தாயுமானவர்

அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவற்றை நாமும் பின்பற்றுவோம் வாழ்வை வளமாக்குவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

தாயுமானவர் ஆசிரியர் குறிப்பு

திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் தாயுமானவர்.


பராபரக் கண்ணி பாடல்கள் விளக்கம் 

தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் 

செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே!"


அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!


 எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"

- தாயுமானவர்(code-box)


சொல்லும் பொருளும்

தண்டருள் - குளிர்ந்த கருணை 

கூர் - மிகுதி

செம்மையருக்கு - சான்றோருக்கு 

பராபரமே- மேலான பொருளே

ஏவல்- தொண்டு 

எய்தும்- கிடைக்கும்

பணி- தொண்டு

எல்லாரும்- எல்லா மக்களும்

அல்லாமல் - அதைத்தவிர

பாடலின் பொருள்

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். 

அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

நூல் வெளி

இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். 

இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் 'பராபரக் கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன.

'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.(alert-success)

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்  பகுதிக்காகப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - பராபரக் கண்ணி மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தம்முயிர் 

ஆ) தமதுயிர் 

இ) தம்உயிர் 

ஈ) தம்முஉயிர்

2.இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் . 

அ) இன்புற்றிருக்க 

ஆ)இன்புறுறிருக்க 

இ) இன்புற்றுஇருக்க 

ஈ) இன்புறு இருக்க

3. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) தானெ + என்று 

ஆ) தான்+ என்று

இ) தா + னென்று 

ஈ) தான் + னென்று

4. 'சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்

அ) அழிவு 

ஆ) துன்பம் 

இ) சுறுசுறுப்பு 

ஈ) சோகம்

நயம் அறிக 

பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை

தம்உயிர்போல் - தண்டருள்கூர்

எவ்வுயிரும்- என்று 

இன்புற்று - இருக்க

எதுகை

தம்உயிர்போல் - செம்மையருக்கு

அன்பர்பணி- இன்பநிலை

எல்லாரும்- அல்லாமல்

குறுவினா

1. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்? 

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். 

2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?

அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

2. தாயுமானவர் ஆற்றிய பணி?

திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் தாயுமானவர்.

சிறுவினா

பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை? 

பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். 

அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

TNPSC previous year question 

1. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது 

தாயுமானவர் பாடல்கள்

2. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்று கூறியவர்

தாயுமானவர்

3. தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தார்?

விசயரகுநாத சொக்கலிங்கர் 

4. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

தண்டருள் - குளிர்ந்த கருணை 

பணி- தொண்டு

கூர் - மிகுதி

பராபரமே- மேலான பொருளே

5. 'கண்ணி' என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல்வகை

இரண்டு

6. ....... யை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர் தாயுமானவர்

திருச்சி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad