மரபுச்சொற்கள்

வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும். மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும். தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு வரும் சில மரபுகள் குறித்து இங்குக் காண்போம்.

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

பாடத்தலைப்புகள்(toc)

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

மரபுச்சொற்கள்

  • நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும்.
  • மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவது மரபுப்பிழை.
  • யானைக்கன்று என்பதே மரபுச்சொல். இதனை யானைக்குட்டி எனக் கூறுவது மரபுப்பிழை.
  • "நாய் கத்தியது" எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல் கூடாது. "நாய் குரைத்தது" என்பதே உரிய மரபுத்தொடர்.
மரபுச்சொற்கள்

 

இளமை மரபுச்சொற்கள்

காய்களின் இளமை மரபுச்சொற்கள்

  • அவரைப்பிஞ்சு
  • வெள்ளரிப்பிஞ்சு
  • கத்தரிப்பிஞ்சு
  • தென்னங்குரும்பை
  • வாழைக்கச்சல்
  • மாவடு

விலங்குகள் இளமை மரபுச்சொற்கள்

  • குருவிக்குஞ்சு
  • கழுதைக்குட்டி
  • மான்கன்று
  • சிங்கக்குருளை
  • கோழிக்குஞ்சு
  • எருமைக்கன்று
  • நாய்க்குட்டி
  • புலிப்பறழ்
  • ஆட்டுக்குட்டி
  • பன்றிக்குட்டி
  • பூனைக்குட்டி
  • கீரிப்பிள்ளை 
  • குதிரைக்குட்டி 
  • குரங்குக்குட்டி
  • யானைக்கன்று
  • அணிற்பிள்ளை
  • எலிக்குஞ்சு
  • பசுக்கன்று
  • நாய்க் குட்டி
  • புலிக்குட்டி (புலிப்பறழ்)

பறவைகளின் ஒலி மரபுச்சொற்கள்

  • குயில் கூவும்
  • கிளி கொஞ்சும்
  • மயில் அகவும்
  • கூகை குழறும்
  • காகம் கரையும்
  • ஆந்தை அலறும்
  • கிளி பேசும், கொஞ்சும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • வண்டு முரலும்
  • ஆந்தை அலறும்
  • கழுகுகள் அலறும்
  • குருவி கீச்சிடும்
  • கோட்டான் குழறும் (கூகை) 
  • வாத்து கத்தும்
  • தேனீ ரீங்காரமிடும்

விலங்குகளின் ஒலி மரபுச்சொற்கள்

  • சிங்கம் முழங்கும், கர்ச்சிக்கும் 
  • நரி ஊளையிடும்
  • குதிரை கனைக்கும்
  • யானை பிளிறும்
  • ஆடு கத்தும்
  • எருது எக்காளமிடும்
  • குரங்கு அலப்பும்
  • பூனை சீறும்
  • எலி கீச்சிடும்
  • புலி உறுமும்
  • புறா குனுகும்
  • நாய் குரைக்கும்
  • பாம்பு சீறும்.
  • கழுதைப் புலி கத்தும்
  • கழுதை கத்தும்
  • தவளை கத்தும் 
  • நரி ஊளையிடும் 
  • பசு கதறும் 
  • பன்றி உறுமும்
  • அணில் கீச்சிடும்
  • கரடிகள் உறுமும்

வினைமரபுச்சொற்கள்


  • அப்பம் தின்
  • காய்கறி அரி
  • நெல் தூற்று
  • நீர் பாய்ச்சு
  • களை பறி
  • பாட்டுப் பாடு
  • இலை பறி
  • பழம் தின்
  • மலர் கொய்
  • அம்பு எய்தார்.
  • ஆடை நெய்தார்.
  • உமி கருக்கினாள்.
  • பூப் பறித்தாள்.
  • மரம் வெட்டினான்.
  • மாத்திரை விழுங்கினான்.
  • சோறு உண்டான்.
  • தண்ணீர் குடித்தான்,
  • பால் பருகினாள்.
  • கூடை முடைந்தார்.
  • சுவர் எழுப்பினான்.
  • முறுக்குத் தின்றான்.
  • நீர் குடித்தான்

பூ

  • அரும்பு: தோற்றநிலை
  • முகை(மொட்டு): விரியத் தொடங்கும் நிலை
  • மலர்(அலர்): மலர்ந்த நிலை
  • வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை
  • செம்மல்: வாடின நிலை

தாவரத்தின் அடி

  • தாள்: நெல், கேழ்வரகு
  • தண்டு: கீரை, வாழை
  • கோல்: நெட்டி,மிளகாய்ச்செடி
  • தூறு: குத்துச்செடி,புதர்
  • தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம்
  • கழி : கரும்பின் அடி
  • கழை : மூங்கிலின் அடி
  • அடி: புளி, வேம்பு

தாவரத்தின் பிஞ்சு

  • பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
  • பிஞ்சு: இளம் காய்
  • வடு: மாம்பிஞ்சு
  • மூசு: பலாப்பிஞ்சு
  • கவ்வை: எள்பிஞ்சு
  • குரும்பை: தென்னை, பனை
  • முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
  • இளநீர்: முற்றாத தேங்காய்
  • நுழாய்: இளம்பாக்கு
  • கருக்கல்: இளநெல்
  • கச்சல்: வாழைப்பிஞ்சு

கெட்டுப்போன கனி


  • சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல்: சுருங்கிய பழம்
  • சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
  • வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு
  • அளியல்: குளுகுளுத்த பழம்
  • அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
  • சொண்டு: பதராய்ப் போன மிளகாய்

கெட்டுப்போன காய்

  • கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்
  • தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
  • அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்

தாவரங்களின் இளம் பருவம்

  • நாற்று: நெல், கத்தரி
  • கன்று: மா, புளி, வாழை
  • குருத்து: வாழையில்
  • பிள்ளை: தென்னையின்
  • மடலி அல்லது வடலி: பனையின்
  • பைங்கூழ்: நெல், சோளம்

கொழுந்து வகை

  • துளிர் அல்லது தளிர்: நெல், புல்
  • முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு
  • குருத்து : சோளம், கரும்பு, தென்னை, பனை
  • கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.

தாவரங்களின் குலை வகை

  • கொத்து: அவரை, துவரை
  • குலை: கொடி முந்திரி
  • தாறு: வாழைக் குலை
  • கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்;
  • அலகு அல்லது குரல்: நெல்,தினை முதலியவற்றின் கதிர்:
  • சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி.

தாவரங்களின் கிளைப்பிரிவுகள்

  • கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
  • கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு:
  • கிளை: கொம்பின் பிரிவு:
  • சினை: கிளையின் பிரிவு:
  • போத்து: சினையின் பிரிவு:
  • குச்சு: போத்தின் பிரிவு:
  • இணுக்கு: குச்சியின் பிரிவு.

தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்

  • மா, பலா, வாழை - இலை
  • ஈச்சம், தென்னை, பனை - ஓலை
  • கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை
  • நெல், புல், தினை - தாள்
  • அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு
  • சோளத் தட்டு
  • நெல்தாள்
  • ஆவரங்குழை 
  • கேழ்வரகுத் தட்டை
  • வாழைத் தண்டு
  • கம்பந்தட்டு
  • ஈச்ச ஓலை
  • தினைத்தாள் 
  • பலா இலை
  • தென்னை ஓலை

பூச்சிகள், பறவைகள், விலங்குகள் - இருப்பிட மரபுச் சொற்கள்

  • கரையான் புற்று
  • ஆட்டுப் பட்டி
  • குதிரைக் கொட்டில்
  • மாட்டுத் தொழுவம்
  • கோழிப் பண்ணை
  • குருவிக் கூடு
  • சிலந்தி வலை
  • எலி வளை
  • நண்டு வளை
  • யானைக்கூடம்

செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம்

  • பூஞ்சோலை
  • பூந்தோட்டம்
  • வாழைத் தோட்டம் 
  • வெற்றிலைத் தோட்டம் 
  • கம்பங்கொல்லை
  • சோளக் கொல்லை
  • மாந்தோப்பு
  • தென்னந்தோப்பு
  • பனங்காடு
  • வேலங்காடு 
  • கொய்யாத் தோப்பு
  • நெல்வயல்
  • தேயிலைத் தோட்டம் 
  • முந்திரித் தோப்பு
  • பலாத் தோப்பு
  • ஆலங்காடு
  • இலுப்பைத் தோட்டம்
  • சவுக்குத் தோப்பு
  • புளியந்தோப்பு

பெயர்களுக்கு பொருத்தமான வினைகள்

  • காய்கறியை அரி 
  • மரம் வெட்டு
  • அப்பம் தின்
  • ஏர் உழு 
  • கதிர் அறு
  • நார் கிழி
  •  கிளையை ஒடி
  • களைபறி
  • கல்உடை
  • இலை பறி
  • கூரை வேய்
  • அம்பு எய் 
  • சந்தனம் பூசு
  •  சோறு உண்
  • வரப்புக் கட்டு
  • விதையை விதை 
  • தாள் அடி
  • பழம் தின் 
  • மணி அடி
  • படம் வரை
  • தோசை சுடு
  • இட்லி அவி 
  • நீர் அருந்து
  • தேனை நக்கு
  •  நீர் பாய்ச்சு
  • விளக்கு ஏற்று
  • நெல் தூற்று 
  • பாட்டுப் பாடு
  • திரியைக் கொளுத்து
  • குடம் வனை
  • விடை கூறு 
  • தயிர் கடை
  • கோலம் இடு
  • சோறு சமை
  • பாய் பின்னு
  • கூடை முடை
  • விதையை விதை
  • தீ மூட்டு 
  • ஓவியம் வரை
  • சந்தனம் பூசு
  • வண்ணம் தீட்டினார்

நினைவுகூர்க

பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad