உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம்.
மலை அருவி நூல் வெளி
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
வயலும் வாழ்வும்
ஓடை எல்லாம் தாண்டிப்போயி - ஏலேலங்கிடி ஏலேலோஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து - ஏலேலங்கிடி ஏலேலோசீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி - சேத்துக்குள்ளே இறங்குறாங்கஏலேலங்கிடி ஏலேலோநாத்தெல்லாம் பிடுங்கையிலே - ஏலேலங்கிடி ஏலேலோநண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் - ஏலேலங்கிடி ஏலேலோஓடியோடி நட்டோமையா - ஏலேலங்கிடி ஏலேலோமடமடன்னு மடைவழியே - ஏலேலங்கிடி ஏலேலோ மண்குளிரத் தண்ணீர்பாய - ஏலேலங்கிடி ஏலேலோசாலுசாலாத் தாளுவிட்டு - ஏலேலங்கிடி ஏலேலோநாலுநாலா வளருதம்மா - ஏலேலங்கிடி ஏலேலோமணிபோலப் பால்பிடித்து - ஏலேலங்கிடி ஏலேலோ மனதையெல்லாம் மயக்குதம்மா - ஏலேலங்கிடி ஏலேலோஅறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோஆளுபணம் கொடுத்துவாரான் - ஏலேலங்கிடி ஏலேலோசும்மாடும் தேர்ந்தெடுத்து - ஏலேலங்கிடி ஏலேலோ சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் - ஏலேலங்கிடி ஏலேலோகிழக்கத்தி மாடெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோ கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலேலங்கிடி ஏலேலோகால்படவும் கதிருபூரா - ஏலேலங்கிடி ஏலேலோ கழலுதையா மணிமணியா - ஏலேலங்கிடி ஏலேலோ
- தொகுப்பாசிரியர் கி.வா. ஜகந்நாதன்
சொல்லும் பொருளும்
குழி - நில அளவைப்பெயர்
சாண் - நீட்டல் அளவைப்பெயர்
மணி - முற்றிய நெல்
சீலை - புடவை
மடை - வயலுக்கு நீர் வரும் வழி
கழலுதல் - உதிர்தல்
சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள்
பாடலின் பொருள்
உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர்.
நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர். ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.
பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.
அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.
மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்றுஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை-(நாட்டுப்புறப்பாடல்)
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
- மண்வெட்டி
- ஏர்
- கத்தி, அரிவாள்
- கோடரி
- உழவு இயந்திரம்
- துலா
- கடப்பாரை
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் பகுதிக்காகப் 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பொருத்துக.
வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக.
- மடமடன்னு - மண்குளிரத்
- ஏலேலங்கிடி - ஏலேலோ
- மணிபோலப் - மனதையெல்லா
- சாலுசாலாத் - நாலுநாலா
- கிழக்கத்தி - கழலுதையா
- மண்குளிரத் தண்ணீர்பாய
பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.
போயி, பிடிக்கிறாங்க, வளருது, இறங்குறாங்க, வாரான்
(எ.கா.) போயி - போய்
வளருது- வளர்கிறது.
இறங்குறாங்க - இறங்குகிறார்கள்
வாரான் - வருகிறான்.
குறுவினா
1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
2. நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
சிறுவினா
உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
- உழுதல்,
- விதைத்தல்,
- தொழு உரமிடுதல்,
- நீர் பாய்ச்சுதல்,
- களை எடுத்தல்,
- காத்தல்
சிந்தனை வினா
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
- உழுதல்,
- விதைத்தல்,
- தொழு உரமிடுதல்,
- நீர் பாய்ச்சுதல்,
- களை எடுத்தல்,
- காத்தல்
முதலியன இயற்கை வேளாண்மைக் கூறுகளாம். இக்கூறுபாடுகளை நன்கு உணர்ந்து, நம் தமிழர் உழவுத்தொழிலை இயற்கை முறையில் சிறப்பாக மேற்கொண்டனர்; உலகத்தார் பசிப்பிணியைப் போக்கி வந்தனர்;
1. வேளாண் பெருமக்கள் தாங்கள் விளைவித்த பயிர்களிலிருந்து நல்ல விதைகளைத் தேர்வுசெய்து, தூய்மைப்படுத்திப் பாதுகாத்துப் பின்பு பயன்படுத்துவர்;
ஆனால், இன்று சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
2. நம் முன்னோர் தொழு உரங்களையே பயன்படுத்தித் தரமான விளைச்சலைக் கண்டனர்.
ஆனால், இன்று உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி நல்ல விளைச்சல் எடுக்கலாம் என்று நினைத்துத் தேவைக்குமேல் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதனால் மண்ணின் தன்மையையும், நீரின் தன்மையையும் கெடுக்கும் அளவுக்குச் சூழ்நிலை உருவாகிவிட்டது.
இயற்கை வேளாண்மையால் எண்ணற்ற நன்மைகள் உண்டு. முக்கியமாக நிலம், நீர், காற்று, வான்வெளி இவை சிதைவடையாமல் பாதுகாக்கப்படுகின்றன. மக்களுக்கு உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பர்.
'உணவே மருந்து; மருந்தே உணவு' என்னும் முதுமொழிக்கேற்ப, நம் முன்னோர்களின் உணவுமுறை இருந்து வந்தது. அதனை நாமும் கடைப்பிடிப்போம்.
Please share your valuable comments