'அய்யா' வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் 'முடிசூடும் பெருமாள்'.
அவர் தென்னிந்தியாவின் தொடக்கக்காலச் சமூகத்தின் போராளிகளில் ஒருவர் அய்யா கன்னியாகுமரிக்கு அருகில், சாமித்தோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தாகோவில்விளை எனும் கிராமத்தில் பிறந்தார். 'முடிசூடும் பெருமாள்' என்றழைக்கப்பட்ட இயற்பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினார். முத்துக்குட்டிக்கு முறையான பள்ளிக் கல்வியைப் பெறும் வாய்ப்புக் கிட்டவில்லை ஆனாலும் பல சமயநூல்கள் குறித்த புலமையை அவர் பெற்றிருந்தார்.
தெற்கு திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவற்றை அணியலாம்; எவற்றை அணியக்
கூடாது என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். சமூகத்தின்
சில குறிப்பிட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தலைப்பாகை அணியக்கூடாது
என்றிருந்த நிலையில் வைகுண்டர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அம்மக்களைத்
தலைப்பாகை அணியும்படி கூறினார். இது
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர உணர்வை வழங்கியதோடு அவர்களுக்குச்
சுயமரியாதை சார்ந்த ஊக்கத்தையும்
கொடுத்தது. அவரைப் பின்பற்றுவோரின் மனங்களில் புதிய நம்பிக்கை ஊன்றப்பட்டது.
- திருவிதாங்கூர் அரசின்,உயர்சாதியினரின் கடுமையான எதிர்ப்புகளிடையேஅனைவரும் சமம் எனும் கருத்தினைப் போதித்தார்.
- வைகுண்டசுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சியென்றும் கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும்
- உருவவழிபாட்டை எதிர்த்தார்
- பல்வேறு சாதிகளைச்சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக வைகுண்டசுவாமிகள் சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவினார். அந்நோக்கத்தில் வெற்றிபெறுவதற்காக அனைத்துச் சாதிமக்களும் சேர்ந்துண்ணும் சமபந்திவிருந்துகளை நடத்தினார்.
- அவரைப் பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் 'அய்யா' (தந்தை) என அழைத்தனர்.
- அவருடைய கருத்துக்கள் ஒரு நூலாகத் திரட்டப்பட்டுள்ளது. அந்நூலின் பெயர் அகிலத்திரட்டு என்பதாகும்.
- திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்த அவர் தெய்வீக அனுபவம் ஒன்றைப்பெற்றார்.'வைகுண்டர்' என தன்னை அழைத்துக் கொண்ட அவர் வழிபாட்டின் போது பின்பற்றும் தேவையற்ற சம்பிரதாயங்களைக் கைவிடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
- 1833ஆம் ஆண்டு சாதிவேற்றுமைகளை ழிப்பதற்காகவும் சமூக ஒருங்கிணைப்புக்காகவும் சாமித்தோப்பில் தனது தியானத்தைத் துவக்கினார்.
- திருவிதாங்கூர் அரசரால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் தனது கொள்கைகளை விட்டுத்தரவில்லை. அவருடைய சமயவழிபாட்டு முறை 'அய்யாவழி' என்றறியப்பட்டது அவருடைய அறிவுரைகள் நீதிக்குப்புறம்பான சமூகப்பழக்க வழக்கங்களிலிருந்தும் மூடநம்பிக்கைகளிலிருந்தும் மக்களை விடுவித்தது.
'அய்யா'வைகுண்ட சுவாமி |
தென்னிந்தியாவின் தொடக்கக்காலச் சமூகத்தின் போராளிகளில் ஒருவரான அய்யாவை மறக்காமல் நினைவுகூர்க.
We follow you.
பதிலளிநீக்குPlease share your valuable comments