கடைப்பிடிப்போம்.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தொடர்பு உடையவை
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை கட்டுரை
இயற்கை வேளாண்மையின் இன்றைய தேவை
இயற்கை வேளாண்மை உரங்கள்
இயற்கை வேளாண்மை பயன்கள்
இயற்கை வேளாண்மையின் அவசியம்
இயற்கை வேளாண்மையின் இன்றைய தேவை யாது
இயற்கை வேளாண்மை முக்கியத்துவம்
இயற்கை வேளாண்மை பேச்சு போட்டி
இயற்கை வேளாண்மை அவசியம்
இயற்கை வேளாண்மை கட்டுரை முன்னுரை
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - இயற்கை வேளாண்மை மாதிரி வினாக்கள்
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ. வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம்
1. மதுரை
2. சென்னை
3. கோவை
ஆ. வேளாண்தொழிலில் உள்ள கூறுகள்
1. இரண்டு
2. நான்கு
3.ஆறு
இ. வானம் பார்த்த பூமி என்பது
1. நன்செய்
2. புன்செய்
3. பொன்செய்
ஈ. கேட்காத கடனும் பார்க்காத பயிரும்........
1. பாள்
2. பாழ்
3.பால்
உ) பஞ்சகவ்வியம் என்பது ....... பொருள்களால் ஆனது.
1. மூன்று
2. நான்கு
3. ஐந்து
2. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது
அ. நெல் - நண்டோட
ஆ. கரும்பு- ஏரோட
இ. வாழை - வண்டியோட
ஈ. தென்னை - தேரோட
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அ. அங்கக வேளாண்மையின் வேறுபெயர் இயற்கை வேளாண்மை
ஆ. பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களைக் கலந்து செய்வது பஞ்சகவ்வியம்
குறுவினாக்கள்
1. உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் என் பயன்படுத்துதல் கூடாது?
2. நிலத்தை எவ்வாறு உழுதல் வேண்டும்?
3. பயிர்களுக்கு இடைவெளி எவ்வளவு விடுதல் வேண்டும்?
5. விதைப்பதற்குரிய காலம் சுட்டும் பழமொழிகளை எழுதுக.
சிறுவினாக்கள்
1. மண்ணை எவ்வாறு பண்படுத்துதல் வேண்டும்?
2. பஞ்சகவ்வியம் ஆக்குவது எப்படி?
3. பயிர்க்காப்புச் செய்வது எவ்வாறு?
4. அங்கக வேளாண்மை என்றால் என்ன?
நெடுவினாக்கள்
1. இயற்கை வேளாண்மையின் தேவையை விளக்குக
இயற்கை வேளாண்மையின் தேவைகள்
- தேவைக்குமேல் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதனால் மண்ணின் தன்மையையும், நீரின் தன்மையையும் கெடுக்கும் அளவுக்குச் சூழ்நிலை உருவாகிவிடுகிறது.
- நிலம், நீர், காற்று, வான்வெளி இவை சிதைவடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
- மக்களுக்கு உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது.
- மண்ணின் வளம்கெடாமல் பேணிப் பாதுகாக்கப்படுவதனோடு பயிர்களும் நன்கு வளரும்.
2. உரம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தீமைகளை விவரிக்க
உரம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தீமைகள்
- தேவைக்குமேல் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதனால் மண்ணின் தன்மையையும், நீரின் தன்மையையும் கெடுகிறது.
- நிலம், நீர், காற்று, வான்வெளி இவை சிதைவடைகிறது.
- மக்களுக்கு உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்காமல் உடல் நலம் கேடு அடைகிறது.
- மண்ணின் வளம் கெடுகிறது.
- செயற்கை விவசாயம் செய்வதால் நிலம், நீர், காற்று, ஆகாயம் முதலிய வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
- பயிர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் புதிதுபுதிதாக நோய்கள் வரும்.
3. வேளாண்மையில் கருத்தில் கொள்ளவேண்டியவற்றை விளக்குக.
வேளாண்மையில் கருத்தில் கொள்ளவேண்டியவை
- பயிரிடும்முன் மண்ணை பண்படுத்துதல் வேண்டும்
- விதைக்கும்முன் நிலத்தைப் பண்பட உழுதல் வேண்டும்.
- இயற்கை வேளாண்மை அல்லது அங்கக வேளாண்மை
- தொழு உரங்கள்
- விதைப்பதற்குரிய காலம்
- நல்ல விதைகளைத் தேர்வுசெய்து, தூய்மைப்படுத்திப் பாதுகாத்துப் பின்பு பயன்படுத்துதல்; அல்லது, சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்துதல்
- களையெடுத்தல்
- பயிர் காப்பு
- உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துதல் கூடாது.
TNPSC previous year question
1. வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம்
மதுரை
சென்னை
கோவை
2. வேளாண்தொழிலில் உள்ள கூறுகள்
இரண்டு
நான்கு
ஆறு
3. வானம் பார்த்த பூமி என்பது
நன்செய்
புன்செய்
பொன்செய்
4. கேட்காத கடனும் பார்க்காத பயிரும்........
பாள்
பாழ்
பால்
5. பஞ்சகவ்வியம் என்பது ....... பொருள்களால் ஆனது.
மூன்று
நான்கு
ஐந்து
6. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது
அ. நெல் - நண்டோட
ஆ. கரும்பு- ஏரோட
இ. வாழை - வண்டியோட
ஈ. தென்னை - தேரோட
7. காப்பு என்பதன் பொருள்
காத்தல்
8. இயற்கை வேளாண்மை என்பதன் மற்றொரு பெயர்
அங்கக வேளாண்மை
9. நீர்வளமிக்க நிலம்
நன்செய்
10. நீர்வளம் குறைந்த பகுதி
புன்செய்
11. "வானம் பார்த்த பூமி" என நம் வேளாண் மக்கள் கூறுவது
புன்செய்
Please share your valuable comments