கலித்தொகை - நல்லந்துவனார்

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும். எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது; இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது.

பாடத்தலைப்புகள்(toc)

கலித்தொகை நூல் குறிப்பு : 

கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன. 

கலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும் பிரிவுகளை உடையது. 

நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி, நெய்தற்கலியாகும். 

கலித்தொகை ஆசிரியர் குறிப்பு : 

நல்லந்துவனார் சங்க காலத்தவர். இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 

இவர், நெய்தல் கலியில் முப்பத்துமூன்று பாடல்களைப் பாடியுள்ளார். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.

 இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளவே, இதனைத் தமிழ்ச்சான்றோர் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' எனச் சிறப்பித்துக் கூறுகின்றனர்.

கலித்தொகை பாடல்கள் விளக்கம்

ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.

- நல்லந்துவனார் (code-box)

பொருள்: 

  • இல்வாழ்வென்பது வருந்தி வந்தோர்க்கு உதவுதல். 
  • பாதுகாப்பதென்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். 
  • பண்பெனப்படுவது சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல். 
  • அன்பெனப்படுவது சுற்றம் தழுவி வாழ்தல். 
  • அறிவெனப்படுவது அறிவிலார் சொல் பொறுத்தல். 
  • நெருக்கம் எனப்படுவது கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல். 
  • நிறைவு எனப்படுவது பிறர் அறியாது மறைபொருள் காத்தல். 
  • நீதிமுறைமை எனப்படுவது ஒருபால் கோடாது ஒறுத்தல். 
  • பொறுமை எனப்படுவது இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளல்.

சொற்பொருள்: 

  • கிளை - சுற்றம்; 
  • நோன்றல் - பொறுத்தல்.

இலக்கணக்குறிப்பு 

ஒழுகுதல், நோன்றல், பொறுத்தல் - தொழிற்பெயர்கள்.

பகுபத உறுப்பிலக்கணம் : 

பகுபத உறுப்புகள் விளக்கம்

  • ஆற்றுதல் - ஆற்று + தல்

ஆற்று - பகுதி, 

தல் - தொழிற்பெயர் விகுதி; 

  • புணர்ந்தார் - புணர் + த் ( ந் ) + த் + ஆர்

புணர் - பகுதி, 

த் - சந்தி, 

த் - ந் ஆனது விகாரம், 

த் - இறந்தகால இடைநிலை, 

ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி; 

  • பிரியாமை - பிரி + ய் + ஆ + மை

பிரி - பகுதி, 

ய் - சந்தி, 

ஆ - எதிர்மறை இடைநிலை, 

மை - தொழிற்பெயர் விகுதி; 

  • அறிந்து - அறி + த் (ந்) + த் + உ

அறி - பகுதி, 

த் - சந்தி, 

த் - ந் ஆனது விகாரம், 

த் - இறந்தகால இடைநிலை, 

உ - வினையெச்ச விகுதி; 

  • ஒழுகுதல் - ஒழுகு + தல்

ஒழுகு - பகுதி, 

தல்-தொழிற் பெயர் விகுதி; 

  • அறியாமை - அறி + ய் + ஆ + மை

அறி - பகுதி, 

ய் - சந்தி, 

ஆ - எதிர்மறை இடைநிலை,

மை - விகுதி.

பிரித்தறிதல் : 

அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது;

 பண்பெனப்படுவது - பண்பு + எனப்படுவது.


கலித்தொகை குறிப்பு எழுதுக

இலக்கியத்தில் இடம்பெறும் பொருளானது அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் இரு வகைப்படும். எட்டுத்தொகை என்பதனுள் அகப்பொருள் பற்றிய நூல்களும் உண்டு: புறப்பொருள் பற்றிய நூல்களும் உண்டு. 
எட்டாக உள்ள இந்த நூல்கள் எட்டுத்தொகை நூல்களைத் பின்வரும் வெண்பா குறிக்கின்றது. 

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

 கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று 

இத்திறத்த எட்டுத் தொகை(code-box)


இவற்றுள் ஒன்றாகிய கலித்தொகை 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்படுதலால், அகப்பொருட் செய்திகளைப் புலப்படுத்துவதில் இதற்குள்ள தனித்திறம் நன்கு புலனாகும். இதன்கண் குறிஞ்சி, மருதம், முல்லை. நெய்தல், பாலை என்னும் ஐந்து திணை சார்ந்த அகப்பொருட் பாடல்கள் உள்ளன.

கலித்தொகை பாடல்கள் எத்தனை?

  1. பாலைக்குரிய உரிப்பொருள் : பிரிதலும் பிரிதல் நிமித்தமும். 
  2. குறிஞ்சிற்குரிய உரிப்பொருள் : கூடலும் கூடல் நிமித்தமும். 
  3. மருதத்திற்குரிய உரிப்பொருள் : ஊடலும் ஊடல் நிமித்தமும். 
  4. முல்லைக்குரிய உரிப்பொருள் : இருத்தலும் இருத்தல் நிமித்தமும். 
  5. நெய்தலுக்குரிய உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும். 

இவ்வைந்து திணைகளைப் பற்றிய நூற்றைம்பது பாடல்கள் கலித்தொகையில் உள்ளன.

கலித்தொகை பாடல்களின் ஆசிரியர்கள்

  • பாலைத்திணைப் பாடல்களைச் சேரமான் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ' பாடினார். இதில் 35 பாடல்களும் 2 இல் இருந்து 37 வரை உள்ளது. 
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைக் கபிலர் பாடியுள்ளார். இதில் 29 பாடல்களும் 37 இல் இருந்து 65 வரை உள்ளது. 
  • மருதத் திணைப் பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார். இதில் 35 பாடல்களும் 66 இல் இருந்து 100 வரை உள்ளது. 
  • முல்லைத் திணைப் பாடல்களைச் சோழன் நல்லுருத்திரன் பாடியுள்ளார். இதில் 17 பாடல்களும் 101 இல் இருந்து 117 வரை உள்ளது. 
  • நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனார் பாடியுள்ளார். கடவுள் வாழ்த்தையும் பாடல் 1 இவரே பாடியுள்ளார். இதில் 33 பாடல்களும் 118 இல் இருந்து 150 வரை உள்ளது. 

கலித்தொகை கடவுள் வாழ்த்து பாடியவர்

நெய்தல் திணைப் பாடல்களை பாடிய நல்லந்துவனார், கடவுள் வாழ்த்தையும் பாடல் 1 இவரே பாடியுள்ளார்.

கலித்தொகை சிறப்புகள்

இப்பாடல்கள் அனைத்தும் 'கலிப்பா' வில் உள்ளதால் 'கலித்தொகை' என இந்நூலுக்குப் பெயர் உண்டாயிற்று.
  • இப்பாக்கள் துள்ளலோசை மிக்கவை; 
  • அகச்சுவை நிரம்பியவை: 
  • நாடகப் பாங்கில் அமைந்தவை.

கலித்தொகை உரை

  • இந்நூலுக்கு நச்சினார்க்கினயர் உரை எழுதியுள்ளார். 

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம்  கீழ் 4. கலித்தொகை என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Explained Here - விவரிக்கப்பட்டுள்ளவை

  • Kalithogai padal porul
  • Kalithogai in tamil, 
  • Kalithogai tnpsc
  • Kalithogai padal vilakkam
  • kalithogai padal vilakkam
  • kalithogai kurippu
  • kalithogai mullai kali

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

அ) கலித்தொகை நூல்களில் ஒன்று.

1. பத்துப்பாட்டு 2. எட்டுத்தொகை 3. பதினெண்கீழ்க்கணக்கு

ஆ) நெய்தல்கலியைப் பாடியவர்

1. ஓரம்போகியார் 2. கபிலர் 3. நல்லந்துவனார்

இ) கலிப்பா ........... ஓசையைக் கொண்டது

1. துள்ளல்  2. செப்பலோசை 3. அகவல் ஓசை

ஈ) 'போற்றாரைப் பொறுத்தல்' என்பது

1. பொறை  2. அன்பு 3. நிறை

பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

பண்பு - பாடறிந்து ஒழுகல்

அறிவு -   பேதையார் சொல் நோன்றல்  

செறிவு -கூறியது மறாஅமை 

அன்பு - தன்கிளை செறாஅமை

முறை - கண்ணோடாது உயிர்வௌவல்

குறுவினாக்கள்

1. ஆற்றுதல் என்பது யாது?

ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல். அதாவது இல்வாழ்வென்பது வருந்தி வந்தோர்க்கு உதவுதல். 

2. பண்பு எனப்படுவது யாது?

பண்பு எனப்படுவது  சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல். 

3. அறிவு எனப்படுவது யாது?

அறிவு எனப்படுவது அறிவிலார் சொல் பொறுத்தல். 

TNPSC previous year questions and answers 

1. கலித்தொகை ....... நூல்களில் ஒன்று.

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

பதினெண்கீழ்க்கணக்கு

2. நெய்தல்கலியைப் பாடியவர்

ஓரம்போகியார் 

கபிலர்

 நல்லந்துவனார்

3. கலிப்பா ........... ஓசையைக் கொண்டது

 துள்ளல் 

 செப்பலோசை 

 அகவல் ஓசை

4.  'போற்றாரைப் பொறுத்தல் ..........' 

பொறை 

அன்பு 

நிறை

5. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

பண்பு - பாடறிந்து ஒழுகல்

அறிவு - பேதையார் சொல் நோன்றல்  

செறிவு -கூறியது மறாஅமை 

அன்பு - தன்கிளை செறாஅமை

6. கலித்தொகையில் தவறான இணை 

பாலைத்திணை - பெருங்கடுங்கோ

குறிஞ்சித்திணை -  கபிலர் 

மருதத் திணை -  மருதனிளநாகனார் 

முல்லைத் திணை - நல்லந்துவனார் (சரி - சோழன் நல்லுருத்திரன்)

7. கற்றறிந்தார் ஏத்தும் .......

கலி

8. கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து உள்ள பாடல்கள் எண்ணிக்கை 

நூற்றைம்பது

9. நல்லந்துவனார் குறித்து சரியான கருத்துகள் 

நல்லந்துவனார் சங்க காலத்தவர். 

இவர், நெய்தல் கலியில் முப்பத்துமூன்று பாடல்களைப் பாடியுள்ளார். 

கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே.

அனைத்தும் சரி

10. "அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்" என்ற நூல்

கலித்தொகை


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad