தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும். சான்றாக,தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுக்குத் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.
பாடத்தலைப்புகள்(toc)
தாவரங்களின் இலை வகைகள் - Leaf type of plants in Tamil Language
தாவர இலை வேறு பெயர்கள்
- இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை:
- தாள்: நெல்,புல் முதலியவற்றின் இலை:
- தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை;
- ஓலை: தென்னை, பனை முதலியவற்றின் இலை;
- சண்டு: காய்ந்த தாளும் தோகையும்;
- சருகு: காய்ந்த இலை.
தாவர இலைப் பெயர்கள்
ஆல், அரசு, மா,பலா, வாழை |
இலை |
அகத்தி, பசலை, முருங்கை |
கீரை |
அருகு, கோரை | புல் |
நெல், வரகு | தாள் |
மல்லி | தழை |
சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
கரும்பு, நாணல் | தோகை |
பனை, தென்னை | ஓலை |
கமுகு | கூந்தல் |
தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள் - Words that refer to the tips of the plant in Tamil Language
தாவர நுனி பெயர்கள் - Plant tip names
- துளிர் அல்லது தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து:
- முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து;
- குருத்து : சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
- கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.
தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான (காய்களையோ கனிகளையோ) சொற்கள்:
தாவர குலை பெயர்கள்
- கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை;
- குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை;
- தாறு: வாழைக் குலை;
- கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்;
- அலகு அல்லது குரல்: நெல்,தினை முதலியவற்றின் கதிர்:
- சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி.
நினைவுகூர்க
சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது?
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
தொடர்புடையவை
- ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள்
- ஒரு தாவரத்தின் பிஞ்சு வகையை குறிப்பதற்கான சொற்கள்
- தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்
- கெட்டுப்போன கனிக்கும் காய்க்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்
- தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள்
- தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்
- தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான (காய்களையோ கனிகளையோ) சொற்கள்
- தாவரங்களின் கிளைப்பிரிவுகள்
-
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் ஏழு நிலைகள்
- பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள்
- தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்: மணிவகை
Please share your valuable comments