வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும். மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும். தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு வரும் சில மரபுகள் குறித்து இங்குக் காண்போம்.
TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது.
இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.
பாடத்தலைப்புகள்(toc)
இலக்கண விதிகள் சில
பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம், திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வேண்டும்.
- தமிழ் இலக்கணமும் மொழித்திறனும் - Tamil Language Grammar Learning
- மரபுச்சொற்கள்
- வழு - வழாநிலை -வழுவமைதி
- வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
- புணர்ச்சி
- வழக்கு
- எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள்
- தமிழ்ச்சொல் அறிவோம்
- போலிகள்
மரபுச்சொற்கள்
- நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும்.
- மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவது மரபுப்பிழை.
- யானைக்கன்று என்பதே மரபுச்சொல். இதனை யானைக்குட்டி எனக் கூறுவது மரபுப்பிழை.
- "நாய் கத்தியது" எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல் கூடாது. "நாய் குரைத்தது" என்பதே உரிய மரபுத்தொடர்.
இளமை மரபுச்சொற்கள்
காய்களின் இளமை மரபுச்சொற்கள் |
|
விலங்குகள் இளமை மரபுச்சொற்கள் |
|
பறவைகளின் ஒலி மரபுச்சொற்கள் |
|
விலங்குகளின் ஒலி மரபுச்சொற்கள் |
|
வினைமரபுச்சொற்கள் |
|
பூ |
|
தாவரத்தின் அடி |
|
தாவரத்தின் பிஞ்சு |
|
கெட்டுப்போன கனி |
|
கெட்டுப்போன காய் |
|
தாவரங்களின் இளம் பருவம் |
|
கொழுந்து வகை |
|
தாவரங்களின் குலை வகை |
|
தாவரங்களின் கிளைப்பிரிவுகள் |
|
தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்
- மா, பலா, வாழை - இலை
- ஈச்சம், தென்னை, பனை - ஓலை
- கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை
- நெல், புல், தினை - தாள்
- அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு
- சோளத் தட்டு
- நெல்தாள்
- ஆவரங்குழை
- கேழ்வரகுத் தட்டை
- வாழைத் தண்டு
- கம்பந்தட்டு
- ஈச்ச ஓலை
- தினைத்தாள்
- பலா இலை
- தென்னை ஓலை
பூச்சிகள், பறவைகள், விலங்குகள் - இருப்பிட மரபுச் சொற்கள்
- கரையான் புற்று
- ஆட்டுப் பட்டி
- குதிரைக் கொட்டில்
- மாட்டுத் தொழுவம்
- கோழிப் பண்ணை
- குருவிக் கூடு
- சிலந்தி வலை
- எலி வளை
- நண்டு வளை
- யானைக்கூடம்
செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம்
- பூஞ்சோலை
- பூந்தோட்டம்
- வாழைத் தோட்டம்
- வெற்றிலைத் தோட்டம்
- கம்பங்கொல்லை
- சோளக் கொல்லை
- மாந்தோப்பு
- தென்னந்தோப்பு
- பனங்காடு
- வேலங்காடு
- கொய்யாத் தோப்பு
- நெல்வயல்
- தேயிலைத் தோட்டம்
- முந்திரித் தோப்பு
- பலாத் தோப்பு
- ஆலங்காடு
- இலுப்பைத் தோட்டம்
- சவுக்குத் தோப்பு
- புளியந்தோப்பு
பெயர்களுக்கு பொருத்தமான வினைகள்
- காய்கறியை அரி
- மரம் வெட்டு
- அப்பம் தின்
- ஏர் உழு
- கதிர் அறு
- நார் கிழி
- கிளையை ஒடி
- களைபறி
- கல்உடை
- இலை பறி
- கூரை வேய்
- அம்பு எய்
- சந்தனம் பூசு
- சோறு உண்
- வரப்புக் கட்டு
- விதையை விதை
- தாள் அடி
- பழம் தின்
- மணி அடி
- படம் வரை
- தோசை சுடு
- இட்லி அவி
- நீர் அருந்து
- தேனை நக்கு
- நீர் பாய்ச்சு
- விளக்கு ஏற்று
- நெல் தூற்று
- பாட்டுப் பாடு
- திரியைக் கொளுத்து
- குடம் வனை
- விடை கூறு
- தயிர் கடை
- கோலம் இடு
- சோறு சமை
- பாய் பின்னு
- கூடை முடை
- விதையை விதை
- தீ மூட்டு
- ஓவியம் வரை
- சந்தனம் பூசு
- வண்ணம் தீட்டினார்
நினைவுகூர்க
பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
Please share your valuable comments