செம்மொழித் தமிழ்

உலகத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சுமொழி களே. எழுத்துமொழிகளாக உள்ளனவற்றுள் இலக்கிய வளம் நிறைந்தவை மிகச் சிலவே. எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று வள்ளலார் அருள்கிறார். உலக மொழிகளில் சிறந்தது தமிழ்மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பாடத்தலைப்புகள்(toc)

செம்மொழிகள்

திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். 

கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.(alert-passed)

இவற்றுள் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லை.

செம்மொழித் தமிழின் சிறப்பு

உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது தமிழ்மொழி.

தொல்காப்பியம், பத்துப்பாட்டுஎட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள், தமிழைச் செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.

பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை.

டாக்டர் கிரௌல், தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார். (alert-success)

தமிழின் தனிப்பெருந்தன்மைகள்

இயல்பாகத் தோன்றிய தமிழ்மொழியின் உயரிய பண்புகள், தன்மைகள் பற்றி ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

அ) தொன்மை

உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் கூறுகிறது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

 ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்

 மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

 தன்னே ரிலாத தமிழ்

- தண்டியலங்காரம் (code-box)

ஆ) மென்மை

தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாக அதனைக் கற்கவும் பேசவும் இயலுகின்றது. எக்காலத்தும் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை எல்லாம் தெரிவிக்கத்தக்க சொற்களைக் கொண்டதாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

இ) தாய்மை 

பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில் நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன. தமிழ்ச்சொல் இல்லாத உலகப் பெருமொழி யாதொன்றும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஈ) தூய்மை

தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நூல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் மறைந்து போயின. எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்பப் புதுச் சொற்களைப் புனைந்தும் பிறமொழித் துணையின்றித் தமிழால் தனித்து இயங்க இயலும். 

இவ்வுண்மையை அறிந்தே, 

தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல்.(alert-success)


உ) செம்மை

மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களுக்குத் திருந்திய வடிவும் இன்றியமையாதன. இவற்றைத் தமிழில் உள்ளதுபோல், வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், செந்தமிழ் எனப்பட்டது.

"தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது."

-தேவநேயப் பாவாணர்(alert-success)

ஊ) மும்மை

முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன.

(எ) இயற்கை வளர்ச்சி

எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே 

 - தொல்காப்பிய நூற்பா. (Code-box)

தமிழில் இடுகுறிப் பெயர்கள் மிகவும் குறைவு. 

ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு. ஆனால், வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூவகை எண் உள்ளன. 

தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால் வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை, ஆனால் பிறமொழிகளில் இத்தகைய பகுப்புமுறை இல்லை.

ஏ) இலக்கண நிறைவு 

எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது.

ஐ) செய்யுள் சிறப்பு

பண்டைத் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. கலிப்பா முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

ஒ) அணிச்சிறப்பு

புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, உருவகம் முதலிய அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

 ஓ) நூல் சிறப்பு

ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தனவற்றுள் சங்ககால நூல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன.

தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்கும் தலைமையாக உள்ள தகுதியும், அவற்றிலும் மிக்க மேன்மை உடையதுமான மொழியே உயர்தனிச் செம்மொழி

இவ்விலக்கண அடிப்படையை ஆராயுமிடத்துத் தமிழ்மொழியானது தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும், அவற்றினும் மிக்க மேன்மையும் உடையதாகையால் உயர்மொழியாகத் திகழ்கிறது. 

தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி எனப்படும். திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம்.

- பரிதிமாற் கலைஞர்

நினைவு கூர்க

இத்தகைய விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நூல்களையும் கொண்டது தமிழ்மொழி அத்தகைய உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை உணர்ந்து கற்றுப் போற்றிக் காப்போம்.

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ) உலகில் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம்

ஆ) தமிழில் இடுகுறிப் பெயர்கள் மிகவும் குறைவு

இ) எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும்.

ஈ) புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, உருவகம் பயன்படுத்தி அழகு சேர்த்தனர்.

உரிய விடையைத் தேர்வு செய்க. 

அ) உலக மொழிகளில் சிறந்து விளங்குவது

 1.தமிழ்மொழி 

2. வடமொழி 

3. மலையாளம்

ஆ) அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு 

1. கொங்குநாடு

 2. வருசநாடு

3.நாஞ்சில்நாடு

இ) வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி 

1. வடமொழி 

2. தெலுங்குமொழி 

3. தமிழ்மொழி

ஈ) உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி

அ) தக்காணப் பீடபூமி

ஆ) குமரிக்கண்டம்

இ) தார்ப்பாலைவனம்

குறுவினாக்கள்

1. உலக மொழிகளில் சிறந்தமொழி எது ? எங்ஙனம் ? 

உலக மொழிகளில் சிறந்தமொழி தமிழ். உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது தமிழ்மொழி.

2. செம்மொழியாகக் கருதப்படும் மொழிகள் யாவை? 

கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவை செம்மொழியாகக் கருதப்படும் மொழிகள். 

3. தமிழின் இளமை மாறாத் தன்மைக்குக் காரணம் என்ன? 

தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகின்றது.

4. தமிழ், உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுவதேன் ? 

மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களுக்குத் திருந்திய வடிவும் இன்றியமையாதன. இவற்றைத் தமிழில் உள்ளதுபோல், வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், உயர்தனிச் செம்மொழி எனப்பட்டது.

5. தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் நூல்கள் யாவை? 

தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள், தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் நூல்கள்.

சிறுவினாக்கள் 

1. செம்மொழித் தமிழின் தனிச்சிறப்புகள் யாவை?

செம்மொழித் தமிழின் தனிச்சிறப்புகள்

  • தொன்மை
  • தாய்மை
  • மென்மை
  • செம்மை 
  • மும்மை
  • தூய்மை
  • செய்யுள் சிறப்பு 
  • இலக்கண நிறைவு 
  • நூல் சிறப்பு
  • அணி சிறப்பு

2. தமிழ், தொன்மைமொழி என்பதற்குச் சான்று தருக.

உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் கூறுகிறது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

 ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்

 மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

 தன்னே ரிலாத தமிழ்

- தண்டியலங்காரம் (code-box)

3. தமிழ், தனித்தியங்கும் மொழி என்பதனைக் குறிப்பிடுக.

தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நூல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் மறைந்து போயின. எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்பப் புதுச் சொற்களைப் புனைந்தும் பிறமொழித் துணையின்றித் தமிழால் தனித்து இயங்க இயலும். 

இவ்வுண்மையை அறிந்தே, 

தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல்.

நெடுவினா

தமிழின் தனிப்பெருந்தன்மைகளை விளக்குக.


TNPSC previous year question 

1. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகல் செம்மொழியாம் என்பது யாருடைய கூற்று?

பரிதிமாற் கலைஞர்

2. உலகில் மிகப்பழைமையான நிலப்பகுதி

 குமரிக்கண்டம் 

3. தமிழில் ....... பெயர்கள் மிகவும் குறைவு.

இடுகுறி

4. அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு 

நாஞ்சில்நாடு

5. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் 

கால்டுவெல்

6. "தன்னே ரிலாத தமிழ்" என்று குறிப்பிடும் நூல்

தண்டியலங்காரம்

7. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றவர்

டாக்டர் கிரௌல்

8. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிட்டவர்

 மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்

9. எம்மொழி கீழ்க்காணும் செம்மொழிகளில் இன்று பேச்சுவழக்கில் உள்ளது 

கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்,ஈப்ரு

10. எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்றவர்

வள்ளலார்

11. உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் .......... மேற்கோள் செய்யுள் கூறுகிறது.

தண்டியலங்காரம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad