லகர, ளகர, ழகர வேறுபாடு TNPSC எழுத்து இலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : லகர, ளகர, ழகர வேறுபாடு என்ற பகுதி வருகிறது.

லகர, ளகர, ழகர வேறுபாடு பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. தவறான இணையை கூறுக

i) விலை - பொருளின் விலை

ii) விளை - உண்டாக்குதல்

iii) விழை - விரும்புதல்

A) i மட்டும்

B) i & ii 

C) i & iii

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை 


தமிழ் மயங்கொலி எழுத்துகள் என்றால் என்ன?

விலை; விளை; விழை;

மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு.

இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.

  • உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
  • ஆனால் இடையே பொருள் வேறுபாடு உண்டு.

மயங்கொலி எழுத்துகள் எத்தனை?

(ண, ன, ந),(ல, ழ, ள),(ர, ற) ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துகள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.

எழுத்துகளின் ஒலிப்புமுறை, அவற்றுக்கான வரிவடிவ வேறுபாடு, அவை சொல்லில் வரும் இடங்களையும் (முதல், இடை, கடை) தெள்ளத் தெளிவாய் மனத்து பதித்துக்கொள்வதைக் கடமையாகக்கொள்ள வேண்டும்.

ந, ண, ன, ற, ர,  ல, ள, ழ இவற்றின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது சாலச் சிறந்தது. இவ்வெழுத்துகளுக்கான சில அடிப்படை இலக்கணத்தையும் கசடறக் கற்றல் இன்றியமையாத கற்றல் பணியாகும்.

மேலுள்ள, 

  • எட்டு எழுத்துகளில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். 
  • றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. 
  • மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.

எடுத்துக்காட்டு 

  • முதல் - நண்டு, நாடகம்
  • இடை- பந்து, கண்டு, கன்று, கற்று, பார்த்து, கால்கள், கொள்வது, புகழ்வது
  • கடை - கண், அவன், பார், கால், கொள், புகழ்

லகர, ளகர, ழகர வேறுபாடு

லகரம்

ல - நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது 'வ' போல இருப்பதால் 'வகர லகரம்' என்கிறோம்.

ளகரம்

- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது 'ன' போல இருப்பதால் 'னகர ளகரம்' என்று கூறுவர்.

ழகரம்

- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). இது 'ம' போல இருப்பதால் 'மகர ழகரம்' என்று கூறுவது இலக்கண மரபு.

"ழ" தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் மயங்கொலி எழுத்துகள்


ல, ள, ழ - வேறுபாடு சொற்கள்

நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதி தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம்.நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்)
விலை - பொருளின் மதிப்புவிளை - உண்டாக்குதல்விழை - விரும்பு
இலை - செடியின் இலைஇளை - மெலிந்து போதல்இழை - நூல் இழை
ஒலி - சப்தம்ஒளி - வெளிச்சம்ஒழி - நீக்கு
கலி- துன்பம்களி - மகிழ்ச்சிகழி - தடி
வலி - துன்பம், வேதனைவளி - காற்றுவழி - பாதை
தலை- உறுப்புதளை - கட்டுதழை - இலை


மயங்கொலிப் பிழைகள்

அ. இரு சக்கர வண்டிகள் பலுது பார்க்கப்படும்.

இரு சக்கர வண்டிகள் பழுது பார்க்கப்படும்.

ஆ. நால்தோறும் பகல் காட்சி உண்டு.

நாள்தோறும் பகல் காட்சி உண்டு.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad