நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி. அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது: காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்வது. அத்தகு தமிழ்மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் ஆசிரியர் குறிப்பு 

பிறப்பு

இவர் நாமக்கல் மாவட்டத்து மோகனூரில் 19.10.1888 ஆண்டு பிறந்தார்.

இறப்பு

24.8.1972

பெற்றோர்

திரு. வேங்கடராமன், திருமதி அம்மணி அம்மாள்.

சிறப்புகள்

இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். 

இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். 

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். 

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். 

இவரை, "பலே பாண்டியா! நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை " என்றவர் பாரதியர்.

இவரை, ராஜாஜி அவர்கள் "திலகர் ஒரு பாரதியாக, காந்தி ஒரு நாமக்கல் கவிஞராக" என்று புகழ்கிறார்.

சிறப்புப் பெயர்கள்

நாமக்கல் கவிஞர் சிறப்பு பெயர்,
  • காந்தியக்கவிஞர்
  • அரசவைக் கவிஞர் 

நூல்கள்

இவர் உரைநடை நூல்கள், புதினங்கள், கவிதை இலக்கியங்கள் என்று பல நூல்களை எழுதியுள்ளார். 

அவையெல்லாம் நாட்டுப் பற்றும், இனப்பற்றும், மொழிப்பற்றும் ஊட்ட வல்லவை. 

நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்கள் யாவை?

நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள்,

  • என் கதை, 
  • மலைக்கள்ளன், 
  • திருக்குறள் புது உரை, 
  • தமிழன் இதயம், 
  • சங்கொலி, 
  • கவிதாஞ்சலி,
  • காந்தி அஞ்சலி, 
  • அவளும் அவனும்
  • தமிழ் வேந்தன்
  • அன்பு செய்த அறம்
  • தமிழ்த்தேன் 
  • மணிக் கண்ணன்

என அவர் இயற்றிய நூல்கள் அத்தனையும் அமுதத் தமிழ்வயலில் விளைந்த முப்பழச்சாறு என்று கூறத்தகுந்தவை.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் tnpsc    ஆசிரியர் குறிப்பு group2 2a group 4 பொதுத்தமிழ்


நாமக்கல் கவிஞர் கவிதைகள்

தமிழன் இதயம், தமிழ்த்தேர், சங்கொலி, காந்தி அஞ்சலி முதலியன கவிதைத் தொகுதிகள். 

மேற்கோள்கள் 

"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

 சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" (code-box)

என்று தொடங்கும் பாடல் இவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தது.

"தமிழன் என்றொரு இனமுண்டு 

தனியே அவர்க்கொரு குணமுண்டு 

அமிழ்தம் அவனது மொழியாகும்- அன்பே 

அவனது வழியாகும்."(code-box)

என்று வரையறுத்துக் கூறியவரும் அவரே. 

"அவனும் அவளும்" என்பது அவரெழுதிய காப்பியம் தலைவியின் அழகைப் புதுமை பொலியப் புனைகிறார். 

"மானென அவளைச் சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை 

மீன்விழி உடையாள் என்றால் மீனிலே கருமையில்லை 

தேன்மொழிக்குவமை சொன்னால் தெவிட்டுதல் தேனுக்குண்டு

கூன்பிறை நெற்றி என்றால் குறைமுகம் இருண்டுபோகும்!" (code-box)

திருக்குறளுக்கு உரை எழுதியிருப்பதுடன் வான்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டு ஆய்வு நூலொன்று வரைந்துள்ளார். 

எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும் 
   அதுவே தமிழன் குரலாகும் 
பொருள்பெற யாரையும் புகழாது 
   போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக் 
   கொள்கை பொய்யா நெறியாக 
எல்லா மனிதரும் இன்புறவே 
   என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும் 
   அச்சம் என்பதைப் போக்கிவிடும் 
இன்பம் பொழிகிற வானொலியாம் 
    எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் (code-box)

 சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்

பொழிகிற - தருகின்ற

குறி - குறிக்கோள் 

விரதம் - நோன்பு

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

நூல் வெளி

நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நாமக்கல் கவிஞர் பாடல்கள் சில,

கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை 

நம்பும் யாரும் சேருவீர்!... (கத்தியின்றி..)


கண்ட தில்லை கேட்ட தில்லை

சண்டை யிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணி யந்தான்

பலித்த தேநாம் பார்த்திட!. (கத்தியின்றி..)

- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்(code-box)


நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்  கீழ் 1. நாமக்கல் கவிஞர் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்

அ) வழி

ஆ) குறிக்கோள்

இ) கொள்கை

ஈ) அறம்

2. 'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) குரல் + யாகும்

ஆ) குரல் + ஆகும்

இ) குர + லாகும்

ஈ) குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வான்ஒலி

ஆ) வானொலி

இ) வாவொலி

ஈ) வானெலி


நயம் அறிக

1. 'எங்கள் தமிழ்' பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

(எ.கா.) அருள்நெறி - அதுவே

கொல்லா - கொள்கை

எல்லா - என்றும்

அன்பும் - அறமும் 

அன்பும் - அச்சம்


2. 'எங்கள் தமிழ்' பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

(எ.கா) அருள் - பொருள்

புகழாது - இகழாது

இன்புறவே - அன்பறமே

குறியாகக் -  நெறியாக

ஊக்கிவிடும் - போக்கிவிடும் 

அன்பும் - இன்பம் 


3. எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

(எ.கா.) தரலாகும் - குரலாகும்

புகழாது - இகழாது

இன்புறவே - அன்பறமே

ஊக்கிவிடும் - போக்கிவிடும் 

வானொலியாம் - தேன்மொழியாம்


குறுவினா

1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன 

  • அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. 
  • அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. 
  • நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
  • அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். 

2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகள்

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். 
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ உதவுவர்

சிறுவினா

'எங்கள் தமிழ்' பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

TNPSC previous year question 

1. இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். 

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

2. காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

3. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். 

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

4. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரை, "பலே பாண்டியா! நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை " என்றவர்

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

5. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரை,  "திலகர் ஒரு பாரதியாக, காந்தி ஒரு நாமக்கல் கவிஞராக" என்று புகழ்பவர்

ராஜாஜி அவர்கள்

பாரதியார் 

திரு. வி.க

பாரதிதாசன் 

6. நாமக்கல் கவிஞர் குறித்த பொருந்தாத இணையைக் கண்டறி

பிறப்பு - நாமக்கல் மாவட்டத்து முகவூர் (சரி - மோகனூர்)

பெற்றோர் - திரு. வேங்கடராமன், திருமதி அம்மணி அம்மாள்

சிறப்புப் பெயர் - காந்தியக்கவிஞர்

சிறப்பு - தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். 

7. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்

அ) வழி

ஆ) குறிக்கோள்

இ) கொள்கை

ஈ) அறம்

8. "கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்!" என்றவர்

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

9. "தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு " என்றவர்

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

10. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களில் பொருந்தாதது 

மலைக்கள்ளன்

சிலம்பொலி (சரி- சங்கொலி)

கவிதாஞ்சலி

காந்தி அஞ்சலி

11. தமிழன் இதயம், தமிழ்த்தேர், சங்கொலி, காந்தி அஞ்சலி முதலியன நாமக்கல் கவிஞரின்..... தொகுதிகள். 

கவிதை

உரைநடை

காவியம்

காப்பியம் 

12. யார் இயற்றிய நூல்கள் அத்தனையும் "அமுதத் தமிழ்வயலில் விளைந்த முப்பழச்சாறு" என்று கூறத்தகுந்தவை

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

13. திருக்குறளுக்கு உரை எழுதியிருப்பதுடன் வான்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டு ஆய்வு நூலொன்று வரைந்துள்ளவர்

பாரதியார் 

பாரதிதாசன் 

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

திரு. வி.க

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad