பிரித்து எழுதுதல் TNPSC எழுத்து இலக்கணம்

Top Post Ad

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : பிரித்து எழுதுதல் என்ற பகுதி வருகிறது.



பிரித்து எழுதுதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் +நா

இ) எம் + தமிழ் + நா

ஈ) எந்தம் + தமிழ் +நா

அலகு I : இலக்கணம் 

எழுத்து: பிரித்து எழுதுதல்

பழந்தமிழ் இலக்கியம் நம் செல்வம். பொருள் உணர்வுக்கு ஏற்பப் பிரித்துப் படிக்கத் தெரியாமல் பழந்தமிழ் இலக்கியத்தின் அருமையை நாம் அறிந்துகொள்ள முடியாது.

பிரித்துப் படிக்கும் திறமையை நாம் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

  • தமக்குரியர் = தமக்கு + ரியர்
  • அன்பீனும் = அன்பு + னும்
  • நிழலருமை = நிழல் + ருமை

பிரித்தபோது வெளிப்பட்ட எழுத்துகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? உ, ஈ, அ ஆகிய மூன்றும் உயிர் எழுத்துகள் அல்லவா ?

பிரிக்கும்போது நடக்கும் மாற்றம் என்ன?

  • தமிழழகு = தமிழ் + அழகு
  • மலரடி = மலர் + அடி
  • தேனருவி = தேன் + அருவி

மாற்றம்: உயிர் எழுத்துத் தனியே பிரிந்தது.

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தமிழ்

  • அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத; 
  • வன்பாற்கண் - வன்பால் + கண் - பாலை நிலத்தில். 
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல; 
  • நாய்க்கால் = நாய் + கால்
  • நன்கணியர் = நன்கு + அணியர்
  • நட்பென்னாம் = நட்பு + என்னாம்
  • வேறில்லை = வேறு + இல்லை  
  • தொழிலனைத்தும் = தொழில் + அனைத்தும்
  • இரண்டொழிய = இரண்டு + ஒழிய

6ம் வகுப்பு தமிழ்

1 . 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கண் + அறி

ஆ) கண்டு + அறி

இ) கண்ட + அறி

ஈ) கண் + டறி


2. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஓய்வு + அற 

ஆ) ஓய் + அற

இ) ஓய் + வற

ஈ) ஓய்வு + வற


3. 'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) வெண் குடை

ஆ) வெண்மை + குடை

இ) வெம் + குடை

ஈ) வெம்மை + குடை


4. 'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) பொன் + கோட்டு

ஆ) பொற்+கோட்டு

இ) பொண்+கோட்டு

ஈ) பொற்கோ + இட்டு


5. 'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) தட்பம் + வெப்பம்

ஆ) தட்ப + வெப்பம்

இ) தட் + வெப்பம்

ஈ) தட்பு + வெப்பம்


6. 'வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வேதி + யுரங்கள்

ஆ) வேதி + உரங்கள்

இ) வேத் + உரங்கள்

ஈ) வேதியு + ரங்கள் 


7. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பொருளு+டைமை

ஆ) பொரு+ளுடைமை

இ)பொருள் +உடைமை

ஈ) பொருள்+ளுடைமை


8. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) நன்+மாடங்கள்

இ) நன்மை + மாடங்கள்

ஆ) நற்+மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்


9. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நிலம் + இடையே 

ஆ) நிலத்தின் + இடையே

இ) நிலத்து + இடையே

ஈ) நிலத் + திடையே


10. 'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ) இடன் + புறம் 

ஆ) இடது + புறம் 

இ) இட + புறம்

 ஈ) இடப் + புறம்


11. 'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

அ) சீர் + இளமை 

ஆ) சீர்மை + இளமை 

இ) சீரி + இளமை 

ஈ) சீற் + இளமை


12. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) செந் + தமிழ் 

ஆ) செம் + தமிழ் 

இ) சென்மை + தமிழ் 

ஈ) செம்மை + தமிழ் 


13. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) பொய் + அகற்றும்

ஆ) பொய்+கற்றும்

இ) பொய்ய + கற்றும் 

ஈ) பொய் + யகற்றும்


14. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) அமுது + தென்று 

ஆ) அமுது + என்று 

இ) அமுது + ஒன்று 

ஈ) அமு + தென்று


15. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர் 

ஆ) செம் + பயிர்

இ) செமை + பயிர்

ஈ) செம்பு + பயிர்


16. 'நின்றிருந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. 

அ) நின் + றிருந்த 

ஆ) நின்று + இருந்த 

இ) நின்றி + இருந்த 

ஈ) நின்றி + ருந்த


17. 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அவ்வு + ருவம் 

ஆ) அ +உருவம் 

இ) அவ் + வுருவம்

 ஈ) அ +வுருவம் 


18. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன்றி+யறிதல் 

ஆ) நன்றி+அறிதல் 

இ) நன்று+அறிதல் 

ஈ) நன்று+யறிதல்


19. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

ஆ) பொறை+யுடைமை

அ) பொறுமை+உடைமை 

இ) பொறு+யுடைமை

ஈ) பொறை + உடைமை


20. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாட்டி+சைத்து

ஆ) பாட்டி+இசைத்து

இ) பாட்டு+இசைத்து 

ஈ) பாட்டு+சைத்து


21. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கண்+உறங்கு 

இ) கண்+ றங்கு

ஆ) கண்ணு+உறங்கு

ஈ) கண்ணு+றங்கு


22. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) போகி+பண்டிகை

ஆ) போ+பண்டிகை

இ) போகு +பண்டிகை

ஈ) போகிப்+பண்டிகை


23. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---

அ) நா + னிலம்

ஆ) நான்கு + நிலம்

இ) நா + நிலம்

ஈ) நான் + நிலம்


24. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) நூல்+ஆடை 

ஆ) நூலா+டை 

இ) நூல்+ லாடை 

ஈ) நூலா+ஆடை


25. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) தானெ + என்று 

ஆ) தான்+ என்று

இ) தா + னென்று 

ஈ) தான் + னென்று


26. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எளிது + தாகும் 

ஆ) எளி + தாகும்

இ) எளிது + ஆகும்

ஈ) எளிதா + ஆகும்


27. 'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) பாலை+யெல்லாம் 

ஆ) பாலை+எல்லாம் 

இ) பாலை+எலாம் 

ஈ) பா+எல்லாம்

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.