திரு.வி.கலியாணசுந்தரனார்

இவர்தம் நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும்; மனித நேயம் மலரும்; உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.

பாடத்தலைப்புகள்(toc)

திரு.வி.கலியாணசுந்தரனார் ஆசிரியர் குறிப்பு:

பெயர்: 

திரு.வி.கலியாணசுந்தரனார் (திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது.)

பெற்றோர் : 

விருத்தாசலனார் சின்னம்மையார்.

பிறந்த ஊர்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்புகள் 

இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

சிறப்பு பெயர்கள் 

  • தமிழ்த்தென்றல்

பணி

சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார். 

படைப்புகள் : 

இவர் இயற்றிய நூல்களில் சில
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், 
  • முருகன் அல்லது அழகு, 
  • பெண்ணின் பெருமை
  • பொதுமை வேட்டல் 
  • கிறிஸ்த்துவின் அருள் வேட்டல் 
  • தமிழ்த் தென்றல் 
  • வாழ்க்கை துணை நலம் 
  • உரிமை வேட்கை 

இதழ்

  • நவசக்தி

காலம்

17.09.1953 - 26.08.1883

கவிதைகள்

"சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும். ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், 'என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா?' என்னும். அரசு கண்ணிற்படும். 'யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண் என்னும். 'வேம்பு. என்நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா' என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்".

பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ - திரு.வி.க. (alert-success)


பொதுமை வேட்டல் பாடல்கள்

பண்ணினை இயற்கை வைத்த 

பண்பனே போற்றி போற்றி 

பெண்மையில் தாய்மை வைத்த 

பெரியனே போற்றி போற்றி 

வண்மையை உயிரில் வைத்த 

வள்ளலே போற்றி போற்றி 

உண்மையில் இருக்கை வைத்த 

உறவனே போற்றி போற்றி.


- திரு. வி. கலியாணசுந்தரனார்(code-box)


பொருள் : 

இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மையால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே! கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன். 

சொற்பொருள் : 

பண்- இசை;

வண்மை - கொடைத்தன்மை ; 

போற்றி - வாழ்த்துகிறேன்

நூல் குறிப்பு : 

இப்பாடல், திரு. வி. க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. 

நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமை வேட்டல். 

தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல். 

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 20. திரு.வி.கல்யாண சுந்தரனார் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise 

பொருள் கூறுக.

1. பண் - இசை 

1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ) திரு. வி. கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்

ஆ) திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை நானூற்று முப்பது பாக்கள் 

இ) திரு.வி.க. நவசக்தி இதழின் ஆசிரியராக இருந்தார்.

2. கோடிட்ட இடத்தில் உரிய விடையை எடுத்து எழுதுக,

"வண்மையை உயிரில் வைத்த' இந்த அடியில் 'வண்மை' என்னும் சொல் தரும் பொருள்

1.வலிமை

2. கொடைத்தன்மை

3. வளமை

இ) குறுவினாக்கள்

1. திரு. வி. க. வின் பெற்றோர் யாவர் ?

திரு. வி. க. வின் பெற்றோர் - விருத்தாசலனார்,  சின்னம்மையார்.

2. திரு. வி. க. இயற்றிய நூல்கள் நான்கனை எழுதுக. 

திரு. வி. க. இயற்றிய நூல்கள்

  1. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
  2.  பெண்ணின் பெருமை,
  3.  தமிழ்த்தென்றல், 
  4. உரிமை வேட்கை, 

3. இறைவன் உயிரில் வைத்தது எதனை ?

இறைவன் உயிரில் வைத்தது கொடைத்தன்மை.

சிறுவினாக்கள்

1.திரு.வி.க. பற்றிக் குறிப்பு எழுதுக.

திரு.வி.கலியாணசுந்தரனார் (திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது.)

பெற்றோர் : 

விருத்தாசலனார் சின்னம்மையார்.

பிறந்த ஊர்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்புகள் 

இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

2. இறைவனின் பெருமையைத் திரு. வி. க. எவ்வாறெல்லாம் குறிப்பிடுகின்றார் ?

இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மையால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே! கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன். 

TNPSC previous year question 

1. திரு.வி.க. என்பதன் சுருக்கம்

திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்

2. பண் என்பதன் பொருள்

இசை 

3. திரு.வி.க. அவர்களின் பெற்றோர் 

விருத்தாசலனார் சின்னம்மையார்

4. திரு.வி.க. பற்றி தவறான கூற்று

இவர், பிறந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். 

இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. 

இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிவசக்தி இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.

5. திரு. வி. க. இயற்றிய நூல்கள் பொருந்தாதது 

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

பெண்ணின் பெருமை

தமிழ்த்தென்றல்

மனித வேட்கை (சரி- உரிமை வேட்கை)

6. "வண்மையை உயிரில் வைத்த" இந்த அடியில் 'வண்மை' என்னும் சொல் தரும் பொருள்

கொடைத்தன்மை

7. திரு. வி. கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்

 காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் 

8. திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை

 நானூற்று முப்பது பாக்கள் 430

9.  திரு.வி.க. ...... இதழின் ஆசிரியராக இருந்தார்.

நவசக்தி

10. பொதுமை வேட்டல் என்னும் நூலை இயற்றியவர்

திரு.வி.க.

11. "பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" - என்றவர்

திரு.வி.க. 

12. சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர்

திரு.வி.க. 

13. தமிழ்நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுபவர்

திரு.வி.க. 

14. மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்

திரு.வி.க. 

15. திரு. வி. க. கூறிய சிறந்த பூ

பருத்திப்பூ

16. திரு. வி. க. அவர்களின் சிறப்பு பெயர்

தமிழ்த்தென்றல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad