கம்பர் பற்றிய குறிப்புகள்

கல்வியில் பெரியர் கம்பர், கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் எனப் புகழப்படும் கம்பர் பற்றிய குறிப்புகள் கீழே.

பாடத்தலைப்புகள்(toc)

கம்பர் ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் : கம்பர்

பிறந்த ஊர் : தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது.

ஆதரித்தவர் : சடையப்ப வள்ளல்

இயற்றிய நூல்கள் : கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.

சிறப்புகள்: கல்வியில் பெரியர் கம்பர், கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

காலம் : பன்னிரண்டாம் நூற்றாண்டு

7ம் வகுப்பு தமிழ்,இலக்கியம்,TNPSC பொதுத்தமிழ் இலக்கியம்,

சிறப்பு பெயர்கள்

  • கவிச்சக்கரவர்த்தி,
  • கல்வியிற் பெரியவர்

கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்படுபவர்- எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை

நவீனக் கம்பர் என்று அழைக்கப்படுபவர் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை 

கம்பர் இயற்றிய நூல்கள் 

  • சரசுவதி அந்தாதி 
  • சட கோபரந்தாதி 
  • அற்புத திருவந்தாதி 
  • திருக்கை வழக்கம் 
  • சிலை எழுபது 
  • ஏர் எழுபது 
  • கம்பராமாயணம்

உழவின் சிறப்பு குறித்த கம்பர் பாட்டு 

மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை.

-கம்பர்(code-box)

பொருள்: 

உழவா! நின் கைகள், ஏர் பிடித்து உழவு செய்கின்ற கைகளாம்;

வேற்படையைக் கையிலே பிடித்துள்ள மன்னர்களும் ஆர்வத்தோடு நோக்குகின்ற கைகளாம்; 

மோதிரம் அணிந்துள்ள உன் கைகள், வருபவர்க்கு எல்லாம் வரையாது வழங்கும் கைகளாம். 

ஏழை மக்களின் வறுமைத் துன்பமாகிய பசிப்பிணியைப் போக்கும் கைகளாம்; 

என்றும் உழும் தொழிலே உலகில் நிலையானது;

வேளாண் செய்வோரின் கைகளே என்றென்றும் உயிர்களுக்கு அடைக்கலம் அளிக்கின்ற கைகளாம்.

சொற்பொருள்:

மேழி - கலப்பை, ஏர்; 

வேந்தர் - மன்னர்; 

ஆழி - மோதிரம்; 

சூழ்வினை - உண்டாகும் வறுமைத் துன்பம்; 

காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர். 

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 3. கம்பராமாயணம் தொடர்பான செய்திகள் பகுதிக்காகப் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மாதிரி வினாக்கள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேந்தர் என்பதன் பொருள்

அ. அமைச்சர்

ஆ. வள்ளல்

இ. மன்னர்

2. ஆழி என்பதன் பொருள்

அ. சிலம்பு

ஆ. தோடு

இ. மோதிரம்

குறுவினா

கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

கம்பர் இயற்றிய நூல்கள் : 

கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.

உரிய இணையைத் தேர்ந்தெடுக்க.(தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது)

அ. ஆழி - மோதிரம்

ஆ. உழவின் சிறப்பு - கம்பர்

இ. மேழி - கலப்பை, ஏர்

சிறுவினா

உழவனின் கைகளைக் கம்பர் எவ்வாறு சிறப்பித்துக் கூறுகிறார்?

கம்பராமாயணம் சிறந்த தொடர்கள் 

  • உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல் - கம்பர்
  • பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" - கம்பராமாயணம், 1:2:36 
  • உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயாம் தீர்வர் - கம்பர்
  • ஓர், அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - கம்பர்

விருந்து போற்றுதல் குறித்து கம்பராமாயணம்

 கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே" - கம்பராமாயணம், 1:2:36 

அறுவை மருத்துவம் குறித்து கம்பர்

உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி

அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயாம் தீர்வர் (code-box)

என்னும் கம்பர் வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றது.

TNPSC previous year question 

1. கம்பர் இயற்றிய நூல்களில் பொருந்தாதது?

கம்பராமாயணம்

சடகோபரந்தாதி

ஏரெழுபது

ஏர் நூற்றைம்பது


2. 'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' என்று பாடியவர்

கம்பர்

3. கம்பனின் அமுதக் கவிதைகளுக்குக் இதன் அலைகள் இசையமைக்கிறது என்று தாராபாரதி கூறுகிறார்

கங்கை

4. "உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி" என்று அறுவை மருத்துவம் குறித்து கூறியவர்

கம்பர்

5. கம்பர் பிறந்த ஊர் 

தேரழுந்தூர், மயிலாடுதுறை

6. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்

சடையப்ப வள்ளல்

7. "ஓர், அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்" என்றவர்

கம்பர்

8. வேந்தர் என்பதன் பொருள்

அ. அமைச்சர்

ஆ. வள்ளல்

இ. மன்னர்

9. ஆழி என்பதன் பொருள்

அ. சிலம்பு

ஆ. தோடு

இ. மோதிரம்

10. "கல்வியிற் பெரியவர்" என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர்

கம்பர்

11. கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்படுபவர்

 எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad