சந்திப்பிழை TNPSC எழுத்து இலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : சந்திப்பிழை என்ற பகுதி வருகிறது.

வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் (open)
புணர்ச்சி  (open)
பகுபத உறுப்புகள் விளக்கம்(open)

சந்திப்பிழை பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினாக்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC- Previous Year Questions

விடைகள்: BOLD செய்யப்பட்டுள்ளது. 

 1. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
  • விடை தெரியவில்லை

2. கீழ்க்காணும் வல்லினம் மிகும் இடம் குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • அந்த, இந்த, எந்த என்னும் 'சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
  • ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும் 
  • உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்.
  • சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சந்திப் பிழை என்றால் என்ன?

சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் போது ஏற்படும் மாற்றங்களில் ஏற்படும் பிழை ஆகும்.

  • வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்.

எடுத்துக்காட்டு 

  • கதையை படித்தேன்
  • எழுதி கொண்டேன்

மேலே உள்ள தொடர்களைப் படித்துப் பாருங்கள். இவற்றை இயல்பாகப் படிக்க இயலாதவாறு சொற்களுக்கு இடையே ஓர் ஓசை இடைவெளி இருப்பதை உணர முடிகிறதல்லவா? அவற்றைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள். 

  • கதையை + படித்தேன் = கதையைப் படித்தேன்
  • எழுதி + கொண்டேன் = எழுதிக் கொண்டேன்

இப்போது இயல்பாகப் படிக்க முடிகிறது அல்லவா? 

சந்திப் பிழைத்திருத்தம் 

வல்லினம் மிக வேண்டிய இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் மிகாமல் எழுதுவதும் சரியானது. இதனைச் சந்திப் பிழைத்திருத்தம் எனக் குறிப்பிடுவர்.

சந்திப்பிழை நீக்கி எழுதுக

1. வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.

விடை - வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.

2. அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசன புதுமையை புகுத்தினார்.

விடை - அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார்.

ஒற்றுப்பிழை நீக்கி எழுதுக

அ. கடமையை செய்; பலனை கேள்.

கடமையைச் செய்; பலனைக் கேள்.

ஆ. மர பொருள்கள் வாடகைக்கு கிடைக்கும்.

மரப் பொருள்கள் வாடகைக்குக் கிடைக்கும்.

இ. திரைபடம் காண வருக.

திரைப்படம் காண வருக.

தொடரில் பொருத்தமான ஒற்று எழுத்துகளை இடுக. [ க், ச், த், ப்]

அ. புகை உடல்நலத்திற்குக் கேடு. 

ஆ. மரம் வளர்ப்போம்; மழையைப் பெறுவோம். 

இ. நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

ஈ. இறைவனைத் தொழுவோம்; இன்பமுடன் வாழ்வோம். 

உ. இயற்கை உரமே வேளாண்மைக்குச் சிறந்த உரம்.

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.