"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"
என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம்.
திருவள்ளுவர், திருக்குறள் நூல் குறிப்பு இங்கே (link)
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி தமிழ்நாடு அரசின் 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வாழும் நெறி குறித்த சில திருக்குறள்
வாழ்வியல் குறித்த சில குறள்கள்
பாடத்தலைப்புகள்(toc)
திருக்குறள்
வினைசெயல் வகை
1. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்
பொருள்: வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்திர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.
பொருள்: ஒரு யானையைக்கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அதுபோல ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.
அணி : உவமை அணி
அவை அஞ்சாமை
3. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
பொருள்: தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.
4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.
பொருள்: கற்றவர் முன் தான் கற்றவற்றை மனத்தில் பதியும்படி சொல்லி, அவர்கள் கற்றவற்றையும் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.
நாடு
5. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேராது இயல்வது நாடு
பொருள்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
6. நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளம்தரு நாடு.
பொருள் : பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.
அரண்
7. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்காடும் உடையது அரண்.
பொருள் : தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
8. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்
பொருள் : அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும், செயல் சிறப்பு இல்லாதவரிடத்தில் அது பயனில்லாதது ஆகும்.
பெருமை
9. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்
பொருள் : பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகிய செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
10. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.
பொருள் : உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ..... ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
2. மக்கள் அனைவரும் ... ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
3. 'நாடென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நான் + என்ப
ஆ) நா + டென்ப
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டென்ப
4. கண் +இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
குறுவினா
1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்திர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
ஒரு நாட்டுக்கு தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.
Please share your valuable comments