TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் என்ற பகுதி வருகிறது.
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் பகுதியில் பெரும்பாலும் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.
பாடத்தலைப்புகள்(toc)
சொல்லும் பொருளும் - 10 வகுப்பு தமிழ் சமச்சீர்க் கல்வி
- துய்ப்பது - கற்பது, தருதல்
- மேவலால் - பொருந்துதல், பெறுதல்
- அருகுற - அருகில்
- முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
- மயலுறுத்து - மயங்கச்செய்
- ப்ராண ரஸம் - உயிர்வளி
- லயத்துடன் - சீராக
- நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
- நேமி - சக்கரம்
- கோடு - மலை
- கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
- நறுவீ - நறுமணம் கொண்ட அரும்புகள்
- தூஉய் - தூவி
- விரிச்சி - நற்சொல்
- சுவல் - தோள்
- கப்பித்தான் - தலைமை மாலுமி (கேப்டன்)
- பறவை மீன், அவுலியா மீன் - மீன் வகை
- பிலவான் - இந்தோனேசியாவிலுள்ள இடம்
- தொங்கான் - கப்பல்
- அசைஇ - இளைப்பாறி
- அல்கி - தங்கி
- கடும்பு - சுற்றம்
- நரலும் - ஒலிக்கும்
- ஆரி - அருமை
- படுகர் - பள்ளம்
- வயிரியம் - கூத்தர்
- வேவை - வெந்தது
- இறடி - தினை
- பொம்மல் - சோறு
- கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்
- சடைத்து புளித்து - சலிப்பு
- அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
- பதனம் - கவனமாக
- மகுளி - சோற்றுக் கஞ்சி
- பாச்சல் - பாத்தி
- நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
- வரத்துக்காரன் - புதியவன்
- தொலவட்டையில் - தொலைவில்
- விசும்பு - வானம்
- ஊழி - யுகம்
- ஊழ் - முறை
- தண்பெயல் - குளிர்ந்த மழை
- ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
- பீடு - சிறப்பு
- ஈண்டி - செறிந்து திரண்டு
- கேள்வியினான் - நூல் வல்லான்
- கேண்மையினான் - நட்பினன்
- தார்- மாலை
- முடி- தலை
- முடிவு - சினம்
சொற்பொருள்
- புயல் - மேகம்;
- பணை – மூங்கில்;
- பகரா - கொடுத்து;
- பொருது - மோதி
- நிதி - செல்வம்;
- புனல் - நீர்;
- கவிகை - குடை;
- வானகம் - தேவருலகம்.
- கிளை - சுற்றம்;
- நோன்றல் - பொறுத்தல்.
6ம் வகுப்பு தமிழ் சொல்பொருள்
- ஆர்வலர் - அன்புடையவர்;
- புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்;
- பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
- என்பு - எலும்பு - இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது
- வழக்கு - வாழ்க்கைநெறி;
- ஆருயிர் - அருமையான உயிர்;
- என்பு - எலும்பு
- ஈனும் - தரும்;
- ஆர்வம் - விருப்பம்; வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் பொருள்.
- நண்பு - நட்பு
- வையகம் - உலகம்;
- என்ப - என்பார்கள்
- மறம் - வீரம்; கருணை, வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்
- என்பிலது - எலும்பு இல்லாதது (புழு)
- அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
- அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத;
- வன்பாற்கண் - வன்பால் + கண் - பாலை நிலத்தில். ஃிராங்கண்ஸ்டைன்
- தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல;
- வற்றல்மரம் - வாடிய மரம்
- புறத்துறுப்பு -உடல் உறுப்புகள்;
- எவன் செய்யும் - என்ன பயன் ?;
- அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
- நாய்க்கால் - நாயின் கால்;
- ஈக்கால் - ஈயின் கால்;
- அணியர் - நெருங்கி இருப்பவர்;
- என்னாம் - என்ன பயன் ?;
- சேய்(மை) - தொலைவு;
- செய் - வயல்;
- அனையார் - போன்றோர்.
- தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்;
- வண்மை - கொடை;
- உழுபடை வேளாண்மை செய்யப் பயன்படும் கருவிகள்;
- கோணி - சாக்கு;
- நடை - சாலையில் செல்லும் வண்டிகள்;
- பறப்பு - பறக்கும் வானூர்தி முதலியன;
- ஞாலம் - உலகம்:
- உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்;
- தமிழ்மகள் - ஒளவையார்;
- மேலவர் - மேலோர்;
- கீழவர் - கீழோர்;
- மற்றோர் - பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்;
- நெறியினின்று - அறநெறியில் நின்று.
- மடவார் - பெண்கள்
- தகைசால் - பண்பில் சிறந்த
- மனக்கினிய - மனத்துக்கு இனிய
- காதல் புதல்வர் - அன்பு மக்கள்
- ஓதின் - எதுவென்று சொல்லும்போது
- புகழ்சால் - புகழைத் தரும்
- உணர்வு - நல்லெண்ணம்
- வெய்யவினை - துன்பம் தரும் செயல்
- வேம்பு - கசப்பான சொற்கள்
- விறாப்பு - இறுமாப்பு
- பலரில் - பலர் + இல், பலருடைய வீடுகள்
- புகலல் ஒண்ணாதே - செல்லாதே
- சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
- கடம் - உடம்பு
- ஒன்றோ - தொடரும் சொல்.
- நாடாகு ஒன்றோ - நாடாக இருந்தால் என்ன அல்லது... எனத் தொடரும்.
- அவல் - பள்ளம்;
- மிசை - மேடு;
- ஆடவர் - ஆண்கள்; இங்கு மனிதர்களைப் பொதுவாசகக் குறித்தது.
- நல்லை - நல்லதாக இருக்கிறாய்.
- ஈரம் - அன்பு;
- அளைஇ - கலந்து;
- படிறு - வஞ்சம்;
- செம்பொருள் - மெய்ப்பொருள்.
- அகன் - அகம், உள்ளம்;
- அமர்- விருப்பம்;
- அமர்ந்து - விரும்பி
- முகன் - முகம்;
- இன்சொல் - இனியசொல்
- இன்சொலன்- இனிய சொற்களைப் பேசுபவன்.
- அமர்ந்து - விரும்பி;
- அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து;
- இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே.
- துன்புறூஉம் - துன்பம் தரும்;
- துவ்வாமை - வறுமை;
- யார் மாட்டும் - எல்லாரிடமும்;
- இன்புறூஉம் - இன்பம் தரும்.
- ஒருவற்கு - ஒருவனுக்கு;
- அணி - அழகுக்காக அணியும் நகைகள்.
- அல்லவை - பாவம்;
- நாடி - விரும்பி.
- நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து;
- நன்றி - நன்மை;
- பயக்கும் - கொடுக்கும்;
- தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்.
- சிறுமை - துன்பம்;
- மறுமை - மறுபிறவி;
- இம்மை - இப்பிறவி.
- இனிதீன்றல் - இனிது + ஈன்றல்;
- ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
- வன்சொல் - கடுஞ்சொல்
- எவன்கொலோ - ஏனோ?
- கவர்தல் - நுகர்தல்;
- அற்று - அதுபோன்றது.
- இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
- அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
- ஆரைத்தான் - யாரைத்தான்
- பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
- புவி - உலகம்
- குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
- இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி,
- குணக்கடலே! அருட்கடலே! - முருகனை இவ்வாறு அழைக்கிறார்
- குரைகடல் - ஒலிக்கும் கடல்; அசுரர்கள் கடல் வடிவில் வந்தார்கள் என்பது கதை
- பரங்குன்றுளான் - திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
- வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது;
- மந்தி - பெண் குரங்கு;
- வான்கவிகள் - தேவர்கள்;
- கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்;
- காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை;
- பரிக்கால் - குதிரைக்கால்;
- கூனல் - வளைந்த;
- வேணி - சடை.
- மின்னார் - பெண்கள்;
- மருங்கு - இடை;
- சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்
- கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்;
- பீற்றல் குடை - பிய்ந்த குடை.
- நிருமித்த - உருவாக்கிய
- சமூகம் - மக்கள் குழு
- விளைவு - வளர்ச்சி
- அசதி - சோர்வு
- ஆழிப் பெருக்கு - கடல் கோள்
- ஊழி- நீண்டதொருகாலப்பகுதி
- உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை
- மேதினி - உலகம்
- திங்கள்- நிலவு
- பொற்கோட்டு- பொன்மயமான சிகரத்தில்
- கொங்கு - மகரந்தம்
- மேரு - இமயமலை
- அலர்- மலர்தல்
- நாமநீர்- அச்சம் தரும் கடல்
- அளி- கருணை
- திகிரி - ஆணைச்சக்கரம்
- காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
- மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
- சித்தம்- உள்ளம்
- இயன்றவரை - முடிந்தவரை
- ஒளடதம் - மருந்து
- ஒன்றுபட்டு- ஒருமித்து
- மாசற - குற்றம் இல்லாமல்
- சீர்தூக்கின்- ஒப்பிட்டு ஆராய்ந்தால்
- தேசம் - நாடு
- மன்னற்கு - மன்னனுக்கு
- தூற்றும்படி - இகழும்படி
- மாற்றார்- மற்றவர்
- நெறி- வழி
- வற்றாமல் - குறையாமல்
- மேதைகள்- அறிஞர்கள்
- மூத்தோர் - பெரியோர்
- நன்றியறிதல்- பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
- நட்டல்- நட்புக் கொள்ளுதல்
- நந்தவனம் - பூஞ்சோலை
- பண்- இசை
- பார் - உலகம்
- இழைத்து - பதித்து
- மல்லெடுத்த- வலிமைபெற்ற
- சமர்- போர்
- மறம்- வீரம்
- எக்களிப்பு -பெருமகிழ்ச்சி
- கலம்- கப்பல்
- நல்கும்- தரும்
- கழவி- வயல்
- ஆழி- கடல்
- கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
- மின்னல்வரி- மின்னல் கோடு
- அரிச்சுவடி- அகரவரிசை எழுத்துகள்
- மெய் - உண்மை
- தேசம் - நாடு
- தண்டருள் - குளிர்ந்த கருணை
- கூர் - மிகுதி
- செம்மையருக்கு - சான்றோருக்கு
- பராபரமே- மேலான பொருளே
- ஏவல்- தொண்டு
- எய்தும்- கிடைக்கும்
- பணி- தொண்டு
- எல்லாரும்- எல்லா மக்களும்
- அல்லாமல் - அதைத்தவிர
- அஞ்சினர்- பயந்தனர்
- கருணை- இரக்கம்
- வீழும்- விழும்
- ஆகாது- முடியாது
- நீள்நிலம்- பரந்த உலகம்
- முற்றும்- முழுவதும்
- மாரி- மழை
- கும்பி- வயிறு
- பூதலம்- பூமி
- பார்- உலகம்
- ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்;
- காதல் - அன்பு, விருப்பம்;
- மேதை - அறிவு நுட்பம்;
- வண்மை - ஈகை, கொடை;
- பிணி - நோய்;
- மெய் - உடம்பு;
- நாணம் - செய்யக் கூடாததனைச் செய்ய அச்சப்படுதல்;
- சிறந்தன்று - சிறந்தது;
- வழிபடுதல் - போற்றி வணங்குதல்.
7ம் வகுப்பு தமிழ் சொல்பொருள்
- சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி:
- துன்னலர் - பகைவர், அழகிய மலர்:
- பரிவாய் - அன்பாய்;
- சாடும் - தாக்கும், இழுக்கும்;
- ஆடுபரி - ஆடுகின்ற குதிரை.
- கைம்மண்ணளவு - ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்;
- மெத்த - மிகுதியாக;
- பந்தயம் - போட்டி
- புலவீர் - புலவர்களே;
- கலைமடந்தை - கலைமகள்.
- ஈயும் - அளிக்கும்;
- நில்லாமை - நிலையாமை;
- நெறி - வழி;
- தூய்மை -தூய தன்மை;
- மாந்தர் - மக்கள்
- உண்பொழுது - உண்ணும்பொழுது
- பெறினும் - பெற்றாலும்;
- பால்பற்றி - ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில்
- இருந்து மாறுதல்);
- தோல்வற்றி - தோல்சுருங்கி;
- சாயினும் - அழியினும்;
- சான்றாண்மை - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்;
- குன்றாமை - குறையாது இருத்தல்;
- தூஉயம் - தூய்மை உடையோர்
- நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்;
- தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்;
- வனப்பு - அழகு;
- தூறு - புதர்;
- வித்து - விதை.
- மாரி - மழை;
- சேமம் - நலம்;
- தேசம் - நாடு;
- முட்டு - குவியல்;
- நெத்தி - நெற்றி
Please share your valuable comments