கலீல் கிப்ரான்

Top Post Ad

 இலக்கியங்கள் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன. கவிஞர்கள் வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளைக் கூறியுள்ளனர். அத்தகைய சிந்தனைகளைக் கூறும் கவிஞர்கள் உலகெங்கும் உள்ளனர்.அயல்நாட்டுக் கவிஞர் ஒருவரின் சிந்தனைகளை அறிவோம் வாருங்கள்.

நீங்கள் நல்லவர்

வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது

நேற்றுடன் ஒத்துப் போகாது

கொடுப்பவரின் பரிசுடன்

அவருக்குச் சமமாக எழுங்கள் 

சிறகுகளின் மீது எழுவது போல

உழைக்கும்போது நீங்கள்

புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் 

அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை

ஓர் இசையாக மாற்றி விடுகிறது

உங்களுக்குள் இருக்கும் 

நன்மையைப் பற்றித்தான்

நான் பேச முடியும்

தீமையைப் பற்றியல்ல

உங்கள்சுயத்துடன்

நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது 

நீங்கள் நல்லவர்

என்னைப்போல் இரு

பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம்

முழுசாய்க்கொடு என்று

பழம் வேரைப் பார்த்து

நிச்சயமாகச் சொல்லாது 

கொடுப்பது பழத்தின் இயல்பு

பெறுவது வேரின் இயல்பு

உங்கள் பேச்சின் போது

நீங்கள் விழிப்புணர்ச்சியுடன்

இருப்பது நல்லது

உறுதியாகக் கால்பதித்து

உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில்  

நீங்கள் நல்லவர்

- கலீல் கிப்ரான்


சொல்லும் பொருளும்

சுயம்- தனித்தன்மை

உள்ளீடுகள் - உள்ளே இருப்பவை

நூல் வெளி

கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - நீங்கள் நல்லவர் மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரிசு பெறும்போது நம் மனநிலை.......ஆக இருக்கும்.

அ) சோர்வு 

இ) மகிழ்ச்சி

அ) கவலை

ஆ)துன்பம்

2. வாழ்வில் உயர கடினமாக.........வேண்டும். 

அ) பேச

இ) நடக்க

ஆ) சிரிக்க

ஈ) உழைக்க

குறுவினா

1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை

கொடுப்பது பழத்தின் இயல்பு

பெறுவது வேரின் இயல்பு

2. உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?

உழைக்கும்போது நாம் புல்லாங் குழலாகி விடுகிறோம்.


Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.