TNPSC -
குரூப் 2/ 2A,குரூப் 4/VAO
- General Tamil பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் வரும் சான்றோர்களின் மேற்கோள்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
தமிழ் அறிஞர்களின் மேற்கோள்கள்
மகாகவி பாரதியார்
- இந்தியாதான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மைதான் என் நன்மை.
- இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி
- மாகாளி பராசக்தி உருசிய நாட்டினர்கடைக்கண் வைத்தா ளங்கே
- காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
- நாடும் மொழியும் நமதிரு கண்கள்
-
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் தந்த தமிழ்நாடு பாரதநாடு
- நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி இனிதாவது எங்கும் காணோம்
- மாதம் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்
- காக்கை சிறகினிலே நந்தலாலா
- காக்கை குருவி எங்கள் ஜாதி
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
- ஆடுவோமே பள்ளு பாடுவோமே
- பட்டங்கள் ஆழ்வதும், சட்டங்கள் செய்வதும்
- கொட்டு முரசே கொட்டு முரசே
- எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
- என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
- பெண் விடுதலை வேண்டும்
- கல்வி சிறந்த தமிழ் நாடு
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
- பாரபூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்
- தெய்வம் பலப்பல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்
- பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
- "இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"
- சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திடுவீர்
- இவ்வுலகம் இனியது வான் இனியது
- ஆயிரம் உண்டிங்கு சாதி
- பாருக்குள்ளே நல்ல நாடு நாம்மிருக்கும் பாரதநாடு
- முப்பது கோடி முகமுடையால்
- எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
- பெரிய கடவுள் காக்க வேண்டும்
- காசி நகர்புறம் பேசும் உரை
- ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் - பாரததேசம்
- கும்மியடி பெண்ணே கும்மியடி
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
- நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
- பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே - பெண்ணுரிமை
- மண்ணும் இமயமலை எங்கள் மலையே
- வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
- பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
- என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்
- வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
- வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் - அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
- கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
பாரதிதாசன்
இசையமுது
மழையே மழையே வா வா - நல்ல
வானப் புனலே வா வா - இவ்
வையத் தமுதே வா வா
தகரப் பந்தல் தணதண வென்ன
தாழும் கூரை சளசள வென்ன
நகரப் பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் கும்கண கணகண வென்ன (மழையே மழையே..)
எரிகுளங்கள் வழியும்படி, நாடு
எங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி (மழையே மழையே...)
தழையா வெப்பம் தழைக்கவும் மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவார் எல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் (மழையே மழையே.)
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (code-box)
தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- இன்பத்தமிழ்(code-box)
இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள்கூடி
இரையுண்ணும்... - பாரதிதாசன(code-box)
கால்டுவெல்
"தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள - கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்
உலகத்திலேயே மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே - பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்
- வாயுண்ணல் நற்றமிழே! வாழ்ந்துபடல் செந்தமிழ்க்கே!,
- கனிச்சாறு (அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!), எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
- பள்ளிப் பறவைகள் (ஓய்வும் பயனும் - ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ)
ஓய்வும் பயனும்!
ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ
ஓவியம் வரைந்து பழகு!
தூய்மையோ டமைதி சேரும் ! - நன்கு
தோன்றிடும் உள்ள அழகு!
பாக்களும் இயற்றிப் பழகு - நல்ல
பாடலைப் பாடி மகிழ்வாய்!
தாக்குறும் துன்பம் யாவும் - இசைத்
தமிழினில் மாய்ந்து போகும்!
அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ
அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு - உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!
மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்
தீமையும் பொய்யும் களைவாய்!(code-box)
அன்னை மொழியே!
அழகார்ந்த செந்தமிழே!
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
செப்பரிய நின்பெருமைசெந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!(code-box)
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !
- பெருஞ்சித்திரனார்(code-box)
தேவநேயப் பாவாணர்
- தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்.
- மன்னிப்பு உருதுச்சொல்; பொறுத்துக்கொள்க எனத் தமிழில் சொல்லுங்கள்
- எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு
அறிவியல் ஆத்திசூடி
அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு
இயன்றவரை புரிந்துகொள்
ஈடுபாட்டுடன் அணுகு
உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றி தரும்
என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள்
ஐயம் தெளிந்து சொல்
ஒருமித்துச் செயல்படு
ஓய்வற உழை
ஒளடதமாம் அனுபவம்
- நெல்லை சு.முத்து(code-box)
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது.
நா.பார்த்தசாரதி
"திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்" என்று குறிஞ்சிமலர் என்னும் நூலில் நா.பார்த்தசாரதி
அறிஞர் அண்ணா
"களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று"
பெரியார்
"அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்." இது பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா
- பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும்.
- பிறரை மதித்தல் வேண்டும், அது மரியாதை. தன்னைத்தானே மதிப்பதும், தன் மரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளுவதும் சுயமரியாதை.
- கீழ்ச்சாதி-மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக்கொடுமைகள் அகல,எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும்.
- பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.
- பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்கவேண்டும்.
- அறிவு என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும்.
வ.ராமசாமி
"ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" - எழுத்தாளர் வ.ராமசாமி 'மழையும் புயலும்'
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்
"சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும். ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், 'என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா?' என்னும். அரசு கண்ணிற்படும். 'யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண் என்னும். 'வேம்பு. என்நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா' என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்"
சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை
"தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்: குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்! கோலமாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும்; இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும்பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்" என்று சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை., தமிழின்பம்
மு.வரதராசனார்
தம் நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பில், "வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும். அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும். இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்"
ப.ஜீவானந்தம்
"குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்: பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!" என்று தோழர் ப.ஜீவானந்தம்.
கா.நமச்சிவாயர்
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென்
மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய்
ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா
வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி
தோங்குவாய் தண்டமிழ் மொழியே
கண்ணதாசன்
மலர்த்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
அப்துல் ரகுமான்
அந்த இடம்
காற்றே ! வா
உன்னைப் பாடாமல்
இருக்க முடியாது
ஏனெனில்
பாட்டின் மூல ஊற்றே
நீதான்
..............
............
பொய்கையிடம் போனால்
குளிர்ந்து போகிறாய்
பூக்களைத் தொட்டால்
நறுமணத்தோடு வருகிறாய்
புல்லாங்குழலில் புகுந்தால்
இசையாகிவிடுகிறாய்
எங்களிடம்
வந்தால் மட்டுமே
அழுக்காகி விடுகிறாய்
மரங்களின்
ஊமை நாவுகள்
உன்னிடம் மட்டுமே
பேசுகின்றன.
கடல் அலைகள்
உன்னோடு மட்டுமே
குதித்துக் கும்மாளமிடுகின்றன.
வயலின் பச்சைப் பயிர்கள்
நீ வந்தால் மட்டுமே
ஆனந்த நடனம்
ஆடுகின்றன
நீ என்ன குதூகலமா?
கொண்டாட்டமா?
கோலாகலமா?
நெடுநாட்களாகவே
எனக்கொரு சந்தேகம்
விளக்குகளிலிருந்து
பறிக்கும் சுடர்களை
பூக்களிலிருந்து
திருடும் நறுமணத்தை
வீணையிலிருந்து
கவர்ந்த இசையை
எங்கே கொண்டு போய்
ஒளித்து வைக்கிறாய்?
திருவருட் பிரகாச வள்ளலார் பாடல்கள் - மேற்கோள்கள்
- 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்'
- “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்"
- "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்'
- “பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி"
- 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'
- அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்"
- அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்துஇருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த
- கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக - ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் - எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்குஏவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
- திருவருட்பா(code-box)
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:
- தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
- குருவை வணங்கக் கூசி நிற்காதே.
- வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
- மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
- நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே.
- பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
- ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
- பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
- இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
- தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
தாராபாரதி
திண்ணையை இடித்துத் தெருவாக்கு!
உட்கார் நண்பா, நலந்தானா? - நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டு விரல்நீ சுருங்குவதா? உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
'புல்லாய்ப் பிறந்தேன் நானென்று' - நீ
புலம்ப வேண்டாம்; நெல்கூட
புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் - அது
பூமியின் பசியைப் போக்கவில்லை ?
'கடலில் நான்ஒரு துளி'பென்று - நீ
கரைந்து போவதில் பயனென்ன?
'கடலில் நான்ஒரு முத்தெ'ன்று நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு!
வந்தது யாருக்கும் தெரியாது - நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது;
சந்ததி கூட மறந்துவிடும் - உன்
சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?
திண்ணை தானா உள்தேசம்? - உன்
தெருவொன் றேயா உன்னுலகம்,
திண்ணையை இடித்துத் தெருவாக்கு - உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை! - அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
இவர்களை விஞ்சிட என்னதடை ?
பூமிப் பந்து என்னவிலை? - உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம் - வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!
- திண்ணையை இடித்துத் தெருவாக்கு(code-box)
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!
தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு என்கிற மேலாடை! ...(புதுமைகள்)
காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க.....(புதுமைகள்)
கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம்கேட்கும்!......(புதுமைகள்)
புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்!...(புதுமைகள்)
அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!......(புதுமைகள்)
- பாரதம் அன்றைய நாற்றங்கால்(code-box)
‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி (செய்யும்...)
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம். (செய்யும்...)
காயும் ஒருநாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நளவாகும்
காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் நினைவும் நிலையாகும் - உடல்
வாடினாலும் பசி மீறினாலும் - வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம். (செய்யும்.....)
- செய்யும் தொழிலே தெய்வம்(code-box)
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே- நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது.
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்
- துன்பம் வெல்லும் கல்வி(code-box)
பசும்பொன் முத்துராமலிங்கர்
சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங் கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மிகத்திற்கும் இல்லை.
வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்.
பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.
மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுகிறார்.
க.சச்சிதானந்தன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
முக்கிய மேற்கோள்கள்
தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல்.
டாக்டர் கிரௌல், தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார்.
கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!
பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!
- டாக்டர் சலீம் அலி(code-box)
தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
- காசி ஆனந்தன்(code-box)
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி
ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
- வாணிதாசன்(code-box)
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்: பரிவு வேண்டும்:!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும். எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!- கவிஞர் அறிவுமதி(code-box)
இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு"
- அம்சப்பிரியா
முடியரசன்
கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்
- நானிலம் படைத்தவன்(code-box)
தாயுமானவர்
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே!"
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"
- பராபரக் கண்ணி(code-box)
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
நோய்க்கு மருந்து இலக்கியம்
ருஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதேவ்.
நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே
நான் இறந்து விடுவேன்
TNPSC previous year questions and answers
1. "நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்" என்றவர்
ரசூல் கம்சதேவ்.
2. "நோய்க்கு மருந்து இலக்கியம் " என்றவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
3. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்றவர்
தாயுமானவர்
4. "கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி" என்பது யாருடைய கூற்று
முடியரசன்
5. "வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி" என்றவர்
வாணிதாசன்
டாக்டர் சலீம் அலி
7. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" என்றவர்
காசி ஆனந்தன்
8. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்
கால்டுவெல்
9. "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது" என்று மொழிந்து இன்புற்றவர்
டாக்டர் கிரௌல்,
10. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறவர்
மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்
11. "சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மிகத்திற்கும் இல்லை" என்றவர்
பசும்பொன் முத்துராமலிங்கர்
12. "செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் " என்றவர்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
13. "சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்" என்றவர்
வள்ளலார்
14. "பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு" என்றவர்
பசும்பொன் முத்துராமலிங்கர்
TNPSC previous year questions and answers
1. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுகிறவர்
பசும்பொன் முத்துராமலிங்கர்
2. "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்றவர்
க.சச்சிதானந்தன்
3. "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்
வள்ளலார்
4. "வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என்றவர்
பசும்பொன் முத்துராமலிங்கர்
5. "குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்: பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்" என்றவர்
ப.ஜீவானந்தம்
6. "மலர்த்தும் மலராத பாதிமலர் போல வளரும் விழி வண்ணமே" என்றவர்
கண்ணதாசன்
7. "அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்துஇருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த" என்றவர்
வள்ளலார்
8. "சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும். ஆலமர நிழலில் அமர்வேன்" என்றவர்
திரு.வி.கலியாணசுந்தரனார்
9. "பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்" என்றவர்
பெரியார்
10. "புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்றவர்
வ.ராமசாமி
11. "பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்." என்றவர்
அறிஞர் அண்ணா
12. "விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது" என்றவர்
இரா.இளங்குமரனார்
TNPSC previous year questions and answers
1. "இந்தியாதான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மைதான் என் நன்மை" என்றவர்
மகாகவி பாரதியார்
2. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" என்றவர்
தேவநேயப் பாவாணர்
3. "காயும் ஒருநாள் கனியாகும் - நம் கனவும் ஒருநாள் நனவாகும் " என்பது யாருடைய கூற்று
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
4. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது!" என்றவர்
தாராபாரதி
5. "வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே" என்றவர்
வள்ளலார்
6. "பூமிப் பந்து என்னவிலை? - உன் புகழைத் தந்து வாங்கும்விலை! என்று கூறியவர்
தாராபாரதி
7. "மன்னிப்பு உருதுச்சொல்; பொறுத்துக்கொள்க எனத் தமிழில் சொல்லுங்கள்" என்றவர்
தேவநேயப் பாவாணர்
8. "செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்" என்று கூறியவர்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
9. "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" என்று கூறியவர்வள்ளலார்
10."அறிவு என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும்" என்றவர்
பெரியார்
11. "பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி" என்பது யாருடைய கூற்று
வள்ளலார்
12."பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்றவர்
பாரதியார்
13. "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்றவர்
தேவநேயப் பாவாணர்
Please share your valuable comments