கண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு TNPSC

உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும். இவ்வுண்மைகளை கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் வழி அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

கண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு TNPSC 

இயற்பெயர்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.

பிறந்த ஊர்

சிறுகூடல்பட்டி - சிவகங்கை மாவட்டம் 

பெற்றோர்

சாத்தப்பன் - விசாலாட்சி

காலம்

24-6-1927 - 17-10-1981

சிறப்புப் பெயர்கள்

இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். 

  • காரைமுத்துப் புலவர், 
  • வணங்காமுடி, 
  • பார்வதி நாதன்,
  • ஆரோக்கியசாமி, 
  • கனகப் பிரியன்(கமகப்பிரியா)

ஆகிய புனைப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

சிறப்புகள்

இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

  • காவியங்கள், 
  • கவிதைகள், 
  • கட்டுரைகள், 
  • சிறுகதைகள், 
  • நாடகங்கள், 
  • புதினங்கள் 

போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

புதினம் எழுதுவதிலும் வல்லவர். 

திரையிசைப் பாடல்களில் நிகரற்ற புகழ்பெற்றவர்.

இதழ்கள் 

  • திருமகள், 
  • தென்றல், 
  • தென்றல் திரை,
  • சண்டமாருதம்,
  • தமிழ் மலர்,
  • முல்லை,
  • கண்ணதாசன், 
  • கணையாழி,
  • திரை ஒலி 

ஆகிய இதழின் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

கலைத்துறை

இவர் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதி உள்ளார்.

நூல்கள்

  • கண்ணதாசன் கவிதைகள், 
  • அர்த்தமுள்ள இந்து மதம் (கட்டுரைத் தொகுப்பு),
  •  இயேசு காவியம், பாண்டிமாதேவி, மாங்கனி, கல்லக்குடி மகாகாவியம், ஆட்டனத்தி ஆதிமந்தி - காப்பியங்கள்
  • ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா,சிவப்புக்கல் மூக்குத்தி  - புதினம்
  • ராசா தண்டனை - ( கம்பர் - அம்பிகாபதி வரலாறு) - நாடகம்
  • குமரிக்கண்டம், வனவாசகம்
  • சேரமான் காதலி - புதினம் - சாகித்திய அகாடமி விருது 1980
  • தைப்பாவை - சிற்றியக்கியம்
  • கவிதாஞ்சலி - கவிதை
எனப் பல நூல்களை எழுதியுள்ளார். 


இயேசு காவியம் 

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

மலைப்பொழிவு

சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார் - இந்தத் 
தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது
தலைவர்கள் அவர்என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது 
சாந்தம் தான்என்றார் - அது 
மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்
மகத்துவம் பார்என்றார்!

சாதிகளாலும் பேதங்களாலும் 
தள்ளாடும் உலகம் - அது 
தர்மம் ஒன்றை நம்பிய பிறகே 
அடங்கிவிடும் கலகம்!

ஓதும் பொருளாதாரம் தனிலும் 
உன்னத அறம்வேண்டும் - புவி 
உயர்வும் தாழ்வும் இல்லா தான 
வாழ்வினைப் பெறவேண்டும்.

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என
இயேசுபிரான் சொன்னார் - அவர் 
இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர் 
இதுதான் பரிசுஎன்றார்

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் 
வாழ்க்கை பாலைவனம் - அவர் 
தூய மனத்தில் வாழ நினைத்தால் 
எல்லாம் சோலைவனம்!

தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும் 
சண்டை சச்சரவு - தினம் 
தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும் 
பேசும் பொய்யுறவு!

இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி 
எத்தனை வீண்கனவுதினம் - இவை 
இல்லாது அமைதிகள் செய்தால் 
இதயம் மலையளவு!

-கண்ணதாசன்


சொல்லும் பொருளும்

சாந்தம் - அமைதி

மகத்துவம் - சிறப்பு

பேதங்கள் - வேறுபாடுகள்

தாரணி - உலகம்

தத்துவம் - உண்மை

இரக்கம் - கருணை

பாடலின் பொருள்

(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். 

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பியபிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். 

பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.

இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு. 

மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

நூல் வெளி

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்- 2. மரபுக் கவிதை - கண்ணதாசன் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கண்ணதாசன் பற்றிய 10 அடிகள் 

1. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.

2. பிறந்த ஊர் - சிறுகூடல்பட்டி - சிவகங்கை மாவட்டம் 

3. பெற்றோர் - சாத்தப்பன் - விசாலாட்சி

4. வாழ்ந்த காலம் 24-6-1927 - 17-10-1981

5. சிறப்புப் பெயர்கள் - கவியரசு, காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியா

6. பணியாற்றிய இதழ்கள் - திருமகள், தென்றல், தென்றல் திரை, சண்டமாருதம், தமிழ் மலர், முல்லை, கண்ணதாசன், கணையாழி, திரை ஒலி

7.  இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

8. சேரமான் காதலி - புதினம் - சாகித்திய அகாடமி விருது 1980

9. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதி உள்ளார்.

10. இயற்றிய நூல்கள் - இயேசு காவியம், பாண்டிமாதேவி, மாங்கனி, கல்லக்குடி மகாகாவியம் , ஆட்டனத்தி ஆதிமந்தி, அர்த்தமுள்ள இந்து மதம், ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா,சிவப்புக்கல் மூக்குத்தி இன்னும் பல


7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise -மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவதாக இயேசுநாதர் கூறுவது

அ) பணம்

ஆ) பொறுமை

இ) புகழ்

ஈ) வீடு


2. சாந்த குணம் உடையவர்கள் முழுவதையும் பெறுவர்.

அ) புத்தகம்

ஆ) செல்வம்

இ) உலகம்

ஈ) துன்பம்


3. 'மலையளவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மலை + யளவு

இ) மலையின் + அளவு

ஆ) மலை + அளவு

ஈ) மலையில் + அளவு


4. 'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தன் + னாடு

இ) தன் + நாடு

ஆ) தன்மை + னாடு

ஈ) தன்மை + நாடு


5. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) இவையில்லாது

ஆ) இவைஇல்லாது

இ) இவயில்லாது

ஈ) இவஇல்லாது


பொருத்துக.

1. சாந்தம் - அமைதி 

2. மகத்துவம் - சிறப்பு 

3. தாரணி - உலகம்

4. இரக்கம் - கருணை


குறுவினா

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. 


2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

உலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது.


3. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.


சிறுவினா

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன 

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். 

இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. 

அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். 

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. 

அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

சிந்தனை வினா

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ,

  • அறவழியைப் பின்பற்றல் 
  •  ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்தல்
  •  பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டுதல் 
  •  ஆசை இல்லாமல் வாழ்தல்
  •  நல்ல உள்ளத்தோடு வாழ்தல் 
  • மனிதர்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்தல்
  • பிறரை துன்புறுத்தாமல் வாழ்தல்
  •  தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பிரிக்காமல் வாழ்தல்
  • அமைதியாக வாழ்ந்தால்
  • போட்டிகள் இல்லாமல்  வாழ்தல்
இவற்றை பின்பற்ற வேண்டும்.

TNPSC previous year questions and answers 

1. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் 

இயேசுகாவியம்

2. கண்ணதாசனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் 

சேரமான் காதலி 

3. கண்ணதாசனின் இயற்பெயர் 

முத்தையா

4. இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். 

கண்ணதாசன்

5. கண்ணதாசனின் புனைப்பெயர்களில் பொருந்தாதது 

காரைமுத்துப் புலவர்

வணங்காமுடி

பார்வதி நாதன்

கனகசாமி

6. கண்ணதாசன் .... இதழின் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்

திருமகள் 

7. கண்ணதாசன் பிறந்த ஊர் 

சிறுகூடல்பட்டி 

8. கண்ணதாசன் குறித்து தவறான கூற்று 

இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். 

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா

கண்ணதாசன் திருமகன் இதழின் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி

9. கண்ணதாசன் நூல்களில் பொருந்தாதது 

அர்த்தமுள்ள இந்து மதம் 

மகா காவியம்

கல்லக்குடி மகாகவியம்  

ஆட்டனத்தி ஆதிமந்தி

10. இயேசுகாவியம் என்ற நூலை எழுதியவர் 

கண்ணதாசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad