தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் 'விருந்தோம்பல்' முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
முன்றுறை அரையனார் - பழமொழி நானூறு ஆசிரியர் குறிப்பு TNPSC
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
காலம் - இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
சமயம் - பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
பிறப்பு
- ஊர்ப்பெயர் - பாண்டிய நாட்டு முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
- அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்
பழமொழி நானூறு நூல் குறிப்பு விளக்கம் TNPSC
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு.மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தைச் சுருக்கமாகக் கூறியதே பழமொழியாகும்.
வேறு பெயர்கள் - பழமொழியை
- மூதுரை,
- முதுமொழி,
- உலக வசனம்,
- பழமொழி
எனவும் கூறுவர்.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
இது தமிழறிஞர்களால் நாலடியாருக்கு இணையாக வைத்து மதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம்,மன இயல்பு ஆகியவற்றை அறிவதற்குரிய செய்திக் குறிப்புகளை இந்நூல் பெற்றுள்ளது.
பாவகை :
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம் பெறுமாறு பாடப்பெற்ற பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும்.
34 அதிகாரங்களில் அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
சிறந்தத் தொடர்கள்
- ஆற்றுணா வேண்டுவது இல்
- ஒன்றுறா முன்றிவோ இல்
- பாம்பறியும் பாம்பின் கால்
- முள்ளினால் முள் களையுமாறு
- இறைத்தோறும் ஊறுங்கிணறு
- தனிமரம் காட்டாவதுஇல்
- ஆயிரங் காக்கைக் கோர்கல்
- திங்களை நாய் குரைத்தன்று
- கற்றலின் கேட்டலே நன்று
இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
விருந்தோம்பல் - பழமொழி நானூறு பாடல்கள் விளக்கம்
"மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்ஒன்றுறா முன்றிலோ இல்"- முன்றுறை அரையனார்(code-box)
சொல்லும் பொருளும்
மாரி - மழை
வறந்திருந்த - வறண்டிருந்த
புகாவாக - உணவாக
மடமகள் - இளமகள்
நல்கினாள் - கொடுத்தாள்
முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி "ஒன்றுறா முன்றிவோ இல்" என்பதாகும்.
ஒன்றுறா முன்றிவோ இல் - ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
நூல் வெளி
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
கற்பவை கற்றபின்
1. வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
எழுவர் கொடுத்த கொடை - கடையேழு வள்ளல்கள்
- முல்லைக்கொடியின் கொழுகொம்பு பெறாத திகைப்பைக் கண்ணால் கண்டபின், தன் செல்வநிலையும், வாழ்வும் மறந்து, அதற்கு உதவுதலே உணர்வாய்த் தான் ஊர்ந்து வந்த தேரை அங்கு அதற்கு உரியதாக நிறுத்தி வந்தான் பாரி என்னும் வள்ளல்.
- இரவலர்க்குக் குதிரைகளை வழங்கி நாட்டையும் நல்கியவன் காரி என்னும் வள்ளல்.
- நீலநிறப் பட்டாடையை ஆலமர் செல்வனுக்குக் கொடுத்து வேண்டிய பொருள்களையும் ஊர்களையும் வந்தவர்க்கு எல்லாம் வழங்கி, எல்லாம் இழந்தவன் ஆய் என்னும் வள்ளல்,
- பெறுதற்கு அரிதாய் வாழ்நாள் வளர்ச்சிக்கு உரியதாய் பெற்ற நெல்லிக்கனியையும் தான் உண்ணக் கருதாமல், புலவர் நெடிது வாழ விழைந்து கொடுத்து மகிழ்ந்தவன் அதியமான்.
- நண்பர்தம் இல்லறம் நடத்தற்கு வேண்டுவன நல்கிப் புகழ் பெற்றவன் நள்ளி.
- கூத்தர்தம் கலைவாழ அவர்க்கு நாடு கொடுத்துக் களித்தவன் ஓரி.
- மயில் ஆடி அகவியதைக் கேட்டுக் குளிரால் நடுங்கிக் கூவியதாக உணர்ந்து தன் போர்வையை அதற்குக் கொடுத்தவன் பேகன்.
முல்லைக்குத் தேர்இரவலர்க்குக் குதிரைவந்தவர்க்கு ஊர்கள்புலவர்க்கு நெல்லிக்கனிஇல்லறத்திற்குப் பொருள்கூத்தர்க்கு நாடுமயிலுக்குப் போர்வை-டாக்டர் மு.வரதராசன், தமிழ் நெஞ்சம்(code-box)
2. விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
விருந்து போற்றுதல் - தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பு
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் 2. அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மரம் வளர்த்தால் ....... பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
2. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு - இலையில்
3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) மாரியொன்று
ஆ) மாரிஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
குறுவினா
1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
பாரி மகளிரின் பெயர்கள் - அங்கவை, சங்கவை
2. 'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை' - எவ்வாறு?
பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு எல்லாருக்கும் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
சிந்தனை வினா
தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக
ஒன்பது விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டும் - அதிவீரராம பாண்டியர் இயற்றிய காசிக்காண்டம்
விருந்தோம்பிய தன்மை - மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
TNPSC previous year questions and answers
1. பாரி மகளிரின் பெயர்கள்
அங்கவை, சங்கவை
2. நண்பர்தம் இல்லறம் நடத்தற்கு வேண்டுவன நல்கிப் புகழ் பெற்றவன்
நள்ளி
3. "ஒன்றுறா முன்றிவோ இல்" என்று கூறும் நூல்
பழமொழி நானூறு
4. கூத்தர்தம் கலைவாழ அவர்க்கு நாடு கொடுத்துக் களித்தவன்
ஓரி
5. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்
முன்றுறை அரையனார்
6. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
நீலநிறப் பட்டாடை - ஆய்
நெல்லிக்கனி - அதியமான்.
முல்லைக்கொடி - பாரி
குதிரை - காரி
7.பழமொழி நானூறு பா வகை
வெண்பா
8. மயில் ஆடி அகவியதைக் கேட்டுக் குளிரால் நடுங்கிக் கூவியதாக உணர்ந்து தன் போர்வையை அதற்குக் கொடுத்தவன்
பேகன்
9. முன்றுறை அரையனார் பின்பற்றியதாக கருதப்படும் சமயம்
சமணம்
10. அரையன் என்னும் சொல் குறிப்பது
அரசன்
11. முன்றுறை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
கி.பி. (பொ.ஆ.) நான்காம்
Please share your valuable comments