பழமொழிகள்

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. 

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 21. பழமொழிகள் என்ற பகுதி வருகிறது.

இந்த பகுதியில் கீழ் கேட்கப்பட்ட சில TNPSC கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC previous year questions and answers 

1. சிலை மேல் எழுத்து போல இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) தெளிவாகத் தெரியாது

(B) தெளிவாகத் தெரியும்

(C) நிலைத்து நிற்கும்

(D) நிலைத்து நிற்காது

(E) விடை தெரியவில்லை

2. பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.  (group 2 2022)

தண்ணீர் ........ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

(B) அழுக்கு

(D) வெந்நீர்

(A) குறைவு

(C) உப்பு

(E) விடை தெரியவில்லை

பழமொழிகள்

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

சான்றாக, 

சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். 

சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

 

பழமொழிகள் தமிழ் விளக்கம்

பழமொழிகள் கருத்துக்கள்

1. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் -  ஆறு இல்லாத ஊர் அழகு இல்லை அதேபோல் நூலகமில்லா ஊருக்கு அறிவு இல்லை.

2. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்ததைப் போன்று - உள்ளூரில் பழுத்த பழம் உள்ளூர் மக்களுக்கு மட்டும் பயன்படும். அதன் பயன் பிறருக்குக் கிடைக்காது. ஆனால், ஒரு நூல் பொதுநூலகத்தில் வைக்கப்பட்டால் அது பலர்க்கும் பயன்படும். 

3. வானம் பார்த்த பூமி  - இந்நிலத்தில் விளையும் பயிர்கள் பருவமழையை நம்பியே இருக்கும். இந்நிலத்தில் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, துவரை, கொள்ளு, காராமணி முதலிய பயிர்கள் விளையும்.

4. அகல உழுவதனைவிட ஆழ உழுதல் நன்று - அப்பொழுதுதான் கீழிருக்கும் மண் மேலும், மேலிருக்கும் மண் கீழும் புரளும். மண்ணிலுள்ள களை விதைகள் முளைக்கும். மீண்டும் மீண்டும் உழவு செய்யும்போது களைகள் நீங்கி, மண் புழுதியாகும்.

5. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

6. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ் - பயிர்களைப் பூச்சிகள் தாக்காத வகையிலும், ஆடுமாடுகள் மேயாத வகையிலும் தவிராமல் பாதுகாத்து வருதல் வேண்டும். 

7. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் - பிரேம் சந்த், இந்திமொழியில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர். அவருடைய கதைகள் பெரும் புகழ்பெற்றவை. பிரேம் சந்த் ஒருமுறை உடல் நலமில்லாமல் இருந்தார். ஆனால், அந்த நிலையிலும் எழுத்துப் பணியினை விடாமல் செய்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட அவர் மனைவி, 'ஏன் இப்படி உங்களை வருத்திக் கொள்கிறீர்கள் ? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால்தானே எழுத முடியும்; எழுதுவதனை நிறுத்தி உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” என்று வற்புறுத்திக் கூறினார்.

8. "பருவத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை" என்னும் பழமொழிகளுக்கேற்பக் காலத்தே பயிர்செய்து பயன் கண்டனர் நம் முன்னோர்.

9. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

10. 'உணவே மருந்து; மருந்தே உணவு' என்னும் முதுமொழிக்கேற்ப, நம் முன்னோர்களின் உணவுமுறை இருந்து வந்தது. அதனை நாமும் கடைப்பிடிப்போம்.

10. ஆடையில்லா மனிதன் அரை மனிதன்

11. ஆள் பாதி ஆடை பாதி

12. சிட்டாய்ப் பறந்து விட்டான் - அதனால்தான் விரைவாகச் செல்பவனை இவ்வாறு கூறுகிறோம்.

பழமொழிகள் 

  • அச்சில் வார்த்தார் போல - ஒற்றுமை
  • அணி வகுத்தாற் போல - ஒழுங்கு
  • அடுத்தது காட்டும் பளிங்கு போல - வெளிப்படுத்தல் 
  • அலையில் சிக்கிய துரும்பு போல - துன்பம்
  • அலையில்லாக் கடல் போல் - அமைதி
  • அரைக் கிணறு தாண்டியவன் போல - ஆபத்து 
  • அரண்மனை மாதிரி வீடு - பெரியது
  • அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - பொறுமை 
  • ஆழம் தெரியாமல் காலை விட்டாற்போல - அறியாமை
  • இரும்பைக் கண்ட காந்தம் போல - கவர்ச்சி
  • இலைமறைகாய் போல - மறைந்திருத்தல்
  • அவலை நினைத்து உரலை இடித்தாற் போல் -  கவனம்
  • உடுக்கை இழந்தவன் கை போல - ஆதரவு, நம்பு, உதவி 
  • உமிகுற்றிக் கை வருத்தினால் போல - வேதனை, வருத்தம் 
  • உமையும், சிவனும் போல - நட்பு, நெருக்கம்
  • உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை, நெருக்கம்
  • உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல -  உறுதி
  • ஊமை கண்ட கனவு போல - தவிப்பு, கூற இயலாமை
  • ஊசியும், நூலும் போல - இணை பிரியாமை
  • ஊருணி நீர் நிறைந்திருத்தல் போல - உதவுதல்
  • ஏழை பெற்ற செல்வம் போல - மகிழ்ச்சி
  • ஏரி முன்னர் வைத்தூறு போல - அழிவு உறுதி
  • ஒருநாள் கூற்றுக்கு மீசை எடுத்தாற் போல - வீண் செயல்
  • ஒண்டவந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை ஒட்டினாற் போல - விரட்டுதல்
  • கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் - கால தாமதம்
  • கல் பிள்ளையார் போல - உறுதி
  • கயிரற்ற பட்டம் போல - தவித்தல்
  • கடல்மடை திறந்தாற்போல - பெருக்கம்
  • கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல - துன்பம்
  • கடன்பட்டார் நெஞ்சம் போல - கலக்கம்
  • கண்ணிலாதான் கண் பெற்று இழந்ததுப் போல - தவிப்பு 
  • கடலில் கரைத்த காயம் போல - பயனற்றது
  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள்- நேரத்தை சரியாக பயன்படுத்துதல்
  • காட்டுத் தீ போல வேகமாக - பரவுதல்
  • கல் மேல் எழுத்துப் போல - உறுதியாக
  • குன்றின் மேலிட்ட விளக்குப் போல - புகழ், பயன் பயனுடைமை
  • குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல் (group4-2024)
  • கைப் புண்ணிற்கு கண்ணாடி வேண்டாதது போல - தெளிவாகத் தெரிதல் 
  • கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல - எதிர்பாராமை
  • குடத்தில் இட்ட விளக்குப் போல -  இகழ்ச்சி (மறைத்தல்)
  • குருடன் கண் பெற்றது போல - மகிழ்ச்சி
  • குருடும் செவிடும் கூத்துப் பார்த்தது போல - பயனின்மை
  • கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல - அறியாமை
  • குளிக்கப் போய் சேற்றை பூசிக் கொண்டு வருவது போல - குறும்புகாலில் ஈடுபடுவது
  • சூல் கொண்ட மேகம் - எதிர்பார்ப்பு
  • காராண்மை போல ஒழுகுதல் - வள்ளண்மை
  • சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல - அதிக இன்பம்
  • சாயம் போன சேலை போல - அழகின்மை, மதிப்பின்மை
  • செய்தி காட்டுத் தீ போல பரவியது - விரைவு
  • சித்திரை பதுமைப் போல - அழகு
  • சிதறிய முத்துப் போல - வீண்
  • சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல - வேண்டாத வேலை
  • சூரியனைக் கண்ட பனி போல் - விலகல்
  • செவிடன் காதில் சங்கு ஊதியது போல - பயனின்மை
  • செல்லரித்த ஒலை போல - வீண்
  • செம்புலப் பெயல் நீர் போல - சேர்ந்ததன் தன்மையாதல்
  • செந்தமிழும் சுவையும் போல - ஒற்றுமை
  • தயிர் கடையும் பொழுது தாழி உடைந்தது போல -  வேதனை
  • தாயைக் கண்ட சேயைப் போல - அதிக மகிழ்ச்சி
  • தோன்றி மறையும் வானவில் போல - நிலையாமை
  • தோண்டத் தோண்ட நீர் சுரத்தல் போல - பெருக்கம்
  •  நகமும், சதையும் போல - இணை பிரியாமை
  • நாண் அறுத்த வில் போல - பயனற்றது
  • நீரும், நெருப்பும் போல - விலகுதல்
  • நன்றும் கலந்தீமையால் திரிதல் போல - கெடுதல்
  • நீர் மேல் எழுத்துப் போல - வெளித் தெரியாமை, நிலையற்றது
  • நெருப்பு ஆறும், மயிர் பாலமும் போல - இயலாத செயல் இல்லாத ஒன்று
  • பத்தரை மாற்றுத் தங்கம் போல - பெருமை
  • பஞ்சத்து ஆண்டிபோல - வறுமை
  • பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல - இயல்பு
  • பாரமேற்றிய வண்டி போல் - சுமை
  • பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை போல - வெகுளித் தன்மை
  • புயலின் சீக்கிய கலம் போல - நடுக்கம்,கலக்கம்
  • பகலவனைக் கண்ட பனிப்போல - ஒட்டம், விலகுதல்
  • புனையா ஒவியம் போல - அழகு
  • பொதிர் கொள் பூமணம் போல- மறைந்திருத்தல்
  • மணியும் ஒளியும் போல - சிதைவு
  • மலடி பெற்ற மகன் போல - பெருமிதம்
  • மலையிட்ட விளக்குப் போல - பயனுடைமை, உயர்வு
  • மாலுமி இல்லா மரக்கலம் போல - துன்பம்
  • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல- மறைந்திருத்தல், ஆழமாக இருத்தல்
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் -  இயலாமை
  • முக்காலம் உணர்ந்த முனிவர் போல் - அறிவு
  • வள்ளியும் முருகனும் போல - ஒற்றுமை, அன்பு 
  • விழலுக்கு இறைத்த நீர் போல - வீண் (வீணாதல்), பயனற்றது
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல - வருத்தம்
  • விரலுக்கு ஏத்த வீக்கம் போல - மன நிறைவு

மரங்கள் தொடர்பான சில பழமொழிகள் 

  • அத்தி பூத்தாற் போல அறிய செயல் - அருமை
  • அன்றலர்ந்த மலர் போல - புத்துணர்ச்சி
  • அடியற்ற மரம் போல - விழுதல்
  • அழுத பிள்ளைக்கு வாழைப் போல -  ஏமாற்றுதல்
  • ஆற்றில் கரைத்த புளிப்போல - பயனின்மை
  • இடிவிழுந்த மரம் போல - வேதனை
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு
  • எள்ளில் எண்ணெய் போல - ஒளிந்திருத்தல்
  • எட்டாத பழம் புளிக்கும் என்பது போல - ஏமாற்றம்
  • கனியிருக்க காய் கவர்ந்தாற்- போல தேவையற்ற செயல்
  • கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல - பிறரை ஏமாற்றுதல்
  • சேற்றில் முளைத்த செந்தாமரை போல - உயர்வு, மேன்மை
  • தாமரை இலைத் தண்ணீர் போல - பற்றின்மை
  • நீருக்குள் பாசி போல - நட்பு
  • பசுமரத்து ஆணிபோல - எளிதாக பதிதல்
  • பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல - இயலாத செயல்
  • பழம் நழுவி பாலில் விழுந்தது போல - இன்ப மிகுதி
  • பற்று மரமில்லா கொடிபோல - ஆதரவின்மை
  • புளியம் பழமும் ஓடும் போல - ஒட்டாமை
  • பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல - உயர்வு
  • பூவும் மணமும் - நட்பு
  • மலரும் மணமும் - ஒற்றுமை
  • மழை காணாப் பயிர் போல - வாடுதல்
  • மழை கண்ட பயிர் போல - மகிழ்ச்சி
  • வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல - மென்மை
  • மரம் போல்வர் - மக்கள் பண்பு இல்லாதவர்
  • மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல - மயங்குதல்
  • வேம்பும் அரசும் போல - ஒற்றுமை
  •  வேலியே பயிரை மேய்ந்தது போல - நயவஞ்சகம்
  • ஞாயிறு கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிப்பிறப்பின் சிறப்பு 
  • கடுகு போல் உள்ளம் கொண்டோன் - சிறுமை

விலங்குகள் தொடர்பான மேலும் சில பழமொழிகள் 

  • அழலில் விழுந்த புழுப்போல, அனலில் பட்ட புழுப்போல - வேதனை, துடிப்பு, துன்பம் (கண்டு உருகுதல்)
  • ஆப்பசைத்த குரங்கு போல - வேதனை (சிக்குதல் )
  • இருதலைக் கொல்லி எறும்பு போல - தவிப்பு
  • இலவு காத்த கிளி போல - ஏமாற்றம்
  • இடிகேட்ட நாகம் போல - மருட்சி, நடுக்கம்
  • இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல், வேதனை
  • உடும்புப் பிடிபோல - பிடிப்பு
  • எலியும், பூனையும் போல - விரோதம், பகை
  • கவரிமான் போல - மானம்
  • கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது போல - அத்துமீறல் 
  • காண மயிலாட அதுகண்டு ஆடும் வான்கோழி போல - தாழ்வு உயர்வின்மை
  • காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தது போல - ஆர்வம், வேகம்
  • கிணற்றுத் தவளை போல - அறியாமை
  • குன்றை முட்டிய குருவி போல - வேதனை
  • குட்டி போட்ட பூனை போல - தவிப்பு, அலைதல்
  • குரங்கு கை பூமாலை போல - நாசம்
  • கிளியை வளர்த்து பூனைக் கையில் கொடுத்தது போல - வேதனை
  • கூழில் விழுந்த ஈப்போல - தவிப்பு
  • கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போல - பயம்
  • சிவ பூஜையில் கரடி போல - தேவையற்ற வரவு
  • சீறிய நாகம் போல - கோபம்
  • சொன்னதைச் சொல்லதும் கிளிப்பிள்ளைப் போல - அறிவின்மை
  • திருடனைத் தேள் கொட்டியது போல - சொல்ல முடியாத வேதனை
  • தெரு நாய் போல - அலைச்சல்
  • நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை
  • நாய் பெற்ற தெங்கம்பழம் போல - பயனின்மை
  • நாயும், பூனையும் போல - பகைமை
  • நுணலும் தன்வாயால் கெடும் - அறியாமை
  • பசுந்தோல் போர்த்திய புலி - நயவஞ்சகம்
  • பசுவை பிரிந்த கன்று போல - பிரிவு
  • பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போல - துன்பம், மீளாமை
  • பாம்பும் கீரியும் போல - பகை
  • பாம்புக்கு பால் வார்த்தது போல - தீமையான செயல்
  • புற்றிலிருக்கும் பாம்பென - சீற்றம், கோபம்
  • புற்றீசல் போல - அதிகம் பெருகம், மிகுதி
  • பெட்டிப் பாம்பென - அடக்கம்
  • மது உண்ட குரங்கு போல - மயக்கம்
  • மலையைக் கில்லி எலி பிடிப்பது - வேண்டாத செயல்
  • மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி 
  • மதம் கொண்ட யானை போல - வீரம்
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல - பயனின்மை
  • மான் கூட்டத்தில் புகுந்த புலி போல - பெரும் வேட்டை
  • யானை வாய்க்கரும்பு போல - நடுக்கம்
  • வலையில் அகப்பட்ட மான் போல - துன்பம்
  • வளர்த்த கடா மார்பில் பாய்வது போல - துன்பம்
  • விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல - ஆபத்து, அறியாமை
  • வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல - நடுக்கம்
  • வெயிலில் அகப்பட்ட புழுப்போல, அனலில் விழுந்த புழுப்போல - வேதனை, துன்பம்
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை 
  •  மதில்மேல் பூனை - உறுதியின்மை

விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.

  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை 
  • பசுந்தோல் போர்த்திய புலி - நயவஞ்சகம்
  • பசுவை பிரிந்த கன்று போல பிரிவு
  • அனலில் விழுந்த புழுப்போல - துன்பம்
  • இலவு காத்த கிளி போல - ஏமாந்து போதல்
  • மதில் மேல் பூனை - உறுதியின்மை 
  • இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல் 
  • இடி ஓசை கேட்ட நாகம் போல - அச்சம்
  • வெயிலில் அகப்பட்ட புழுப்போல - வேதனை
  • வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல - நடுக்கம்
  • விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல - ஆபத்து, அறியாமை
  • வளர்த்த கடா மார்பில் பாய்வது போல - துன்பம் 
  • வலையில் அகப்பட்ட மான் போல - துன்பம்
  • யானை வாய்க்கரும்பு போல - நடுக்கம்
  • முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல - இயலாமை 
  • மான் கூட்டத்தில் புகுந்த புலி போல - பெரும் வேட்டை
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல - பயனின்மை
  • மது உண்ட குரங்கு போல - மயக்கம்
  • மலையைக் கில்லி எலி பிடிப்பது - வேண்டாத செயல்
  • மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
  • மதம் கொண்ட யானை போல - வீரம்
  • பெட்டிப் பாம்பென -அடக்கம்
  • புற்றிலிருக்கும் பாம்பென - சீற்றம், கோபம்
  • பாம்புக்கு பால் வார்த்தது போல - தீமையான செயல்
  • பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போல - துன்பம் மீளாமை
  • பாம்பும் கீரியும் போல - பகை
  • புற்றீசல் போல - அதிகம், பெருக்கம், மிகுதி

உரிய எழுத்துகளை நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக.

1. இ-க்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சி-கு. (று, ற)

விடைஇறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு

2. எ-ம்புக்குத் தெரியாத க-ம்பு இல்லை. (று, ௫)

விடைஎரும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. 

3. அ-ண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உ-வு மேல். (ற, ர )

விடை: அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர )

நாட்டுப்புறத் தமிழ்

  • இவற்றைச் சொலவடைகள் என மக்கள் சொல்வார்கள்.

சொலவடைகள்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. 

பின்வரும் பழமொழிகளைப் படியுங்கள். 

  • கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க.. ( ஆனம் - குழம்பு )
  • அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா? (நாழி - தானியங்களை அளக்கும் படி; அகவிலை - தானியவிலை)
  • திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு ? (திறவுகோல் - சாவி)

ஆனம், அகவிலை, திறவுகோல் முதலிய சொற்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிற்றூர்களில் இயல்பாகப் பேசப்பட்டவை. அவை இன்று மறைந்து வருகின்றன.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad