திருக்குறள் அதிகாரங்கள்

திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும். 

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"

என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம்.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி தமிழ்நாடு அரசின் எல்லா வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

திருவள்ளுவர், திருக்குறள் நூல் குறிப்பு இங்கே (link)


திருக்குறள் சிறப்புகள் 

"திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.  

இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.

திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது. 

டாக்டர் கிரௌல், தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார். (alert-success)

இது, தமிழ்மொழியிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.

மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள்.(alert-success)

எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார் திருவள்ளுவர். அவற்றில் சில இங்கே விளக்கப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்து (1)

1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

2) கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3) மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

4) வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 

யாண்டும் இடும்பை இல.

5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6) பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க 

நெறிநின்றார் நீடுவாழ் வார்

7) தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

8) அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 

பிறஆழி நீந்தல் அரிது.

9) கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை 

10) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

வான்சிறப்பு (2)

1) வான்நின்று உலகம் வழங்கி வருதலான்

தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று

2) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குக்

துப்பாய தூஉம் மழை 

3) விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து 

உள்நின்று உடற்றும் பசி.

4) ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

5) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. 

6) விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

7) நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி

தான்நல்காது ஆகி விடின்.

8) சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

9) தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.

10) நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீத்தார் பெருமை (3)

1) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

 வேண்டும் பனுவல் துணிவு.

2) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 

3) இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

4) உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.

5) ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்

இந்திரனே சாலும் கரி. 

6) செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்குஅரிய செய்கலா தார்.

7) சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

8) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

9) குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

10) அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் 

செந்தண்மை பூண்டுஒழுக லான்.

அறன் வலியுறுத்தல் (4)

1) சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு

 ஆக்கம் எவனோ உயிர்க்கு

2) அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை

 மறத்தலின் ஊங்குஇல்லை கேடு

3) ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

 செல்லும்வாய் எல்லாம் செயல்

4) மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன் 

ஆகுல நீர பிற

5) அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

6) அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

 பொன்றுங்கால் பொன்றாத் துணை.

7) அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

 பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

8) வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

9) அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்

புறத்த புகழும் இல.

10) செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு

 உயற்பாலது ஓரும் பழி.

மக்கட் பேறு (7)

1) பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த 

மக்கட்பேறு அல்ல பிற.

2) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்.

3) தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

4) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 

சிறுகை அளாவிய கூழ்.

5) மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 

6) குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

7) தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 

முந்தி இருப்பச் செயல்.

8) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. 

9) ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

10) மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

அன்புடைமை (8)



1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும். 

2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு. 

4) அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 

5) அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

6) அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

 மறத்திற்கும் அஃதே துணை.

7) என்பு இலதனை வெயில்போலக் காயுமே 

அன்பி லதனை அறம்.

8) அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 

வற்றல் மரம்தளிர்த் தற்று.

9) புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

 அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

10) அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு 

என்புதோல் போர்த்த உடம்பு.

விருந்தோம்பல் (9)

1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.

3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து

நல்விருந்து ஒம்புவான் இல்

5) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம். 

6) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு. 

7) இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

8) பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

9) உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

 மடமை மடவார்கண் உண்டு.

10) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

இனியவை கூறல் (10)




1) இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் 

2) அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின். 

3) முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் 

இன்சொ லினதே அறம்.

4) துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

5) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

 அணிஅல்ல மற்றுப் பிற.

6) அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 

நாடி இனிய சொலின்.

7) நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

 பண்பின் தலைப்பிரியாச் சொல்.

8) சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

 இம்மையும் இன்பம் தரும்.

9) இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ 

வன்சொல் வழங்கு வது.

10) இனிய உளவாக இன்னாத கூறல் 

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


பயனில சொல்லாமை (20)

1) பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 

2) பயன்ல பல்லார்முன் சொல்லல் நயன்இல

நட்டார்கண் செய்தலின் தீது.

3) நயனிலன் என்பது சொல்லும் பயன்இல

 பாரித்து உரைக்கும் உரை.

4) நயன்சாரா நன்மையின் நீங்கும் பயன்சாராப்

பண்புஇல்சொல் பல்லார் அகத்து.

5) சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்சில

நீர்மை உடையார் சொலின்.

6) பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்.

7) நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

8) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்,

9) பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

10) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.

ஈகை (23)

1) வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

2) நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்

 இல்எனினும் ஈதலே நன்று.

3) இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள.

4) இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 

இன்முகம் காணும் அளவு.

5) ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

 மாற்றுவார் ஆற்றலின் பின்.

6) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

7) பாத்துஊண் மரீஇ யவனைப் பசியென்னும்

 தீப்பிணி தீண்டல் அரிது.

8) ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

 வைத்துஇழக்கும் வன்க ணவர்

9) இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.

10) சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்

ஈதல் இயையாக் கடை.


கள்ளாமை (29)

1) எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தஒன்றும் 

கன்ணமை காக்கதன் நெஞ்சு.

2) உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

3) களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து

ஆவது போலக் கெடும்.

4) களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

5) அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 

6)அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண் 

கண்றிய காத லவர்.

7) களவுஎன்னும் கார்அறி வாண்மை அளவுஎன்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

8) அளவுமறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் 

களவுதாரிந்தார் நெஞ்சில் கரவு

9) அளவுஅல்ல செய்துஆங்கே விவர் களவுசல்ல

 மற்றைய தேற்றா தவர்.

10) கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு.

வாய்மை (30)

1. வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.(code-box)

பொருள்: வாய்மை எனப் போற்றப்படும் பண்பு எதுவெனில், அது மற்றவருக்கு எவ்வகையிலும் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

2. பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

 நன்மை பயக்கு மெனின்.(code-box)

பொருள்: பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.

சொற்பொருள் :

புரை- குற்றம்; பயக்கும் - தரும்;

3 . தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

 தன்நெஞ்சே தன்னைச் சுடும்.(code-box)

பொருள் : தன் நெஞ்சம் அறிந்து பொய் கூறக்கூடாது. கூறின், தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

சொற்பொருள்:

சுடும் - வருத்தும்.

4. உள்ளத்தால்  பொய்யா தொழுகின்  உலகத்தார்

 உள்ளத்துள் எல்லாம் உளன்.(code-box)

பொருள்: ஒருவன் தன் உள்ளம் அறிய பொய்யில்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான். 

5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை.(code-box)

பொருள்: மனத்தொடு பொருந்திய வாய்மை பேசுபவன்,  தானம் தவம் செய்கிறவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதப்படுவான்.

6. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

 எல்லா அறமும் தரும். (code-box)

பொருள்: பொய் பேசாமை ஒருவனுக்கு எல்லாப் புகழையும் தரும். அஃது அவன் வருந்தாமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் தரும். 

சொற்பொருள்:

அன்ன- அவை போல்வன; எய்யாமை- வருந்தாமை;

7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.(code-box)

பொருள்: பொய் சொல்லாமை என்னும் அறத்தை இடைவிடாமல் கடைப்பிடித்தால், வேறு எந்த அறங்களையும் செய்யவேண்டியது இல்லை. 

8. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.(code-box)

பொருள்: உடல் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத்தூய்மை வாய்மையால் வெளிப்படும்.

சொற்பொருள்

அகம் - உள்ளம்; அமையும் - உண்டாகும்;

9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.(code-box)

பொருள் : சான்றோர்க்குப் புறஇருளை நீக்கும் விளக்குகளைவிட, அகத்தின் இருளை நீக்கும் பொய்பேசாமையே உண்மையான விளக்காகும். 

10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 

வாய்மையின் நல்ல பிற.(code-box)

பொருள்: யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள், எவ்வகையிலும் உண்மையைவிடச் சிறந்தவையாகச் சொல்லத்தக்கவை வேறில்லை.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

 அ) குறள் வெண்பாக்களால் ஆன நூல் திருக்குறள்

ஆ) திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.

இ) உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டுள்ளதனால் திருக்குறள் உலகப் பொதுமறை என்று வழங்கப்படுகிறது.

கோடிட்ட இடத்தில் உரிய விடையை எடுத்து எழுதுக.

அ) உடலை நீர் தூய்மை செய்யும்; உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது

1. இன்னாச்சொல்

2. வாய்மை

3.பழிச்சொல்

ஆ) வாய்மை எனப்படுவது யாதெனில்

1. மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

2.புறங்கூறாமை

3.பழிகூறாமை

பிரித்து எழுதுக.

அ) யாதெனின் - யாது+எனின் 

ஆ) பொய்யாதொழுகின்- பொய்யாது+ ஒழுகின் 

 இ) புறந்தூய்மை- புறம்+தூய்மை

சேர்த்து எழுதுக.

அ) தன் + நெஞ்சு - தன்நெஞ்சு 

ஆ) புகழ் + இல்லை- புகழில்லை

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைக்க

இயற்கை - காற்று ஒரு இயற்கை வளம்.

பெண்மை - பெண்மை என்றும் போற்றதக்கது.

வாய்மை - வாய்மை என்பது சிறந்த அறம்.

உள்ளம் - உள்ளம் என்றும் வாய்மை பேச வேண்டும்.

குறுவினாக்கள் 

1. பொய்மையும் வாய்மையாவது எப்போது?

பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.

2. வள்ளுவர் குறிப்பிடும் தூய்மை பற்றிக் குறிப்பிடுக.

உடல் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத்தூய்மை வாய்மையால் வெளிப்படும்.

3. அகவிருளைப் போக்கும் விளக்கு எது ?

அகத்தின் இருளை நீக்கும் பொய்பேசாமையே உண்மையான விளக்காகும்

சிறுவினாக்கள்

1. வாய்மையின் இலக்கணமாக வள்ளுவர் குறிப்பிடுவது யாது ? 

வாய்மை எனப் போற்றப்படும் பண்பு எதுவெனில், அது மற்றவருக்கு எவ்வகையிலும் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

2. உண்மையைப் பேசுவோரின் சிறப்பியல்புகள் யாவை?

மனத்தொடு பொருந்திய வாய்மை பேசுபவன், தானம் தவம் செய்கிறவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதப்படுவான்.

3. அகவிருளைப் போக்கும் விளக்கைக் குறள்வழி விளக்குக.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.(code-box)

பொருள் : சான்றோர்க்குப் புறஇருளை நீக்கும் விளக்குகளைவிட, அகத்தின் இருளை நீக்கும் பொய்பேசாமையே உண்மையான விளக்காகும்.

4. உலகத்தாரின் உள்ளத்துள் இருப்பாரைப்பற்றி வள்ளுவர் கூறுவது என்ன?

ஒருவன் தன் உள்ளம் அறிய பொய்யில்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான். 

இன்னா செய்யாமை (32)

1) சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள். 

2) கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாகஅற்றார் கோள்.

3) செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.

4) இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். 

5) அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

 தம்நோய்போல் போற்றாக் கடை.

6) இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

 வேண்டும் பிறன்கண் செயல்.

7) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 

மாணாசெய் யாமை தலை.

8) தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ 

மன்னுயிர்க்கு இன்னா செயல்,

9) பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

 பிற்பகல் தாமே வரும்.

10) நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 

நோயின்மை வேண்டு பவர்.

கொல்லாமை (33)

1) அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும். 

2) பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

3) ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்

 பின்சாரப் பொய்யாமை நன்று.

4) நல்ஆறு எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்.

கொல்லாமை சூழும் நெறி.

5) நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.

6) கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிர்உண்ணும் கூற்று.

7) தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்உயிர் நீக்கும் வினை.

8) நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்

கொன்றுஆகும் ஆக்கம் கடை. 

9) கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்

புண்மை தெரிவார் அகத்து

10) உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

செல்லாத்தி வாழ்க்கை யவர்.


கல்வி (40)

1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக.(code-box)

பொருள் : நூல்களைக் குற்றமறக் கற்றல் வேண்டும். கற்றபடி நடத்தல் வேண்டும்.

சொற்பொருள் : கசடு - குற்றம்; நிற்க - கற்றவாறு நடக்க.

2. எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

 கண்என்ப வாழும் உயிர்க்கு. (code-box)

பொருள் : எண்ணும் எழுத்தும் ஆகிய இவ்விரண்டும் மனிதர்களுக்கு இரு கண்கள் எனக் கூறுவர்.

சொற்பொருள் : எண் - எண்கள், கணக்கு; எழுத்து - இலக்கண இலக்கியங்கள் (வரிவடிவம்)

3. கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

 புண்உடையர் கல்லா தவர்.(code-box)

பொருள் : கல்வி கற்றவர் கண் உடையவர்; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர் ஆவர்.

4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

 அனைத்தே புலவர் தொழில். (code-box)

பொருள் : அறிவில் சிறந்த புலவர்களுடன் பேசிப் பழகும்போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களை விட்டுப்பிரியும்போது, 'இனி இவரை எப்பொழுது காண்போம்' என எண்ணிப் பிரிவதும் புலவரின் இயல்பாகும்.

சொற்பொருள் : உவப்ப - மகிழ; தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து.

5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் 

கடையரே கல்லா தவர்.(code-box)

பொருள் : செல்வம் உடையவர்முன் ஏழை கவலைப்பட்டு இரந்து நிற்பதுபோலக் கற்றவர்முன் பணிந்து கற்பவரே உயர்ந்தவர்; பணிந்து கல்லாதவர் தாழ்ந்தவர்.

சொற்பொருள் : உடையார் - செல்வர்; இல்லார் - ஏழை; ஏக்கற்று - கவலைப்பட்டு; கடையர் - தாழ்ந்தவர்.

6. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத்து ஊறும் அறிவு. (code-box)

பொருள் : மணற்பாங்கான இடத்தில் தோண்டத்தோண்ட நீர் சுரக்கும். அதுபோல, மக்கள் நூல்களைக் கற்கக்கற்க அவர்தம் அறிவு வளரும்.

சொற்பொருள் : தொட்டனைத்து - தோண்டும் அளவு ; மாந்தர் - மக்கள்.

7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

 சாந்துணையும் கல்லாத வாறு.(code-box)

பொருள்: கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாகும்; எந்த ஊரும் தன் ஊராகும். இதனை அறிந்தும் சிலர் சாகும்வரை கற்காமல் இருப்பது ஏன்?

சொற்பொருள் : சாந்துணையும் -  சாகும்வரையிலும்.

8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

 எழுமையும் ஏமாப்பு உடைத்து. (code-box)

பொருள் : ஒரு பிறப்பில், தான் கற்றுக்கொள்ளும் நல்லறிவு, இனி எழும் பிறவிகளுக்கும் பாதுகாப்பைத் தரும்.

சொற்பொருள் : ஏமாப்பு - பாதுகாப்பு.

9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

 காமுறுவர் கற்றறிந் தார்.(code-box)

பொருள் : தாங்கள் இன்பம் அடையும் கல்வியால் உலகம் இன்பம் அடைவதனைக் கண்டு, கற்றவர் மேன்மேலும் கற்க விரும்புவர்.

சொற்பொருள் : காமுறுவர் -விரும்புவர்.

10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

 மாடல்ல மற்றை யவை. (code-box)

பொருள் : ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியாகும். கல்வி தவிர, மற்றச் செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகமாட்டா.

சொற்பொருள் : விழுச்செல்வம் - சிறந்த செல்வம்; மாடு - செல்வம்.

கோடிட்ட இடத்தை நிரப்புக

அ. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

ஆ. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

இ. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

 மாடல்ல மற்றை யவை 

மாறியுள்ள குறளை முறைப்படுத்தி எழுதுக.

அ. எண்என்ப எழுத்தென்ப ஏனை கண்என்ப

 இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு.

விடை : எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

 கண்என்ப வாழும் உயிர்க்கு.

ஆ. தொட்டனைத்து மணற்கேணி ஊறும் மாந்தர்க்குக் 

கற்றனைத்து அறிவு ஊறும்.

விடை: தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத்து ஊறும் அறிவு.

பிரித்து எழுதுக

ஆ. எழுத்தென்ப = எழுத்து+ என்ப 

அ. கசடற = கசடு + அற 

இ. மணற்கேணி = மணல்+ கயிறு

ஈ. கற்றறிந்தார் = கற்று + அறிந்தார் 

சேர்த்து எழுதுக.

அ. எண் + என்ப = எண்னென்ப 

ஆ. கண் + உடையார் = கண்ணுடையார் 

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைக்க.

அ. எழுத்து - எண்ணும் எழுத்தும் மனிதர்களுக்கு இரு கண்கள்.

ஆ. முகம் - கல்லாதவர் முகம் இரண்டு புண்ணுடையது போல் தோன்றும்.

இ. புலவர் - அறிவில் சிறந்தவர் புலவர்.

ஈ. இன்பம் - நாம் கற்கும் கல்வியால் உலகம் இன்பம் அடைகிறது.

உ. அறிவு - ஒரு பிறப்பில், தான் கற்றுக்கொள்ளும் அறிவு, இனி எழும் பிறவிகளுக்கும் பாதுகாப்பைத் தரும்.

குறுவினாக்கள்

1. புலவர் தொழிலாக வள்ளுவர் எதனைக் கூறுகிறார்?

அறிவில் சிறந்த புலவர்களுடன் பேசிப் பழகும்போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களை விட்டுப்பிரியும்போது, 'இனி இவரை எப்பொழுது காண்போம்' என எண்ணிப் பிரிவதும் புலவரின் இயல்பாகும்.

2. வள்ளுவர் மணற்கேணியோடு அறிவை எவ்வாறு ஒப்பிடுகிறார்?

மணற்பாங்கான இடத்தில் தோண்டத்தோண்ட நீர் சுரக்கும். அதுபோல, மக்கள் நூல்களைக் கற்கக்கற்க அவர்தம் அறிவு வளரும்.

3. வள்ளுவர் குறிப்பிடும் அழியாச் செல்வம் எது? ஏன்?

ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியாகும். கல்வி தவிர, மற்றச் செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகமாட்டா.

சிறுவினாக்கள்

1. கல்வியின் சிறப்புகளாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.

தாங்கள் இன்பம் அடையும் கல்வியால் உலகம் இன்பம் அடைவதனைக் கண்டு, கற்றவர் மேன்மேலும் கற்க விரும்புவர்.

ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியாகும். கல்வி தவிர, மற்றச் செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகமாட்டா.

2. சாகும்வரை ஏன் கற்றல் வேண்டும்?

கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாகும்; எந்த ஊரும் தன் ஊராகும். இதனை அறிந்தும் சிலர் சாகும்வரை கற்காமல் இருப்பது ஏன்?

நெடுவினா

கல்வியதிகாரம் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.


ஊக்கமுடைமை (60)

1) உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்

உடையது உடையரோ மற்று.

2) உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை 

நில்லாது நீங்கி விடும்.

3) ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துஉடை யார்.

4) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

 ஊக்கம் உடையான் உழை.

5) வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

6) உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுவது

 தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

7) சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைசம்பின்

 பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

8) உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து 

வள்ளியம் என்னும் செருக்கு. 

9) பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

 வெரூஉம் புலிதாக் குறின்.

10) உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு.

பெரியாரைப் பிழையாமை (90)

1) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

 போற்றலுள் எல்லாம் தலை.

2) பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும். 

3) கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.

4) கூற்றத்தைக் கையால் விளித்துஅற்றால் ஆற்றுவார்க்கு 

ஆற்றாதார் இன்னா செயல்.

5) யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின் 

வேந்து செறப்பட் டவர்.

6) எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

 பெரியார்ப் பிழைத்துஒழுகு வார்.

7) வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

8) குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

 நின்றுஅன்னார் மாய்வர் நிலத்து.

9) ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

 வேந்தனும் வேந்து கெடும்.

10) இறந்துஅமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்துஅமைந்த சீரார் செறின்.

நினைவு கூர்க 

தமிழ் மறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை நினைவுகூர்க.

இப்பகுதியானது TNPSC study notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 1. திருக்குறள் தொடர்பான செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பொருள் கூறுக.

1. அகம் - உள்ளம் 

பிரித்து எழுதுக.

1. யாதொன்றும் = யாது + ஒன்றும் 

2.பயக்குமெனின் = பயக்கும் + எனின்

TNPSC previous year question 

1. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது?

நூற்றேழு

2. திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் ..... என வழங்கப்பெறுகிறது. 

உலகப் பொதுமறை

3. "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது" என்று மொழிந்து இன்புற்றவர்

டாக்டர் கிரௌல்

4. எது தமிழ்மொழியிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது

திருக்குறள்

5. மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் 

திருக்குறள்

6. உடலை நீர் தூய்மை செய்யும்; உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது

 இன்னாச்சொல்

வாய்மை

பழிச்சொல்

7. வாய்மை எனப்படுவது யாதெனில்

மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

புறங்கூறாமை

பழிகூறாமை

8. குறள் வெண்பாக்களால் ஆன நூல் 

திருக்குறள்

9. திருக்குறளில்  ......... அதிகாரங்கள் உள்ளன.

133

10. உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டுள்ளதனால் உலகப் பொதுமறை என்று வழங்கப்படுவது

திருக்குறள்

11. புரை என்பதன் பொருள்

குற்றம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad