TNPSC Group 2, 2A, 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இலக்கணப் பிரிவின் கீழ் கேட்கப்படும் வாசித்தல், புரிந்து கொள்ளும் திறன் -"உவமைத் தொடரின் பொருளறிதல் " மற்றும் "பழமொழிகள் பொருளறிதல்" ஆகிய தலைப்புகள் எளிதாக மதிப்பெண்களைப் பெற்றுத் தரக்கூடியவை.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சொலவடைகளும், சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை கையாளப்படும் உவமைகளும் தேர்வுகளில் வினாக்களாகக் கேட்கப்படுகின்றன. இக்கட்டுரையில், தேர்வுக்குத் தேவையான முக்கியமான உவமைத் தொடர்கள், அவற்றின் விளக்கங்கள்,TNPSC Tamil Study Material PDF மற்றும் முந்தைய ஆண்டு வினா விடைத் தொகுப்புகளைத் தெளிவாகக் காண்போம்.
பழமொழிகள் தமிழ் விளக்கம் இங்கே உவமை அணி விளக்கம் இங்கே சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதைஇந்த பகுதியில் கீழ் கேட்கப்பட்ட சில TNPSC கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
TNPSC previous year questions and answers
- (a) ஆண்டிகள் மடம் கட்டியது போல
- (b) ஆற்றில் கரைத்த புளி போல
- (c) கரடி பிறை கண்டது போல
- (d) உள்ளீடற்ற புதர் போல
- 1. போலி
- 2. மிக அரிது
- 3. பயனற்ற செயல்
- 4. உருவாகாத் திட்டம்
| (a) | (b) | (c) | (d) | |
|---|---|---|---|---|
| (A) | 4 | 3 | 2 | 1 |
| (B) | 4 | 1 | 3 | 2 |
| (C) | 3 | 1 | 4 | 2 |
| (D) | 3 | 4 | 2 | 1 |
2. "நீர்மேல் எழுத்துப்போல" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க CCSE2-2AT/2025
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: தண்ணீரின் மேல் எழுதப்படும் எழுத்துக்கள் உடனே மறைந்துவிடுவது போல, வாழ்வில் நிலைத்து நிற்காமல் அழியக்கூடிய காரியங்களைக் குறிக்க இவ்வுவமை பயன்படுகிறது.
3. 'இடியோசை கேட்ட நாகம்போல' - என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க :CCSE2-2AT/2025
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: பயங்கரமான இடி சத்தத்தைக் கேட்கும் போது பாம்பு நடுங்கி மிரட்சியடைவது போல, மிகுந்த அச்சத்திற்கும் நடுக்கத்திற்கும் உள்ளாவதைக் குறிக்கும்.
4. "நீறு பூத்த நெருப்புப்போல" - இதில் 'நீறு' என்பதன் பொருள் என்ன?CCSE2-2AT/2025
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: 'நீறு' என்றால் சாம்பல் என்று பொருள். வெளியில் சாம்பல் மூடியிருந்தாலும் உள்ளே நெருப்பு தணல் கனன்றுகொண்டிருப்பது போல, வெளியில் தெரியாமல் மறைந்திருக்கும் ஆற்றலையோ அல்லது உணர்வையோ குறிக்கும்.
5. 'ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.CCSE-IV-GT/2025
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: மரப் பிளவுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த ஆப்பைத் தேவையில்லாமல் அசைத்து, அதில் தன் உடலைச் சிக்க வைத்துக் கொண்டு குரங்கு பட்ட துன்பத்தைப் போல, வீணான ஆபத்தில் சிக்கி 'வேதனை' அடைவதைக் குறிக்கும்.
6. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' (Group 4 2022)
விடையைக் காட்டு (Show Answer)
7. 'விழலுக்கு இறைத்த நீர் போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் யாது? (Group 2 2022)
விடையைக் காட்டு (Show Answer)
8. 'மடை திறந்த வெள்ளம் போல்' - உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க. (Group 2 2022)
விடையைக் காட்டு (Show Answer)
- (a) அலை ஓய்ந்த கடல் போல்
- (b) அடியற்ற மரம் போல்
- (c) மத்தில் அகப்பட்ட தயிர் போல்
- (d) புயலில் சிக்கிய பூங்கொடி போல்
- 1. நடுங்குதல்
- 2. மனம் உடைதல்
- 3. அமைதி
- 4. வீழ்தல்
| (a) | (b) | (c) | (d) | |
|---|---|---|---|---|
| (A) | 3 | 4 | 2 | 1 |
| (B) | 3 | 1 | 4 | 2 |
| (C) | 4 | 3 | 2 | 1 |
| (D) | 4 | 1 | 3 | 2 |
உவமைத் தொடர்கள் (Idioms) - 8ம் வகுப்பு
நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும்.
- ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.
- இவை ஒரு பொருளை மற்றொன்றுடன் ஒப்பிட்டு விளக்கப் பயன்படுபவை.
- மயில் போல ஆடினாள்.
- மீன் போன்ற கண்.
இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.
| மயில், மீன் | உவமை அல்லது உவமானம் |
| ஆடுதல், கண் | உவமேயம் |
| போல, போன்ற | உவம உருபுகள் |
- இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர்.
- உவமையால் விளக்கப்படும் பொருளை (ஆடுதல், கண்) உவமேயம் என்பர்.
- இத்தொடர்களில் வந்துள்ள 'போல', 'போன்ற' என்பவை உவம உருபுகளாகும்.
இத்தொடரைப் படியுங்கள்.
- மலர்ப்பாதம் - மலர் போன்ற பாதம்
இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.
| மலர் | உவமை (உவமானம்) |
| பாதம் | பொருள் (உவமேயம்) |
| போன்ற | உவம உருபு |
எடுத்துக்காட்டு (Tamil Idioms & Phrases)
| வரிசை எண் | உவமைத் தொடர் | விளக்கம் / பொருள் | எடுத்துக்காட்டுத் தொடர் |
|---|---|---|---|
| 1 | மடை திறந்த வெள்ளம் போல் | தடையின்றி மிகுதியாக | திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர். |
| 2 | உள்ளங்கை நெல்லிக்கனி போல | வெளிப்படைத் தன்மை | பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். |
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்- Tamil Idioms & Phrases with Meaning
டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் (TNPSC General Tamil) மற்றும் தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, பாடப்புத்தகங்களில் உள்ள மிக முக்கியமான விலங்குகள் மற்றும் மரங்கள் தொடர்பான உவமைத் தொடர்கள் (Uvamai Thodar), அவற்றின் பொருள் மற்றும் விளக்கங்களுடன் (Proverbs with Meanings) இங்கே அகரவரிசைப்படி (Alphabetical Order) முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் வீடியோ உங்கள் தேர்வுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
தேடல் பெட்டி (Search Bar): உங்களுக்குத் தேவையான தலைப்பை (எடுத்துக்காட்டாக: பழமொழிகள், பொருள் , விளக்கம் ) உள்ளிட்டுத் தேடினால், அதற்குரிய எல்லா உவமைத் தொடர்களும் உங்களுக்காக நொடிப்பொழுதில் திரையில் தோன்றும். இதன் மூலம் உங்கள் நேரத்தைச் சேமித்து, தேவையான குறிப்புகளை விரைவாகப் படித்துப் பயனடையலாம்!
| வ.எண் | உவமைத் தொடர் (Uvamai Thodar) | பொருள் / விளக்கம் (Meaning) |
|---|---|---|
| 1 | அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல | பொறுமை / பொறுமையுடன் இருப்பது |
| 2 | அச்சில் வார்த்தார் போல | ஒற்றுமை |
| 3 | அடியற்ற மரம் போல | விழுதல் |
| 4 | அடுத்தது காட்டும் பளிங்கு போல | வெளிப்படுத்தல் |
| 5 | அணி வகுத்தாற் போல | ஒழுங்கு |
| 6 | அத்தி பூத்தாற் போல | அரிய செயல், அருமை |
| 7 | அனலில் பட்ட புழுப்போல (அழலில் விழுந்த புழுப்போல) | துன்பம், வேதனை, துடிப்பு |
| 8 | அன்றலர்ந்த மலர் போல | புத்துணர்ச்சி / புத்துணர்ச்சியுடன் காணப்படுவது |
| 9 | அவலையை நினைத்து உரலை இடித்தாற் போல | கவனமின்மை |
| 10 | அலையில் சிக்கிய துரும்பு போல | துன்பம் |
| 11 | அலையில்லாக் கடல் போல | அமைதி / அமைதியாக இருப்பது |
| 12 | அரைக் கிணறு தாண்டியவன் போல | ஆபத்து |
| 13 | அரண்மனை மாதிரி வீடு | பெரியது |
| 14 | அழுத பிள்ளைக்கு வாழைப் பழம் கொடுத்தது போல | ஏமாற்றுதல் |
| 15 | ஆப்பசைத்த குரங்கு போல | வேதனை, சிக்குதல் |
| 16 | ஆழம் தெரியாமல் காலை விட்டாற்போல | அறியாமை |
| 17 | ஆற்றில் கரைத்த புளிப்போல | பயனின்மை |
| 18 | ஆண்டிகள் மடம் கட்டியது போல | உருவாகாத் திட்டம் |
| 19 | ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் | துன்பம் |
| 20 | இஞ்சி தின்ற குரங்கு போல | விழித்தல், வேதனை |
| 21 | இடியோசை கேட்ட நாகம்போல | மருட்சி, நடுக்கம், அச்சம் |
| 22 | இடிவிழுந்த மரம் போல | வேதனை அடைதல் |
| 23 | இரும்பைக் கண்ட காந்தம் போல | கவர்ச்சி |
| 24 | இருதலைக் கொல்லி எறும்பு போல | தவிப்பு / தவிப்பது |
| 25 | இலவு காத்த கிளி போல | ஏமாற்றம் அடைதல் |
| 26 | இலைமறைகாய் போல | மறைந்திருத்தல் |
| 27 | உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல | உறுதி / உறுதியுடன் |
| 28 | உடுக்கை இழந்தவன் கை போல | ஆதரவு, நம்பு, உதவி செய்தல் |
| 29 | உடும்புப் பிடிபோல | உறுதியான பிடிப்பு, உறுதியின்மை (சூழல் சார்ந்து) |
| 30 | உமிகுற்றிக் கை வருந்தினால் போல | வேதனை, வருத்தம் |
| 31 | உயிரும் உடம்பும் போல (உடலும் உயிரும் போல) | ஒற்றுமை, நெருக்கம் |
| 32 | உமையும், சிவனும் போல | நட்பு, நெருக்கம் |
| 33 | உள்ளங்கை நெல்லிக்கனி போல | தெளிவு, வெளிப்படைத் தன்மை / தெளிவாகத் தெரிவது |
| 34 | ஊசியும், நூலும் போல | இணை பிரியாமை |
| 35 | ஊமை கண்ட கனவு போல | தவிப்பு, கூற இயலாமை |
| 36 | ஊருணி நீர் நிறைந்திருத்தல் போல | உதவுதல் |
| 37 | எட்டாத பழம் புளிக்கும் என்பது போல | ஏமாற்றம் |
| 38 | எலியும் பூனையும் போல | விரோதம், பகைமை |
| 39 | எள்ளில் எண்ணெய் போல | ஒளிந்திருத்தல் |
| 40 | ஏழை பெற்ற செல்வம் போல | மகிழ்ச்சி |
| 41 | ஏரி முன்னர் வைத்தූறு போல | அழிவு உறுதி |
| 42 | ஒருநாள் கூத்துக்கு மீசை எடுத்தாற் போல | வீண் செயல் |
| 43 | ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டினாற் போல | விரட்டுதல் |
| 44 | ஒற்கத்தின் ஊற்றாம் துணை போல | ஊன்று கோல் |
| 45 | கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல | கால தாமதம் |
| 46 | கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல | துன்பம் |
| 47 | கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போல | தவிப்பு |
| 48 | கண் கட்டு வித்தை போல | மாயத்தேரை |
| 49 | கயிரற்ற பட்டம் போல | தவித்தல் |
| 50 | கரடி பிறை கண்டது போல | மிக அரிது, அதிசயம் |
| 51 | கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது போல | அத்துமீறல் |
| 52 | காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தது போல | ஆர்வம், வேகம் |
| 53 | காண மயிலாட அதுகண்டு ஆடும் வான்கோழி போல | தாழ்வு உயர்வின்மை |
| 54 | காற்றின் சீக்கிய கலம் போல (புயலில் சிக்கிய கலம் போல) | நடுக்கம், கலக்கம் |
| 55 | காற்றுள்ள போதே தூற்றிக் கொள் | நேரத்தை சரியாக பயன்படுத்துதல் |
| 56 | காட்டுத் தீ போல பரவியது (செய்தி காட்டுத் தீ போல பரவியது) | வேகமாக பரவுதல், விரைவு |
| 57 | காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல | தற்செயல் நிகழ்வு |
| 58 | கடன்பட்டார் நெஞ்சம் போல | கலக்கம் |
| 59 | கடலில் கரைத்த காயம் போல (கடலில் கரைத்த பெருங்காயம் போல) | பயனற்றது |
| 60 | கடல்மடை திறந்தாற்போல (கரவொலி கடல்மடை திறந்தாற்போல) | பெருக்கம் |
| 61 | கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல | பிறரை ஏமாற்றுதல் |
| 62 | கடுகு போல் உள்ளம் கொண்டோன் | சிறுமை |
| 63 | கனியிருக்க காய் கவர்ந்தாற் போல | தேவையற்ற செயல் |
| 64 | கவரிமான் போல | மானம் |
| 65 | கல் பிள்ளையார் போல | உறுதி |
| 66 | கல் மேல் எழுத்துப் போல | உறுதியாக |
| 67 | கைப் புண்ணிற்கு கண்ணாடி வேண்டாதது போல | தெளிவாகத் தெரிதல் |
| 68 | கிணற்றுத் தவளை போல | அறியாமை / அறியாமல் இருப்பது |
| 69 | கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல | எதிர்பாரா நிகழ்வு |
| 70 | கிளியை வளர்த்து பூனைக் கையில் கொடுத்தது போல | வேதனை, கொடுமை |
| 71 | கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல | எதிர்பாராத நல்வரவு |
| 72 | குடத்தில் இட்ட விளக்குப் போல | இகழ்ச்சி (மறைத்தல்) |
| 73 | குருடன் கண் பெற்றது போல | மகிழ்ச்சி |
| 74 | குன்றை முட்டிய குருவி போல | வேதனை |
| 75 | குட்டி போட்ட பூனை போல | தவிப்பு, அலைதல் / தவிப்பது |
| 76 | குரங்கு கை பூமாலை போல | நாசம் |
| 77 | குருடும் செவிடும் கூத்துப் பார்த்தது போல | பயனின்மை |
| 78 | குன்றின் மேல் இட்ட விளக்குப் போல (குன்றின் மேலிட்ட விளக்கைப் போல) | பயனுடைமை, எல்லார்க்கும் பயன்படுவது |
| 79 | கூழில் விழுந்த ஈப்போல | தவிப்பு |
| 80 | கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல | அறியாமை |
| 81 | கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போல | பயம் |
| 82 | குளிக்கப் போய் சேற்றை பூசிக் கொண்டு வருவது போல | குறும்புகளில் ஈடுபடுவது / வீண் வினை |
| 83 | குந்தித் தின்றால் குன்றும் மாளும் | சோம்பல் |
| 84 | சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல | அதிக இன்பம் |
| 85 | சாயம் போன சேலை போல | அழகின்மை, மதிப்பின்மை |
| 86 | சித்திரை பதுமைப் போல | அழகு |
| 87 | சிதறிய முத்துப் போல | வீண் |
| 88 | சிவ பூஜையில் கரடி போல | தேவையற்ற வரவு |
| 89 | சிறகு இழந்த பறவை போல | கொடுமை, இயலாமை |
| 90 | சீறிய நாகம் போல | கோபம் |
| 91 | சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல | வேண்டாத வேலை |
| 92 | சூரியனைக் கண்ட பனி போல் (சூர்யனைக் கண்ட பனி போல்) | விலகல், நீங்குதல் |
| 93 | செவிடன் காதில் சங்கு ஊதியது போல | பயனின்மை |
| 94 | செல்லரித்த ஓலை போல | வீண் |
| 95 | சேற்றில் முளைத்த செந்தாமரை போல (சேற்றில் மலர்ந்த செந்தாமரை) | உயர்வு, மேன்மை, குடிப்பிறப்பின் சிறப்பு |
| 96 | செந்தமிழும் சுவையும் போல | ஒற்றுமை |
| 97 | செம்புலப் பெயல் நீர் போல | சேர்ந்ததன் தன்மையாதல் |
| 98 | சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல | அறிவின்மை |
| 99 | சூல் கொண்ட மேகம் | எதிர்பார்ப்பு |
| 100 | ஞாயிறு கண்ட தாமரை போல | மகிழ்ச்சி |
| 101 | தயிர்கடையும் பொழுது தாழி உடைந்தது போல | வேதனை |
| 102 | தாயைக் கண்ட சேயைப் போல | அதிக மகிழ்ச்சி |
| 103 | தாமரை இலைத் தண்ணீர் போல | பற்றின்மை |
| 104 | திருடனைத் தேள் கொட்டியது போல | சொல்ல முடியாத வேதனை |
| 105 | தெரு நாய் போல | அலைச்சல் |
| 106 | தோன்றி மறையும் வானவில் போல | நிலையாமை |
| 107 | தோண்டத் தோண்ட நீர் சுரத்தல் போல | பெருக்கம் |
| 108 | தானே ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் | பாசம் / ரத்த உறவு |
| 109 | நகமும், சதையும் போல | இணை பிரியாமை, பெருநட்பு |
| 110 | நத்தைக்குள் முத்துப் போல | மேன்மை |
| 111 | நாண் அறுத்த வில் போல | பயனற்றது |
| 112 | நாய் பெற்ற தெங்கம்பழம் போல | பயனின்மை, தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருப்பது |
| 113 | நீருக்குள் பாசி போல | நட்பு |
| 114 | நாயும், பூனையும் போல | பகைமை |
| 115 | நீரும், நெருப்பும் போல | விலகுதல் / பகை |
| 116 | நீர் மேல் எழுத்துப் போல | நிலையற்றது, வெளித் தெரியாமை |
| 117 | நெருப்பாறும், மயிர் பாலமும் போல | இல்லாத ஒன்று / இயலாத செயல் |
| 118 | நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல | ஒற்றுமையின்மை |
| 119 | நீறு பூத்த நெருப்புப்போல | மறைந்திருக்கும் ஆற்றல் / சாம்பல் மூடிய தணல் |
| 120 | நுணலும் தன் வாயால் கெடும் | அறியாமை / தன் வாயால் அழிதல் |
| 121 | பகலவனைக் கண்ட பனிப்போல | விலகுதல், நீங்குதல், ஓட்டம் |
| 122 | பத்தரை மாற்றுத் தங்கம் போல | பெருமை |
| 123 | பசுமரத்து ஆணிபோல | எளிதாக பதிதல், எளிதில் மனத்தில் பதிதல் |
| 124 | பஞ்சத்து ஆண்டிபோல | வறுமை |
| 125 | பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல | இயலாத செயல் |
| 126 | பழம் நழுவி பாலில் விழுந்தது போல | இன்ப மிகுதி |
| 127 | பசுந்தோல் போர்த்திய புலி | நயவஞ்சகம் |
| 128 | பசுவை பிரிந்த கன்று போல | பிரிவு |
| 129 | பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல | இயல்பு |
| 130 | பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போல | மீளாமை துன்பம் |
| 131 | பாம்பும் கீரியும் போல | பகை |
| 132 | பாரமேற்றிய வண்டி போல் | சுமை |
| 133 | பற்று மரமில்லா கொடிபோல | ஆதரவின்மை |
| 134 | பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை போல | வெகுளித் தன்மை |
| 135 | பாம்புக்கு பால் வார்த்தது போல | தீமையான செயல் |
| 136 | புளியம் பழமும் ஓடும் போல | ஒட்டாமை |
| 137 | புற்றிலிருக்கும் பாம்பென | சீற்றம், கோபம் |
| 138 | புற்றீசல் போல | அதிகம் பெருகல், மிகுதி |
| 139 | புனையா ஓவியம் போல | அழகு |
| 140 | பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல | உயர்வு |
| 141 | பூவும் மணமும் போல | நட்பு |
| 142 | பெட்டிப் பாம்பென | அடக்கம் |
| 143 | பேடிகை வாளாண்மை போலக்கெடும் | முயற்சியின்மை |
| 144 | பொருபுலி புலியோடு சிலைத்த போல் | எதிரெதிரே நின்று போரிடல் |
| 145 | பொன்மலர் மணம் பெற்றது போல | பொருட்செல்வர் அறிவுச் செல்வத்தால் தேடிக்கொள்வது |
| 146 | புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | சான்றாண்மை |
| 147 | மடை திறந்த வெள்ளம் போல் (மடைதிறந்த வெள்ளம் போல) | தடையின்றி மிகுதியாக, விரைவு |
| 148 | மலரும் மணமும் போல | ஒற்றுமை, இணைந்திருத்தல் |
| 149 | மணியும் ஒளியும் போல | சிதைவு / இணைபிரியாமை |
| 150 | மழை காணாப் பயிர் போல | வாடுதல் |
| 151 | மழை கண்ட பயிர் போல | மகிழ்ச்சி |
| 152 | மது உண்ட குரங்கு போல | மயக்கம் |
| 153 | மலையைக் கில்லி எலி பிடிப்பது போல | வேண்டாத செயல் / வீண் முயற்சி |
| 154 | மேகம் கண்ட மயில் போல | மகிழ்ச்சி |
| 155 | மதம் கொண்ட யானை போல | வீரம் |
| 156 | மலடி பெற்ற மகன் போல | பெருமிதம் |
| 157 | மலையிட்ட விளக்குப் போல | பயனுடைமை, உயர்வு |
| 158 | மன்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல | பயனில்லை, பயனின்மை |
| 159 | மான் கூட்டத்தில் புகுந்த புலி போல | பெரும் வேட்டை |
| 160 | மாலுமி இல்லா மரக்கலம் போல | துன்பம் |
| 161 | முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல | இயலாமை |
| 162 | முக்காலம் உணர்ந்த முனிவர் போல் | தெளிவு / அறிவு |
| 163 | மரம் போல்வர் | மக்கள் பண்பு இல்லாதவர் |
| 164 | மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல | மயங்குதல் |
| 165 | மின்னாமல் இடி இடித்தது போல | எதிர்பாராத செய்தி / அதிர்ச்சி |
| 166 | யானையால் யானைத்தற்று (யானையைக் கொண்டு யானையைப் பிடித்தல்) | ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தல் |
| 167 | யானை வாய்க்கரும்பு போல | நடுக்கம் / பேராபத்து |
| 168 | யானை பசிக்கு சோளப்பொரி போல | இயலாமை / பற்றாக்குறை |
| 169 | வலையில் அகப்பட்ட மான் போல | துன்பம் |
| 170 | வள்ளியும் முருகனும் போல | ஒற்றுமை, அன்பு |
| 171 | வளர்த்த கடா மார்பில் பாய்வது போல | துன்பம் / துரோகம் |
| 172 | வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல | மென்மை |
| 173 | விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல | ஆபத்து, அறியாமை |
| 174 | விழலுக்கு இறைத்த நீர் போல | வீண், பயனற்ற செயல் |
| 175 | வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல | வருத்தம் / வேதனை அதிகரித்தல் |
| 176 | விரலுக்கு ஏத்த வீக்கம் போல | மன நிறைவு / தகுதிக்கு ஏற்ப |
| 177 | வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல | நடுக்கம் / பெரும் சேதம் |
| 178 | வெயிலில் அகப்பட்ட புழுப்போல | வேதனை |
| 179 | வேம்பும் அரசும் போல | ஒற்றுமை |
| 180 | வேலியே பயிரை மேய்ந்தது போல் | நயவஞ்சகம் / துரோகம் |
விலங்குகள் தொடர்பான உவமைத் தொடர்கள்களைத் திரட்டி வருக.
| வ.எண் | விலங்குகள் தொடர்பான உவமைத் தொடர் / பழமொழி | விளக்கம் / பொருள் (குழுக்கள்) |
|---|---|---|
| 1 | ஆப்பசைத்த குரங்கு போல | வேதனை (சிக்குதல்) |
| 2 | இருதலைக் கொல்லி எறும்பு போல | தவிப்பு |
| 3 | கிளியை வளர்த்து பூனைக் கையில் கொடுத்தது போல | வேதனை |
| 4 | குன்றை முட்டிய குருவி போல | வேதனை |
| 5 | கூழில் விழுந்த ஈப்போல | தவிப்பு |
| 6 | திருடனைத் தேள் கொட்டியது போல | சொல்ல முடியாத வேதனை |
| 7 | பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போல | துன்பம், மீளாமைத் துன்பம் |
| 8 | அனலில் விழுந்த புழுப்போல | துன்பம் |
| 9 | பசுவை பிரிந்த கன்று போல | பிரிவுத் துன்பம் |
| 10 | வலையில் அகப்பட்ட மான் போல | துன்பம் / சிக்கிக்கொள்ளுதல் |
| 11 | வெயிலில் அகப்பட்ட புழுப்போல (விழுந்த மரம் போல) | வேதனை |
| 12 | இடிகேட்ட நாகம் போல (இடி ஓசை கேட்ட நாகம் போல) | மருட்சி, நடுக்கம், அச்சம் |
| 13 | கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போல | பயம் |
| 14 | சீறிய நாகம் போல | கோபம் |
| 15 | புற்றிலிருக்கும் பாம்பென | சீற்றம், கோபம் |
| 16 | வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல | நடுக்கம் / பேரழிவு |
| 17 | யானை வாய்க்கரும்பு போல | நடுக்கம் / பேராபத்து |
| 18 | காண மயிலாட அதுகண்டு ஆடும் வான்கோழி போல | தாழ்வு உயர்வின்மை (போலித்தனம்) |
| 19 | கிணற்றுத் தவளை போல | அறியாமை |
| 20 | சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல | அறிவின்மை |
| 21 | நுணலும் தன்வாயால் கெடும் | அறியாமை / தன் வாயால் அழிதல் |
| 22 | இஞ்சி தின்ற குரங்கு போல | விழித்தல் / மிரட்சி |
| 23 | இலவு காத்த கிளி போல | ஏமாந்து போதல் / ஏமாற்றம் |
| 24 | யானை பசிக்கு சோளப்பொரி போல (முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல) | பற்றாக்குறை / இயலாமை |
| 25 | விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல | ஆபத்து, அறியாமை |
| 26 | எலியும், பூனையும் போல | விரோதம், பகை |
| 27 | கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது போல | அத்துமீறல் |
| 28 | நாயும், பூனையும் போல | பகைமை |
| 29 | பாம்பும் கீரியும் போல | தீராத பகை |
| 30 | பாம்புக்கு பால் வார்த்தது போல | தீமையான செயல் / வீண் உதவி |
| 31 | பசுந்தோல் போர்த்திய புலி | நயவஞ்சகம் |
| 32 | வளர்த்த கடா மார்பில் பாய்வது போல | நம்பிக்கைத் துரோகம் / துன்பம் |
| 33 | குரங்கு கை பூமாலை போல | நாசம் / மதிப்பிழப்பு |
| 34 | நாய் பெற்ற தெங்கம்பழம் போல | பயனின்மை (தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் தராமல்) |
| 35 | மலையைக் கில்லி எலி பிடிப்பது போல | வேண்டாத செயல் / வீண் முயற்சி |
| 36 | மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல | பயனின்மை / நம்பகத்தன்மையற்றது |
| 37 | உடும்புப் பிடிபோல | உறுதியான பிடிப்பு |
| 38 | மதில் மேல் பூனை போல | உறுதியின்மை / நிலையற்ற நிலை |
| 39 | கவரிமான் போல | மானம் / சுயமரியாதை |
| 40 | காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தது போல | ஆர்வம், வேகம் |
| 41 | குட்டி போட்ட பூனை போல | தவிப்பு, அலைச்சல் |
| 42 | சிவ பூஜையில் கரடி போல | தேவையற்ற வரவு (இடையூறு) |
| 43 | தெரு நாய் போல | வீண் அலைச்சல் |
| 44 | நத்தைக்குள் முத்துப் போல | மேன்மை |
| 45 | மது உண்ட குரங்கு போல | மயக்கம் |
| 46 | மதம் கொண்ட யானை போல | வீரம் / கட்டுக்கடங்கா வேகம் |
| 47 | மான் கூட்டத்தில் புகுந்த புலி போல | பெரும் வேட்டை / அச்சமூட்டல் |
| 48 | புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது | சான்றாண்மை / கொள்கை உறுதி |
| 49 | புற்றீசல் போல | அதிகம், பெருக்கம், மிகுதி |
| 50 | பெட்டிப் பாம்பென | அடக்கம் |
| 51 | மேகம் கண்ட மயில் போல | மகிழ்ச்சி / பேரானந்தம் |
மரங்கள் தொடர்பான சில உவமைத் தொடர்கள்
| வரிசை எண் | மரங்கள் தொடர்பான உவமைத் தொடர் | விளக்கம் / பொருள் |
|---|---|---|
| 1 | அத்தி பூத்தாற் போல | அரிய செயல் - அருமை |
| 2 | அன்றலர்ந்த மலர் போல | புத்துணர்ச்சி |
| 3 | அடியற்ற மரம் போல | விழுதல் |
| 4 | அழுத பிள்ளைக்கு வாழைப் போல | ஏமாற்றுதல் |
| 5 | ஆற்றில் கரைத்த புளிப்போல | பயனின்மை |
| 6 | இடிவிழுந்த மரம் போல | வேதனை |
| 7 | உள்ளங்கை நெல்லிக்கனி போல | தெளிவு |
| 8 | எள்ளில் எண்ணெய் போல | ஒளிந்திருத்தல் |
| 9 | எட்டாத பழம் புளிக்கும் என்பது போல | ஏமாற்றம் |
| 10 | கடுகு போல் உள்ளம் கொண்டோன் | சிறுமை |
| 11 | கனியிருக்க காய் கவர்ந்தாற் போல | தேவையற்ற செயல் |
| 12 | கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல | பிறரை ஏமாற்றுதல் |
| 13 | ஞாயிறு கண்ட தாமரை போல | மகிழ்ச்சி |
| 14 | சேற்றில் முளைத்த செந்தாமரை போல | உயர்வு, மேன்மை |
| 15 | சேற்றில் மலர்ந்த செந்தாமரை | குடிப்பிறப்பின் சிறப்பு |
| 16 | தாமரை இலைத் தண்ணீர் போல | பற்றின்மை |
| 17 | நீருக்குள் பாசி போல | நட்பு |
| 18 | பசுமரத்து ஆணிபோல | எளிதாக பதிதல் |
| 19 | பழம் நழுவி பாலில் விழுந்தது போல | இன்ப மிகுதி |
| 20 | பற்று மரமில்லா கொடிபோல | ஆதரவின்மை |
| 21 | புளியம் பழமும் ஓடும் போல | ஒட்டாமை |
| 22 | பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல | இயலாத செயல் |
| 23 | பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல | உயர்வு |
| 24 | பூவும் மணமும் | நட்பு |
| 25 | மலரும் மணமும் | ஒற்றுமை |
| 26 | மழை காணாப் பயிர் போல | வாடுதல் |
| 27 | மழை கண்ட பயிர் போல | மகிழ்ச்சி |
| 28 | மரம் போல்வர் | மக்கள் பண்பு இல்லாதவர் |
| 29 | மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல | மயங்குதல் |
| 30 | வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல | மென்மை |
| 31 | வேம்பும் அரசும் போல | ஒற்றுமை |
| 32 | வேலியே பயிரை மேய்ந்தது போல | நயவஞ்சகம் |
மனவேதனை தொடர்பான சில உவமைத் தொடர்கள்
| வ.எண் | உவமைத் தொடர் | பொருள் / விளக்கம் |
|---|---|---|
| 1 | இருதலைக் கொள்ளி எறும்பு போல | எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் இரண்டு பக்கமும் வேதனையில் தவிப்பது. |
| 2 | ஆப்பசைத்த குரங்கு போல | தேவையில்லாத காரியத்தில் தலையிட்டு வீணான ஆபத்தில் சிக்கி வேதனைப்படுதல். |
| 3 | இஞ்சி தின்ற குரங்கு போல | என்ன செய்வதென்று தெரியாமல் முகத்தை சுளித்துக்கொண்டு வேதனைப்படுதல். |
| 4 | இடிவிழுந்த மரம் போல | எதிர்பாராத பெரிய இழப்பால் நிலைகுலைந்து வேதனை அடைதல். |
| 5 | உமிகுற்றிக் கை வருந்தியது போல | பயனில்லாத ஒரு செயலைச் செய்துவிட்டு வீணாகக் கையும், மனமும் வருந்துதல். |
| 6 | திருடனைத் தேள் கொட்டியது போல | தனக்கு வந்த துன்பத்தை வெளியில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிப்பது. |
| 7 | வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல | ஏற்கனவே வேதனையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் வகையில் பேசுவது அல்லது நடப்பது. |
துன்பம் தொடர்பான சில உவமைத் தொடர்கள்
| வ.எண் | உவமைத் தொடர் | பொருள் / விளக்கம் |
|---|---|---|
| 1 | அனலில் பட்ட புழுப்போல (அழலில் விழுந்த புழுப்போல) | நெருப்பில் விழுந்த புழு துடிப்பது போன்ற தாங்க முடியாத துன்பம். |
| 2 | அலையில் சிக்கிய துரும்பு போல / ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் | சொந்தமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல், சூழ்நிலைகளின் கட்டாயத்தால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறுதல். |
| 3 | கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல | எந்த ஒரு துணையும், வழியும் தெரியாத நடுக்காட்டில் தவிப்பது போன்ற ஆதரவற்ற, நம்பிக்கையற்ற துன்ப நிலை. |
| 4 | பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போல | மரணம் அல்லது பெரிய ஆபத்து நிச்சயம் என்று தெரிந்தும், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் துன்பம். |
| 5 | வலையில் அகப்பட்ட மான் போல | சுதந்திரமாக இருக்க முடியாமல் ஆபத்தான வலையில் சிக்கிக்கொண்டு படும் அவதி. |
| 6 | மழை காணாப் பயிர் போல | தண்ணீரின்றி வாடும் பயிரைப் போல, ஆதரவின்றி வறுமையிலோ அல்லது கவலையிலோ வாடுதல். |
| 7 | பற்று மரமில்லாக் கொடி போல | வாழ்க்கையில் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தவிக்கும் துன்ப நிலை. |
அச்சமும் நெஞ்ச நடுக்கமும் தொடர்பான சில உவமைத் தொடர்கள்
| வ.எண் | உவமைத் தொடர் | பொருள் / விளக்கம் |
|---|---|---|
| 1 | இடிகேட்ட நாகம் போல (இடியோசை கேட்ட நாகம்போல) | பயங்கரமான இடி சத்தத்தைக் கேட்டுப் பாம்பு நடுங்குவது போல, மிகுந்த அச்சத்திற்கும் மிரட்சிக்கும் உள்ளாவது. |
| 2 | கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போல | தண்டிக்கும் அதிகாரத்தைக் கண்டு பயந்து, சொன்னபடி அடங்கி நடப்பது. |
| 3 | யானை வாய்க்கரும்பு போல | யானையின் வாயில் சிக்கிய கரும்பு தப்ப முடியாது என்பது போல, பேராபத்தில் சிக்கி நடுங்குவது. |
| 4 | காற்றின் சிக்கிய கலம் போல (புயலில் சிக்கிய கப்பல்) | எந்த நொடியும் மூழ்கலாம் என்ற கடுமையான அச்சத்திலும் கலக்கத்திலும் இருப்பது. |
| 5 | விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல | தனக்கு வரப்போகும் ஆபத்தை (அழிவை) அறியாமல், கவர்ச்சியில் மயங்கிப் பயமின்றிச் சென்று சிக்கிக்கொள்ளுதல் (மூர்க்கத்தனமான அறியாமைப் பயம்). |
| 6 | பெட்டிப் பாம்பைப் போல | அதிகாரத்திற்கோ அல்லது ஆபத்திற்கோ பயந்து அடங்கி நடுங்கிப் போய் இருப்பது. |
சொலவடைகள்
சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.
உவமை அணி விளக்கம்
பழமொழிகள்(Tamil Proverbs)
நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள் (Proverbs), விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.
🎯இந்தத் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
பொருத்துக: (பொருத்தப்பட்டுள்ளது) உவமைத் தொடர்கள்
| உவமைத் தொடர் | பொருள் / விளக்கம் |
|---|---|
| காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல | தற்செயல் நிகழ்வு |
| கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல | எதிர்பாரா நிகழ்வு |
| பசு மரத்து ஆணி போல | எளிதில் மனத்தில் பதிதல் |
| விழலுக்கு இறைத்த நீர் போல | பயனற்ற செயல் |
| நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல | ஒற்றுமையின்மை |
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
| வ.எண் | உவமைத் தொடர் | பொருள் / விளக்கம் | எடுத்துக்காட்டுத் தொடர் |
|---|---|---|---|
| 1 | குன்றின் மேலிட்ட விளக்கைப் போல | எல்லார்க்கும் பயன்படுவது | முத்துராமலிங்க தேவர் அவர்களின் அறிவுரைகள் அனைத்தும் குன்றின் மேலிட்ட விளக்கை போல பயன்படுகிறது. |
| 2 | வேலியே பயிரை மேய்ந்தது போல | நயவஞ்சகம் / துரோகம் | வேலியே பயிரை மேய்ந்தது போல சில அரசு அதிகாரிகள் மக்களுக்குச் சேவை செய்யாமல் தனக்காகப் பயன்படுத்துகின்றனர். |
| 3 | பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல | இன்ப மிகுதி | தீபாவளி பண்டிகைக்குக் குடும்பத்தினர் அனைவரும் வந்ததுடன் பரிசுகள் தந்தது, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது. |
| 4 | உடலும் உயிரும் போல | ஒற்றுமை, நெருக்கம் | கணவன் மனைவியும் உடலும் உயிரும் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும். |
| 5 | கிணற்றுத் தவளை போல | அறியாமை | மற்றவர் எனக்குச் செய்த தீமைகளை அறியாமல் கிணற்றுத் தவளை போல இருந்து விட்டேன். |
TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET Tamil Model Questions and Answers
1. "இருதலைக் கொல்லி எறும்பு போல" - என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: எரியும் கொள்ளிக்கட்டையின் இரு பக்கமும் நெருப்பு இருக்கும் போது இடையில் உள்ள எறும்பானது எங்குச் செல்வது என்று தெரியாமல் தவிப்பது போல, ஒரு நபர் இருபக்கமும் துன்பத்தை எதிர்கொண்டு தவிப்பதைக் குறிக்கும்.
2. "பாம்பும் கீரியும் போல" என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: பாம்பும் கீரியும் எப்போதும் ஒன்றுக்கொன்று தீராத எதிர்ப்பைக் கொண்டிருப்பது போல, இரு தரப்பினருக்கு இடையே நிலவும் மாறாத பகைமையை உணர்த்த இவ்வுவமை பயன்படுகிறது.
3. "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல" - என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: மரத்தின் உச்சிக் கொம்பில் இருக்கும் தேனை எடுக்க நடக்க முடியாத ஒரு முடவன் ஆசைப்பட்டாலும் அவனால் அதைச் செய்ய முடியாது. இது ஒருவரால் செய்ய முடியாத 'இயலாமை' நிலையைக் குறிக்கும்.
4. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' உவமையால் விளங்கப் பெறும் பொருளைத் தேர்க.
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது எவ்வித மறைவும் இன்றித் தெளிவாகத் தெரியும். அதுபோல, ஒரு விஷயம் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் விளங்குவதைக் குறிக்க இவ்வுவமை பயன்படுகிறது.
5. 'இலவுகாத்த கிளி போல' என்னும் உவமை மூலம் விளக்கும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: இலவம்பஞ்சின் காய் பழுத்தால் பழம் கிடைக்கும் என கிளி காத்திருக்கும், ஆனால் அது பஞ்சாக வெடித்து ஏமாற்றமளிக்கும். வீணான எதிர்பார்ப்பால் ஏற்படும் 'ஏமாற்றம்' அல்லது ஏமாந்து போதலை உணர்த்தும்.
6. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: தன்னைத் தோண்டுபவர்களையும் விழாமல் தாங்கி நிற்கும் பூமியைப் போல, தமக்குத் தீமை செய்பவர்களையும் பொறுத்துக் கொள்ளும் 'பொறுமை' என்னும் நற்பண்பைக் குறிக்கும்.
7. "மலரும் மணமும் போல" இவ்வுவமை விளக்கும் பொருளைக் கண்டறிக.
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: மலரையும் அதன் நறுமணத்தையும் எப்படித் தனியாகப் பிரிக்க முடியாதோ, அதுபோல இரு மனிதர்கள் அல்லது கருத்துக்கள் எப்போதும் பிரியாமல் 'இணைந்திருத்தல்' அல்லது ஒற்றுமையாக இருப்பதைக் குறிக்கும்.
8. 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: ஒருவருக்குத் துன்பம் வரும்போது அவரோடு உள்ளவர்கள் விலகி நின்றாலும், ரத்த பந்தம் உடைய உறவினர்களின் உள்ளம் துடித்துத் தன்னிச்சையாக உதவிக்கு வரும். இது குடும்ப 'பாசம்' மற்றும் ரத்த உறவின் வலிமையைக் குறிக்கும்.
9. 'மின்னாமல் இடி இடித்தது போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: பொதுவாக மின்னல் தோன்றிய பிறகே இடி சத்தம் கேட்கும். ஆனால் மின்னல் இல்லாமலேயே திடீரென இடி இடித்தால் அது எவ்வளவு ஆச்சரியமோ, அதுபோல வாழ்வில் நிகழும் 'எதிர்பாராத' அதிர்ச்சியான செய்தியைக் குறிக்கும்.
10. 'மடைதிறந்த வெள்ளம் போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: அணையின் மதகை அல்லது மடையைத் திறந்தவுடன் நீர் எவ்விதத் தடையுமின்றி அதிவேகமாகப் பாய்ந்து செல்லும். அதுபோல, ஒரு காரியம் எவ்விதத் தடையுமின்றி 'விரைவாகவோ' அல்லது மிக அதிகமாகவோ நடப்பதைக் குறிக்கும்.
11. 'பிறைநுதல்' - என்ற உவமையில் நுதல் என்பதன் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: 'நுதல்' என்றால் தமிழ் இலக்கியத்தில் நெற்றி என்று பொருள். மூன்றாம் பிறை நிலவைப் போன்ற வடிவத்தைக் கொண்ட அழகான 'நெற்றிக்கு' இப்பெயர் உவமையாகக் கூறப்படுகிறது.
12. 'உடுக்கை இழந்தவன் கைபோல' பொருத்தமான பொருளைத் தேர்க.
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: ஒருவனுடைய ஆடை (உடுக்கை) நழுவும் போது, அவனது கை எப்படித் தானாகவே சென்று ஆடையைக் காக்கிறதோ, அதுபோல நண்பனுக்குத் துன்பம் வரும்போது உடனடியாகச் சென்று 'உதவுதல்' வேண்டும் என்ற நட்பின் இலக்கணத்தைக் குறிக்கும்.
13. 'நகமும் சதையும் போல' - உவமைக்கேற்ற பொருளைத் தேர்க.
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: விரல் நகமும் அதோடு ஒட்டியிருக்கும் சதையும் எப்போதும் பிரிக்க முடியாதபடி ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும். அதுபோல நெருங்கிய நண்பர்கள் பிரியாமல் இணைந்திருக்கும் 'பெருநட்பைக்' குறிக்கும்.
14. 'நாய் பெற்ற தெங்கம் பழம்' - இவ்வுவமையால் விளங்கப்பெறும் பொருள் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: நாய் ஒரு முழுத் தேங்காயைப் பெற்றால், அதன் கடினமான ஓட்டினால் அதை உடைத்துத் தானும் திண்ண முடியாது, பிற விலங்குகளுக்கும் கொடுக்காது. அதுபோலப் பயனுள்ள ஒரு பொருளை வைத்துக்கொண்டு தானும் பயன்படுத்தாமல் பிறருக்கும் தராமல் இருப்போரைக் குறிக்கும்.
15. 'குன்றின் மேலிட்ட விளக்கென' - பொருத்தமான பொருளைத் தேர்க.
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: மலையின் உச்சியில் வைக்கப்பட்ட விளக்கின் வெளிச்சம் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் எவ்விதத் தடையுமின்றித் தெளிவாகத் தெரியும். அதுபோல ஒருவருடைய புகழோ அல்லது ஒரு நற்காரியமோ உலகத்தார் அனைவருக்கும் 'தெளிவாகத் தெரிவதை' உணர்த்தும்.
வெளி இணைப்புகள் (Reference Links / External Links)
உள் இணைப்புகள் (Internal Links)
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

Hi Please, Do not Spam in Comments