திருக்குறள் தொடர்பான செய்திகள்

மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் 'உலகப் பொது மறை' என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்: வாழ்வில் பின்பற்றுவோம்.

பாடத்தலைப்புகள்(toc)


திருவள்ளுவர் குறிப்பு

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்கவில்லை. 

உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுருத்தியவர் திருவள்ளுவர். 

திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். 

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

ஊர், பெற்றோர் - இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

பிறந்த ஊர் - முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

தாய் தந்தை பெயர் - முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

காலம் - கி.மு. 31.

திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்த books on Amazon 

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு 

தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.(alert-passed)

இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:

கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.

எடுத்துக்காட்டு : 2013 + 31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)

திருவள்ளுவர் வேறு பெயர்கள் 

  • இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
  • தெய்வப்புலவர்
  • நான்முகனார்
  • மாதானுபங்கி
  • செந்நாப்போதர்
  • பெருநாவலர் 
  • பொய்யில் புலவர் 
  • நாயனார்
  • தேவர்
  • முதற்பாவலர்
  • வான்புகழ் வள்ளுவர்

திருக்குறள் நூல் குறிப்பு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 

குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள். இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்பெறுகிறது.

இந்நூல்,

  •  அறத்துப்பால், 
  • பொருட்பால், 
  • இன்பத்துப்பால்

 என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. 

இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. 

ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.

  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

திருக்குறள் வேறு பெயர்கள் 

இந்நூலை 
  • முப்பால், 
  • பொதுமறை, 
  • தமிழ்மறை 
  • உலகப் பொதுமறை
  • வாயுறை வாழ்த்து

எனவும் கூறுவர். 

திருக்குறள் சிறப்புகள் 

"திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.  

இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.

திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது. 

டாக்டர் கிரௌல், தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார். (alert-success)

இது, தமிழ்மொழியிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.

மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள்.(alert-success)

அன்புடைமை அதிகாரம் 

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

 புன்கணீர் பூசல் தரும் (code-box)

பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை; அன்புக்கு உரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே அன்பு, கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
  • ஆர்வலர் - அன்புடையவர்; 
  • புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்;
  • பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.(code-box)

பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர். அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கு என்று எண்ணிடுவர்.

  • என்பு - எலும்பு - இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது

3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு. (code-box)

பொருள்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதனைப்போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.
  • வழக்கு - வாழ்க்கைநெறி; 
  • ஆருயிர் - அருமையான உயிர்; 
  • என்பு - எலும்பு

4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

 நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.(code-box)

பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.

  • ஈனும் - தரும்; 
  • ஆர்வம் - விருப்பம்; வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் பொருள். 
  • நண்பு - நட்பு 


5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

 இன்புற்றார் எய்தும் சிறப்பு. (code-box)

பொருள்: அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். 
  • வையகம் - உலகம்;
  • என்ப - என்பார்கள்

6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.(code-box)

பொருள்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர்; வீரத்திற்கும் அன்புதான் துணை. 
  • மறம் - வீரம்; கருணை, வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்

7. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம். *(code-box)

பொருள்: எலும்பு இல்லாத உயிர்களை வெயில் வருத்தி அழிப்பதுபோல, அன்பில்லாத  உயிர்களை அறம் வருத்தி அழிக்கும்.
  • என்பிலது - எலும்பு இல்லாதது (புழு) 
  • அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்

8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.(code-box)

பொருள்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது.
  • அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத; 
  • வன்பாற்கண் - வன்பால் + கண் - பாலை நிலத்தில். 
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல; 
  • வற்றல்மரம் - வாடிய மரம்

9. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

 அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.(code-box)

பொருள்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்க்குக் கை, கால் முதலிய உடல் உறுப்புகளால் என்ன பயன்?

  • புறத்துறுப்பு -உடல் உறுப்புகள்; 
  • எவன் செய்யும் - என்ன பயன் ?; 
  • அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு

10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

 என்புதோல் போர்த்த உடம்பு. (code-box)
பொருள் - அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம். அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்பு தான். அங்கு உயிர் இல்லை.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

பொருள் கூறுக.

வையம் - உலகம் 

மறம் - வீரம் 

என்பு - எலும்பு

தளிர்த்தற்று - தளிர்த்ததுபோல

வற்றல்மரம் - வாடிய மரம்

நண்பு - நட்பு 

வழக்கு - வாழ்க்கைநெறி

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்

2. திருக்குறள் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

3. திருக்குறள் உலகப் பொதுமறை  எனப் போற்றப்படுகிறது.

கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

 1. திருக்குறளில் ......... அதிகாரங்கள் உள்ளன

அ) 233 ஆ) 1333 இ) 133

2. திருக்குறள் ............. நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு ஆ) பதினெண்கீழ்க்கணக்கு

இ) எட்டுத்தொகை

3. உலகப்பொதுமறை எனப் போற்றப்படுவது.


அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) நான்மணிக்கடிகை

விடுபட்ட சீர்களை நிரப்புக


1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

2. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம் 

குறுவினாக்கள்


1. என்பு என்பதன் பொருள் யாது ?
என்பு என்பதன் பொருள் - எலும்பு

2. அன்புடையார் இயல்பு யாது?
அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கு என்று எண்ணிடுவர்.

3. 'அன்பில்லாத வாழ்க்கை தளிர்க்காது'
 - எதனைப் போல ?
பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது.

சிறுவினாக்கள்


1. அன்புடையவரின் சிறப்புகள் யாவை ?
அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.
அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். 
அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர்; வீரத்திற்கும் அன்புதான் துணை. 

2. அன்பு இல்லாத வாழ்க்கை எத்தகையது ?
அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம். அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்பு தான். அங்கு உயிர் இல்லை.
நெஞ்சில் அன்பு இல்லாதவர்க்குக் கை, கால் முதலிய உடல் உறுப்புகளால் என்ன பயன்?
பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது.

இனியவை கூறல் அதிகாரம்


இனியவை கூறல் என்பது இனிமை பயக்கும் சொற்களைப் பேசுதல்.

1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

 செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.(code-box)

பொருள்: அன்பு கலந்து வஞ்சனை இல்லாத மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
  • ஈரம் - அன்பு;
  • அளைஇ - கலந்து; 
  • படிறு - வஞ்சம்; 
  • செம்பொருள் - மெய்ப்பொருள்.

2. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

 இன்சொலன் ஆகப் பெறின்.(code-box)

பொருள்: உள்ளம் விரும்பி ஒருவருக்குக் கொடுத்து உதவுவது நல்லது; முகம் மலர்ந்து ஒருவரைப் பார்த்து இனிய சொற்களைக் கூறுதல் அதனைவிடவும் நல்லது.  
  • அகன் - அகம், உள்ளம்; 
  • அமர்- விருப்பம்; 
  • அமர்ந்து - விரும்பி
  • முகன் - முகம்; 
  • இன்சொல் - இனியசொல்
  • இன்சொலன்- இனிய சொற்களைப் பேசுபவன்.

3. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

 இன்சொ லினிதே அறம்.(code-box)

பொருள்: முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். 
  • அமர்ந்து - விரும்பி; 
  • அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து;
  • இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே.

4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு,(code-box)

பொருள்: எல்லாரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுவோரிடம், துன்பம் தரும் வறுமை அணுகாது.
  • துன்புறூஉம் - துன்பம் தரும்; 
  • துவ்வாமை - வறுமை; 
  • யார் மாட்டும் - எல்லாரிடமும்;
  • இன்புறூஉம் - இன்பம் தரும்.

5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

 அணியல்ல மற்றுப் பிற.(code-box)
பொருள்: பணிவு உடையவனாகவும் இன்சொல் பேசுபவனாகவும் விளங்குவதே ஒருவனுக்கு உண்மையான அணிகலன் ஆகும். உடல் அழகுக்காக அணியும் பிற எல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகா.
  • ஒருவற்கு - ஒருவனுக்கு; 
  • அணி - அழகுக்காக அணியும் நகைகள்.

6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 

நாடி  இனிய சொலின். *(code-box)

பொருள்: பிறர்க்கு நன்மையானவற்றை விரும்பி இனிமை உடைய சொற்களைச் சொன்னால், பாவங்கள் தேய்ந்து குறையும்; அறம் வளர்ந்து பெருகும். 
  • அல்லவை - பாவம்;
  • நாடி - விரும்பி.

7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.(code-box)

பொருள்: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
  • நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து; 
  • நன்றி - நன்மை; 
  • பயக்கும் - கொடுக்கும்; 
  • தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்.

8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பந் தரும். *(code-box)

பொருள்: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
  • சிறுமை - துன்பம்; 
  • மறுமை - மறுபிறவி; 
  • இம்மை - இப்பிறவி.

9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

  வன்சொல் வழங்கு வது.(code-box)

பொருள்: இனிய சொற்கள் இன்பம் உண்டாக்குவதனைக் கண்ட பின்னும், ஒருவன் கடுஞ்சொற்களைப் பேசுவது ஏனோ ?
  • இனிதீன்றல் - இனிது + ஈன்றல்; 
  • ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
  • வன்சொல் - கடுஞ்சொல்
  • எவன்கொலோ - ஏனோ?

10. இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.*(code-box)

பொருள்: இன்பம் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது, துன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது, கனிகள் இருக்கும்போது காய்களை விரும்பி உண்பதனைப் போன்றது.
இருக்கிறதா?
  • கவர்தல் - நுகர்தல்; 
  • அற்று - அதுபோன்றது. 

செய்யுள் மொழி

  • எவன் கொலோ ?

திருக்குறளில் இடம்பெறும் இச்சொற்கள் தரும் பொருள். என்ன? ஏனோ? என்ன பயன் கருதியோ? என்பது பொருள்.

செய்யுளில் ஓசைக்காகவும் அழுத்தம் தருவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் - கொல். இது பெரும்பாலும் ஐயப்பொருளில் வரும்.

ஒரு பெண்ணைப் பார்த்து,

  • 'மான் கொல் ? மயில் கொல் ?'

என்றால், இவள் மானோ மயிலோ எனக் கூறுவதாகப் பொருள். இது செய்யுள் வழக்கு.

பொருள் கூறுக.

அ. படிறு - வஞ்சம் 

ஆ. அமர் - விருப்பம் 

ஓரிரு சொற்களில் விடை எழுதுக.

அ. துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது ?

துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் வறுமை

ஆ. எப்போது அறம் பெருரும்?

பிறர்க்கு நன்மையானவற்றை விரும்பி இனிமை உடைய சொற்களைச் சொன்னால், பாவங்கள் தேய்ந்து குறையும்; அறம் வளர்ந்து பெருகும். 

ஓரிரு தொடர்களில் விடை எழுதுக.

அ. உள்ளம் விரும்பிக் கொடுப்பதனைவிட சிறந்தது எது?

உள்ளம் விரும்பி ஒருவருக்குக் கொடுத்து உதவுவது நல்லது; முகம் மலர்ந்து ஒருவரைப் பார்த்து இனிய சொற்களைக் கூறுதல் அதனைவிடவும் நல்லது.  

ஆ. ஒருவருக்கு உண்மையான அணிகலன்களாகத் திகழ்வன எவை ?

பணிவு உடையவனாகவும் இன்சொல் பேசுபவனாகவும் விளங்குவதே ஒருவனுக்கு உண்மையான அணிகலன் ஆகும்.

திருக்குறள் மேற்கோள்கள்

எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார் திருவள்ளுவர். அவற்றில் சில இங்கே விளக்கப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு(code-box)

அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். அதுபோல ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம்.

வான் சிறப்பு

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி(code-box)

மழை உரியகாலத்தில் பெய்யாது போனால், உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும். 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை(code-box)

உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.

நீத்தார் பெருமை

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்(code-box)

முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்: முடியாது என்பவர் சிறியோர்.

மக்கட்பேறு

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது(code-box)

தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்(code-box)

தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.

அன்புடைமை

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு(code-box)

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு(code-box)

அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.

இனியவை கூறல்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற (code-box)

பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.

இனிய உளவாக இன்னாத கூறல் 

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று(code-box)

இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.

வீட்டிற்கு வந்த விருந்தினரைப் போற்றுதல், இனிய சொற்களைப் பேசுதல், பிறர் பொருளை விரும்பாமை, ஊக்கத்துடன் செயல்படுதல், பயனற்ற சொற்களைப் பேசாமல் இருத்தல் ஆகிய அறங்களைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்துகளை அறிவோம் வாருங்கள்.

விருந்தோம்பல்

1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

 மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று (code-box)

அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

2. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து  (code-box)

மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.

கள்ளாமை

3. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

 கள்ளத்தால் கள்வேம் எனல் (code-box)

அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.


4. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 

ஆவது போலக் கெடும். (code-box)

களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்.

ஊக்கமுடைமை

5. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

 நில்லாது நீங்கி விடும். (code-box)

ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.

6. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

 ஊக்கம் உடையான் உழை.(code-box)

தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.

7. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு. (code-box)

தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப்பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.

8. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (code-box)

எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணத்தைக் கைவிடக் கூடாது.

பயனில சொல்லாமை

9. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

 பெரும்பயன் இல்லாத சொல். (code-box)

நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.

10. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

 சொல்லில் பயன்இலாச் சொல். (code-box)

பயனுடைய சொற்களை மட்டுமே பேசுக. பயன் இல்லாத சொற்களைப் பேசாமல் விட்டு விடுக.

திருக்குறள் மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

அ) நம் முகம் மாறினால்

ஆ) நம் வீடு மாறினால்

இ) நாம் நன்கு வரவேற்றால் 

ஈ) நம் முகவரி மாறினால்

2. நிலையான செல்வம்

அ) தங்கம் 

ஆ) பணம்

இ) ஊக்கம்

ஈ) ஏக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள்.......சொற்களைப் பேசமாட்டார்கள்.

அ) உயர்வான 

ஆ) விலையற்ற

இ) பயன்தராத 

ஈ) பயன் உடைய

4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பொருளு+டைமை

ஆ) பொரு+ளுடைமை

இ)பொருள் +உடைமை

ஈ) பொருள்+ளுடைமை

5. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) உள்ளுவதுஎல்லாம்

ஆ) உள்ளுவதெல்லாம்

இ) உள்ளுவத்தெல்லாம்

ஈ) உள்ளுவதுதெல்லாம்

6. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பயனிலா 

ஆ) பயன்னில்லா 

இ) பயன்இலா 

நயம் அறிக

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்

இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

உள்ளத்தால் - உள்ளலும்

கள்ளத்தால் - கள்வேம்

எதுகைச் சொற்கள்

உள்ளத்தால் - கள்ளத்தால்

உள்ளலும் - கள்வேம்


அறன் வலியுறுத்தல்

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. (code-box)

உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே. 

2. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். (code-box)

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.

ஈகை

3. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து(code-box)

இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும். 

4. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.(code-box)

இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.

இன்னா செய்யாமை

5. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

 நன்னயம் செய்து விடல்(code-box)

நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்.

6. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.(code-box)

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை. 

7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 

மாணாசெய் யாமை தலை.(code-box)

நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவுகூடச் செய்யக் கூடாது.

கொல்லாமை

8. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை(code-box)

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது.

பெரியாரைப் பிழையாமை

9. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

 போற்றலுள் எல்லாம் தலை(code-box)

ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது. அதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளுள் சிறந்த வழியாகும்.

10. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.(code-box)

தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது.

திருக்குறள் மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏழைகளுக்கு உதவி செய்வதே........... .ஆகும்

அ) பகை

இ) வறுமை

ஆ) ஈகை

ஈ) கொடுமை

2. பிற உயிர்களின்..........கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

அ) மகிழ்வை

ஆ) செல்வத்தை

இ) துன்பத்தை

ஈ) பகையை

3. உள்ளத்தில்.........இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும் 

அ) மகிழ்ச்சி

ஆ) மன்னிப்பு

இ) துணிவு

ஈ) குற்றம்

குறுவினா

1. அறிவின் பயன் யாது?

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை. 

2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது.

3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க் கணினி

தமிழ் மறையான திருக்குறளைத் தந்த "திருவள்ளுவர்" பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது. 

சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் திருவள்ளுவரே!

நினைவு கூர்க 

தமிழ் மறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை நினைவுகூர்க.

இப்பகுதியானது TNPSC study notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 1. திருக்குறள் தொடர்பான செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC - previous year question 

1. 'முயற்சி திருவினை ஆக்கும்' எனக் கூறியவர்?

ஔவையார், திருவள்ளுவர், பாரதியார்

2. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

திருவள்ளுவர்

3. திருவள்ளுவர் காலம் 

கி.மு. 31

4. திருவள்ளுவராண்டு தொடங்கும் நாள்

தை முதல் நாள்

5. திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படும் நாள்

தை இரண்டாம் நாள்

6. திருவள்ளுவரின் வேறு பெயர்களுள் பொருந்தாதது 

செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாவலர், நான்முகனார்

7. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன

திருக்குறள்

8. திருக்குறளின் வேறு பெயர்களுள் பொருந்தாதது  

முப்பால்

பொதுமறை

உலகப் தமிழ்மறை 

உலகப் பொதுமறை

9. "வாயுறை வாழ்த்து" என்று அழைக்கப்படுவது

திருக்குறள்

10. முதல் தமிழ்க் கணினியின் பெயர்

திருவள்ளுவர்

11. "திருவள்ளுவர்" பெயரில் முதல் தமிழ்க் கணினியை உருவாக்கிய தனியார் நிறுவனம்

டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ்

12. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது

படிறு - வஞ்சம் 

அமர் - விருப்பம் 

ஈரம் - அன்பு

அல்லவை - பாவம்

13. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது

துவ்வாமை - வறுமை

சிறுமை - துன்பம்

மறுமை - மறுபிறவி

இம்மை - இப்பிறவி

14. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது

வன்சொல் - கடுஞ்சொல்

அற்று - அதுபோன்றது 

அளைஇ - கலந்து

நாடி - விரும்பி

15. திருக்குறள் ............. நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு ஆ) பதினெண்கீழ்க்கணக்கு

இ) எட்டுத்தொகை


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad