கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற தாராபாரதி எழுதிய பாடல்கள் சில இங்கே பார்க்கலாம்.
பாடத்தலைப்புகள்(toc)
தாராபாரதி ஆசிரியர் குறிப்பு:
தாராபாரதி இயற்பெயர் : இராதாகிருஷ்ணன்.
சிறப்பு பெயர்கள் : கவிஞாயிறு
நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள், தாராபாரதி கவிதைகள் முதலானவை தாராபாரதி இயற்றிய நூல்களாகும்.
வாழ்ந்த காலம் - 26.02.1947முதல் 13.05.2000வரை
சிறப்புகள்
கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.
ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
.
தாராபாரதி எழுதிய நூல்கள்
- புதிய விடியல்கள்,
- இது எங்கள் கிழக்கு,
- தாராபாரதி கவிதைகள்
- விரல் நுனி வெளிச்சங்கள்
முதலியன தாராபாரதி படைப்புகள்.
தாராபாரதி கவிதைகள்
திண்ணையை இடித்துத் தெருவாக்கு!
உட்கார் நண்பா, நலந்தானா? - நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டு விரல்நீ சுருங்குவதா? உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
'புல்லாய்ப் பிறந்தேன் நானென்று' - நீ
புலம்ப வேண்டாம்; நெல்கூட
புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் - அது
பூமியின் பசியைப் போக்கவில்லை ?
'கடலில் நான்ஒரு துளி'யென்று - நீ
கரைந்து போவதில் பயனென்ன?
'கடலில் நான்ஒரு முத்தெ'ன்று நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு!
வந்தது யாருக்கும் தெரியாது - நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது;
சந்ததி கூட மறந்துவிடும் - உன்
சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?
திண்ணை தானா உன்தேசம்? - உன்
தெருவொன் றேயா உன்னுலகம்,
திண்ணையை இடித்துத் தெருவாக்கு - உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை! - அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
இவர்களை விஞ்சிட என்னதடை ?
பூமிப் பந்து என்னவிலை? - உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம் - வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!
- தாராபாரதி(code-box)
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - திண்ணையை இடித்துத் தெருவாக்கு
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார் ?
அ. துளி
ஆ. முத்து
இ. மீன்
2. இவர்களுள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்
அ. தாராபாரதி
ஆ. மருதகாசி
இ. பசுவய்யா
3. புதிய விடியல்கள் யாருடைய நூல்
அ. தாராபாரதி
ஆ. மருதகாசி
இ. பசுவய்யா
பாரதம் அன்றைய நாற்றங்கால்
நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு. இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு, உடை, மொழி. நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே. தேசிய ஒருமைப்பாட்டைப் போற்றும் தாராபாரதியின் பாடலை அறிவோம் வாருங்கள்.
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!
தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு என்கிற மேலாடை! ...(புதுமைகள்)
காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க.....(புதுமைகள்)
கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம்கேட்கும்!......(புதுமைகள்)
புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்!...(புதுமைகள்)
அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!......(புதுமைகள்)
- தாராபாரதி(code-box)
சொல்லும் பொருளும்
மெய் - உண்மை
தேசம் - நாடு
பாடலின் பொருள்
பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு.
திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது.
காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.
நூல் வெளி
இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - பாரதம் அன்றைய நாற்றங்கால் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம்
இ) திரிகடுகம்
ஆ) திருக்குறள்
ஈ) திருப்பாவை
2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
4.நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை
ஆ) நூலா+டை
இ) நூல்+ லாடை
ஈ) நூலா+ஆடை
5.எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
நயம் அறிக
1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
தேசமிது- வாசலிது
நூலாடை- மேலாடை
மெய்களைப்- மெய்யுணர்வு
அன்னை-அன்னிய
2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
கல்லைக்- கட்டி
மெய்களைப்- மெய்யுணர்வு
அன்னை-அன்னிய
புல்வெளி-புன்னகை
3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
எதிரொலிக்க- இசையமைக்க
பூத்தொடுக்கும்- நலம்கேட்கும்
தேசமிது- வாசலிது
நூலாடை- மேலாடை
குறுவினா
1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள்
- வள்ளுவர்
- காளிதாசர்
- கம்பர்
2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் தாராபாரதி குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம்
இ) திரிகடுகம்
ஆ) திருக்குறள்
ஈ) திருப்பாவை
2. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்
தாராபாரதி
3. தாராபாரதியின் இயற்பெயர்
இராதாகிருஷ்ணன்
4. தாராபாரதியின் சிறப்பு பெயர்
கவிஞாயிறு
5. தாராபாரதி இயற்றிய நூல்களில் பொருந்தாதது
புதிய விடியல்கள்
இது எங்கள் கிழக்கு
விரல் நுனி வெளிச்சங்கள்
தூரத்து வெளிச்சம்
6. "பாரதம் அன்றைய நாற்றங்கால்" என்னும் கவிதையை எழுதியவர்
தாராபாரதி
7. ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்
தாராபாரதி
8. "திண்ணையை இடித்துத் தெருவாக்கு உன் தெருவை மேலும் விரிவாக்கு!" என்னும் கவிதையை எழுதியவர்
தாராபாரதி
9. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது என்று தாராபாரதி குறிப்பிடுகிறார்
அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
11. "பூமிப் பந்து என்னவிலை? - உன் புகழைத் தந்து வாங்கும்விலை" என்னும் கவிதையை எழுதியவர்
தாராபாரதி
12. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார் ?
அ. துளி
ஆ. முத்து
இ. மீன்
13. இவர்களுள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்
அ. தாராபாரதி
ஆ. மருதகாசி
இ. பசுவய்யா
14. புதிய விடியல்கள் யாருடைய நூல்
அ. தாராபாரதி
ஆ. மருதகாசி
இ. பசுவய்யா
15. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது" என்னும் பாடலை எழுதியவர்
தாராபாரதி
16. கம்பனின் அமுதக் கவிதைகளுக்குக் இதன் அலைகள் இசையமைக்கிறது என்று தாராபாரதி கூறுகிறார்
கங்கை
17. கன்னிக் குமரியின் கூந்தலுக்காகக் .... தோட்டம் பூத்தொடுக்கும் என்று தாராபாரதி கூறுகிறார்
காஷ்மீர்
Please share your valuable comments