நந்திக் கலம்பகம்

கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியத்தில் ஒன்று. நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, நந்திக் கலம்பகம்  திகழ்கிறது. 

பாடத்தலைப்புகள்(toc)

நந்திமன்னன் வீரம் - நந்திக்கலம்பகம் பாடல் விளக்கம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற் 

கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு 

காவிரி வளநாடா 

நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்

இவையிவை யுடைநந்தி 

மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் 

வானகம் ஆள்வாரே. (code-box)

பொருள் : 

ஊர்தோறும் மேகங்கள் சொரிகின்ற மணிகளையும், மூங்கில்கள் தந்த பெரிய முத்துகளையும் கொடுத்து, அவ்வூர்களில் உள்ள நெற்கதிரைத் தொகுத்துக்கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டையுடையவனே! 

செல்வத்தைத் தருகின்ற குடையும், நிலமகள் உரிமையும் ஆகிய இவற்றையுடைய நந்திமன்னனே! 

அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளை வணங்காதவராகித் தேவர் உலகத்தை ஆள்பவராவர்.

சொற்பொருள் : 

புயல் - மேகம்; 

பணை – மூங்கில்; 

பகரா - கொடுத்து; 

பொருது - மோதி

நிதி - செல்வம்; 

புனல் - நீர்; 

கவிகை - குடை; 

வானகம் - தேவருலகம்.

இலக்கணக்குறிப்பு : 

பொழிதருமணி, பணைதருபருமணி, வருபுனல், நிதிதருகவிகை - வினைத்தொகைகள்

இவை இவை  - அடுக்குத்தொடர்.

திணை : 

இப்பாடல், நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறுவதால் பாடாண் திணையாகும்.

நந்திக் கலம்பகம் ஆசிரியர் குறிப்பு : 

தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப்பெறவில்லை. 

நந்திக் கலம்பகம் நூற்குறிப்பு :

கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியத்தில் ஒன்று. 

நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது. 

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. 

இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. 

கலம்பக நூல்களில் நந்திக்கலம்பகம் முதல் நூல் என்பர். (alert-passed)

கலம்பகம் பெயர்க்காரணம் தருக

கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.

கலம்பகம் பிரித்து எழுதுக

  • கலம் + பகம் = கலம்பகம். 
  • கலம் - பன்னிரண்டு; 
  • பகம் - ஆறு.

கலம்பகம் உறுப்புகள் யாவை

பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால்,

  1. புயவகுப்பு, 
  2. அம்மானை, 
  3. கார், 
  4. ஊசல், 
  5. இரங்கல், 
  6. மறம், 
  7. தழை, 
  8. தவம், 
  9. சித்து, 
  10. பாண், 
  11. கைக்கிளை, 
  12. தூது,
  13.  வண்டு, 
  14. குறம், 
  15. காலம், 
  16. மாதங்கி, 
  17. களி, 
  18. சம்பிரதம் 

கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர். (alert-success)


 

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம்  கீழ் 7. நந்திக்கலம்பகம் என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Explained Here - விவரிக்கப்பட்டுள்ளவை

  • nandhikalambagam padal porul
  • nandhikalambagam in tamil, 
  • nandhikalambagam tnpsc 

10ம் வகுப்பு தமிழ் வினா விடை - 10th standard tamil book back exercise 

கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) கலம்பகம் ...............வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. 

1. தெண்ணூற்றாறு

2. பதினெட்டு

3. பத்து

ஆ) பணை என்னும் சொல்லின் பொருள்

1. அரசு

2. ஆல்

3. மூங்கில்

இ) பதினெட்டு உறுப்புகளில் இல்லாதது

  1. தூது,
  2.  வண்டு, 
  3. குலம்

பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

புயல் - மேகம்; 

பணை – மூங்கில்;

பொருது - மோதி

புனல் - நீர்; 

கவிகை - குடை; 

குறுவினாக்கள்

1. கலம்பக நூல்களுள் முதல்நூல் எது?

கலம்பக நூல்களில் நந்திக்கலம்பகம் முதல் நூல் என்பர்.

2. கலம்பக உறுப்புகள் நான்கனை எழுதுக.

புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல்.

3. நந்திக்கலம்பகம் யார்மீது பாடப்பெற்றது? 

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad